பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Discuss here on பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் within the Spirituality forums, part of the Home forum; கடமையை சரிவர செய்யுங்கள் * அறிவில் தெளிவும், ஓயாமல் கடமைகளைச் செய்யும் குணமும் கொண்டிருந்தால் எந்தச் செயலும் நல்லதாகவே முடியும். * நம் அறிவில் தெய்வத்தன்மை காணப் ...
-
26th Nov 2011, 12:39 PM #1
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
கடமையை சரிவர செய்யுங்கள்
* அறிவில் தெளிவும், ஓயாமல் கடமைகளைச் செய்யும் குணமும் கொண்டிருந்தால் எந்தச் செயலும் நல்லதாகவே முடியும்.
* நம் அறிவில் தெய்வத்தன்மை காணப் படுகிறது. எனவே, நமது செயல்களிலும் தெய்வத்தன்மை விளங்குவதற்குரிய வழி வகையைச் செய்ய வேண்டும்.
* உலகம் நமது அறிவிற்கு அடங்காத ஒன்றல்ல. சித்தம் (மனம்) நமக்கு வசமாகும்போது, உலகமும் நமக்கு வசமாகிவிடும்.
* இடைவிடாமல் கடமைகளைச் செய்யுங்கள். பெருமைப்படும்படி வாழுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்து கொண்டால், உற்சாகம் பிறக்கும். மனத்தளர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது.
* உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு நரக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அகங்காரம் அகன்று விட்டால், மனித ஜாதி தெய்வ நிலையைப் பெறலாம்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:40 PM #2
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
கடவுளே அறிவின் வடிவம்
* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான்.
* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.
* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள்.
* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:41 PM #3
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்
மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் மனப்பிராந்தி. காதல் என்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்திற்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது.
சாவித்திரியும், சத்தியவானும் (திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே...அதன் பெயர் தான் உண்மைக் காதல். அதுஅழியாத நித்திய வஸ்து.
இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப்போகாது.
அது தெய்வீகமானது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும்.
பொருளில்லாவிடினும், கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன் முக்தி பதமெய்தலாம். ஆனால், காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.
உயிருக்கும், மனதுக்கும், ஆத்மாவுக்கும் ஒருசேர இன்பமளிப்பதால் காதலின்பம் இவ்வுலக இன்பங்கள் அனைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஒரு பெண் ஒரு ஆணையோ மனம் மாறாமல், உண்மையிலேயே காதல் செய்யும் வழக்கம் ஏற்படுமாயின், காதல் இன்பம் எத்தனை சிறந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பம் சாலவும் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியும் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி, மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும்.
காதல் கோயில் போன்றது. இது மிகவும் தூய்மை கொண்ட கோயில். ஒருமுறை அங்கு போய்ப் பாவம் செய்து வெளியேறியவன், மீண்டும் அதனுள் புகுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டும்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:42 PM #4
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்
ஒன்று கூடிக் கடவுளை வணங்கச் செல்லும் போது, மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.
சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி.
பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும்.
சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக வந்து முண்டிருக்கிறது.
சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.
சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். ஒவ்வொருவனுக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும், பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன. ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.
விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இல்வுலகத்தை ஆளுகிறது. இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. பயம், சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தி ஏற்படும்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:43 PM #5
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
பெண்களைத் திட்டாதீர்கள்
குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலையிராவிடில், தேசத்தில் விடுதலை இராது.
குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்வீக குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக் கொண்டு பொறுமையுடன், கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அவ்வாறின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே, அவள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் ஆண் மக்கள் நாளுக்கு நாள் பொங்கிப் பொங்கித் துயர்பட்டுத் துயர்பட்டு மடிவார்.
