Spoken English Learning
Discuss here on Spoken English Learning within the Students Zone forums, part of the Education & Career forum; ஹலோ தோழிகளே நான் டூ வீலர் ஓட்டக் கற்றுக்கொண்டபோது.....கற்றுக்கொடுத்த ஆசிரியை என்னிடம் ஒன்று சொன்னார்."சைக்கிள் கத்துகிட்டவங்க டூ வீலரோட சூட்ச்சமத்தை சீக்கிரமா புரிஞ்சுக்க முடியாது.சைக்கிள ஓட்டுற மாதிரியே ...
-
17th Feb 2012, 04:04 PM #1
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2012
- Location
- Kovai
- Posts
- 34
Spoken English Learning
ஹலோ தோழிகளே
நான் டூ வீலர் ஓட்டக் கற்றுக்கொண்டபோது.....கற்றுக்கொடுத்த ஆசிரியை என்னிடம் ஒன்று சொன்னார்."சைக்கிள் கத்துகிட்டவங்க டூ வீலரோட சூட்ச்சமத்தை சீக்கிரமா புரிஞ்சுக்க முடியாது.சைக்கிள ஓட்டுற மாதிரியே இதையும் நினைச்சுப்பாங்க.சைக்கிளை மறந்துட்டு டூ வீலரை மட்டும் நினைச்சு பழகு...அப்போ தான் உனக்கு நல்லா பழகும்." அப்படின்னு.
ஏன் இதை சொன்னேன் என்றால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் விரைவாக ஆங்கிலம் கற்றுக்கொள்வது போல ஆங்கில மீடியா பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடிவதில்லை.இது உண்மை.இப்படி பேசினால் சரியா தவறா என்ற தயக்கம் எதுவுமில்லாமல் அவர்கள் சட்டென்று பழகி விடுகின்றனர்.ஆனால் ஆங்கில மீடியா பிள்ளைகள் தனக்கு தெரிந்த அரைகுறை ஞானத்தால் பேசவும் முடியாமல் பேசாமல் இருக்கவும் முடியாமல் படும் பாடு.........அப்பப்பா........
நான் படித்தது ஆங்கில மீடியம் பள்ளியில் தான்.ஆனால் அது பெயரளவில் மட்டும் தான் ஆங்கில மீடியம்....மற்றபடி ஆங்கிலத்தில் அங்கே ஆசிரியர்களோ அல்லது உடன் படித்த மாணவர்களோ பேசியதே இல்லை.யாராவது மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசினால் எனக்கும் அது போல பேச வேண்டுமே என்ற ஆசை இருக்கும்.ஓரளவு பேசுவேனே தவிர fluency கிடையாது எனக்கு.
இந்த திரி நான் துவங்கியதற்கு காரணமே என் ஆங்கில அறிவைக் கொஞ்சம் வளர்த்துக்கனும் என்ற ஆசையில் தான். எனக்குள் கொஞ்ச நாளா ஒரு தாழ்வு மனப்பான்மை......ஐயோ நமக்கு ஒரு மொழியைக் கத்துக்க கூட முடியலையே அப்படின்னு.....என்னால் கத்துக்கவே முடியாதோ என்ற சந்தேகம் கூட அவ்வபோது வந்து மனதை வருத்தும்.ஆங்கிலம் கத்துக்க அதிக ஞானம் வேணுமோ என்று கவலைப்படுவேன்.அதனால் தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்.எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா?
எப்படி இந்த மொழியை கத்துக்கணும்..........எதிலிருந்து தொடங்கணும்........எப்படி ஆர்வம் செலுத்தனும்......எப்படி தயக்கம் போக்கணும்....இதை எல்லாம் சொல்லி தாங்கப்பாLast edited by Athip; 17th Feb 2012 at 04:06 PM.
Similar Threads
-
Multiple ways of learning
By vijigermany in forum Children's EducationReplies: 1Last Post: 30th Apr 2012, 