தான் ஒரு குற்றஞ் செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான். அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான். அல்லதுபொய்க் காரணங்கள் சொல்லி, அது குற்றமில்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்ய வேண்டும். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை நீக்கும் வழி சத்சங்கமும்; தைரியமும். பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும்"If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:45 PM #6
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
தெய்வத்திடம் கேட்க வேண்டியது
மாறுதல் இன்றி வளர்ச்சி இல்லை. மாறுதல் என்பதே உலகின் முதலாவது விதி. மாறுதல் என்றால் இப்போதுள்ளதை அப்படியே முழுமையாக மாற்றுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. நல்ல பயனுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு, பயனற்ற அம்சங்களை மாற்றுவதே மாற்றம். முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வத்தை அப்படியே வைத்துக்கொண்டு பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வாளாகவிருப்பவன் சோம்பேறியாவான்.
"குன்றும் மாளும்' என்பது போல் நாளுக்கு நாள் அவன் ஏழ்மை நிலையை அடைந்து விடுவான்.நமக்கு இவ்வுலகில் வேண்டுபவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்காகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடி வழிபடுங்கள். எல்லா தெய்வங்களும் ஒன்றேயாகும். எல்லாவிதமான செல்வங்களையும் அறிவினால் பெறலாம். அறிவுடையோர் எல்லாம் உடையார். அறிவில்லாதவர்கள் எவ்வளவு செல்வ வளமிருந்த போதிலும் ஏதுமில்லாதவரே. நாம் ஒவ்வொருவரும் உடம்பை உழைப்பினாலும் பயிற்சியினாலும் சுறுசுறுப்புடன் இயங்க கற்றுக் கொள்ள வேண்டும். மனதை தீவிரமாக வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரம் உண்டாகும். அதில் சோம்பலைக் குடிகொள்ள அனுமதித்தால் நம்மிடம் முயற்சி இல்லாமல் போய்விடும்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:46 PM #7
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
வேலைக்காரனான கண்ணன்
வீட்டில் வேலையாட்கள் தாம் செய்யும் வேலைக்கு ஏற்ப கேட்காமல், மிக அதிக கூலி கேட்பர். நாம் முன்பு அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்ததை நன்றியுடன் நினைக்காமல் மறந்து விடுவர். சில சமயங்களில் வேலைக்கு வராமல் இருந்துவிட்டு, "ஏன் வரவில்லை?' எனக்கேட்டால் "பாட்டி செத்த பன்னிரண்டாம் நாள்' என்று பொய்யுரைப்பர். நாம் சொல்வது ஒன்று அவர்கள் செய்வதொன்று. நம் பகையாளியிடம் உறவாடுவர். இப்படி வேலையாட்களிடம் பட்ட துயரம் ஏராளம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நல்லதொரு வேலைக்காரனாக கண்ணன் வந்தான். வந்தவன் என்னிடம், ""நான் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். மாடுகளை பராமரிப்பேன்.
குழந்தைகளை பாதுகாப்பேன். வீட்டினை சுத்தமாக்கி விளக்கேற்றி வைப்பேன். நீங்கள் சொன்ன பேச்சைக்கேட்பேன். துணிமணிகளைப் துவைப்பேன். சிறுகுழந்தை தூங்க பாட்டிசைப்பேன். என் பெயர் கண்ணன். காசு எனக்கு பெரிதில்லை. மனதில் உள்ள அன்பே பெரிதாகும்,'' என்று தன் சிறப்புக்களை எடுத்துரைத்தான். கண்களை இமை காத்து நிற்பது போல் கண்ணன் எங்களை காத்து வந்தான். முணுமுணுக்காமல், சொன்ன பேச்செல்லாம் முகம் கோணாமல் கேட்டு நடந்தான். அவன் சேவகனாக அடியெடுத்து வைத்த நாள் முதலாய் எண்ணம் எல்லாம் கண்ணனுடையதாகி விட்டன."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:47 PM #8
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
இயற்கையை ரசியுங்கள்
கரிய நிறமான காகம் கா..கா..என்று கத்தும். மரக்கிளைகளில்,வானவெளியில்,அதிகாலைப் பொழுதினில் காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும். நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும். தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.ண தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி கீச்சுக்குரலில் பாடித் திரியும். சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும். பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும். தெருவில் இரை தேடித்திரியும் சேவல் ""சக்திவேல் '' என்று கூவித் திரியும்.
ணசெம்மை ஒளி வீசி பகலை வெளிச்சமாக்கிய கதிரவன் மாலையில் மறைந்து விடும். மயக்கும் மாலை வேளையில் நிலவு தன் அமுதக்கிரணங்களை பொழிய ஆரம்பிக்கும். இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும் உச்சிமாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.ணமனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தை கண்டு இன்பம் கொள்வாய். நிலவையும், வான்நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால் உண்டு களிப்பதை விடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ? தென்னை மரக்கீற்றில் "சலசல' என்று சத்தமிடும் பூங் காற்றின் மீது குதிரைச்சவாரி போல ஏறிக் கொண்டு உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள். பண்ணோடு இசைத்து பாடி களித்திருங்கள்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
26th Nov 2011, 12:47 PM #9
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
வீட்டிலேயே கடவுளை பார்
ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே. தன்னையே வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான். உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது. உனக்கு கொடிய பகைவனும் நீயே. இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன. மனம் நமக்கு நட்பாகும் போது.
உலகமே நட்பாகத் தோன்றும். நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும். கற்புடைய மனைவியைக் காதலித்து அறவழியில் நடந்தால் இப்பூமியிலேயே சுவர்க்கத்தைக் காணலாம். ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குச் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது.உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல. மாமிசம் புசிப்போரும் கடவுளை நெருங்க முடியாது. ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார். உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது. தீமைகளை எதிர்த்து போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும். கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.
-
26th Nov 2011, 12:49 PM #10
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
எங்கும் சக்திமயம்
எங்கும் நிறைந்திருப்பது சக்தியே. அது எல்லையில்லாதது. அதற்கு முதலுமில்லை. முடிவுமில்லை. சக்தியை யாரும் அசைக்க முடியாது. ஆனால், அது எதையும் அசைக்க கூடியது. அடிப்பதுவும் சக்தியே. துரத்துவதும் சக்தியே. கூட்டுவதும் சக்தியே. எல்லாம் சக்தியினாலேயே நிகழ்கிறது. பிணைப்பதும், கலப்பதும், உதறுவதும், புடைப்பதும், வீசுவதும், சுழற்றுவதும், கட்டுவதும், சிதறடிப்பதும், தூற்றுவதுமான அனைத்தும் சக்தியே அன்றி வேறில்லை. ஒன்றாகி இருப்பதும், பலவாகி நிற்பதும் சக்தியே. குளிர்ச்சியும், வெம்மையும் நடைபெறச் செய்வது சக்தியின் தன்மையினால் தான். காதலால் உள்ளம் உருகச் செய்வதுவும் சக்தியே. பகைமை, உறவு, உறுதி, அச்சம் ஆகிய எல்லா உணர்வுகளுமே சக்தியின் வெளிப்பாடுகளே.தெளிவும், மயக்கமும் அவளே. ஐம்பொறிகளால் முகர்வதும், சுவைப்பதும், தீண்டுவதும், கேட்பதும், காண்பதும் எல்லாம் சக்தியின் வேலைகளே. சக்தி பிரம்மாவின் மகளாகவும், கண்ணனின் தங்கையாகவும், சிவனின் மனைவியாகவும் இருக்கிறாள்.அப்போது உமையவளாக இருக்கிறாள். அவளே கண்ணனின் மனைவியாகவும், சிவனின் மகளாகவும், பிரம்மனின் தங்கையாகவும் இருக்கிறாள். அப்போது லட்சுமியாக இருக்கிறாள். அவளே மும்மூர்த்திகளுக்கும் தாயாகவும் விளங்குகிறாள்.
இப்படிப்பட்ட பெருமை மிக்க சக்திதாயே! நீ வாழ்க!
Similar Threads
-
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிற
By Ganga in forum Media TalkReplies: 1Last Post: 30th Oct 2011, 07:42 PM -
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
By sudhar in forum SpiritualityReplies: 12Last Post: 21st Sep 2011, 02:11 PM -
சோர்வை அகற்றும் பிரார்த்தனை–காந்தியின் &
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 23rd Aug 2011, 06:33 AM -
உரத்த சிந்தனை: ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 22nd Aug 2011, 01:01 AM -
நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் : ஆர்.நடரĬ
By silentsounds in forum News & PoliticsReplies: 0Last Post: 24th Mar 2011, 10:23 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks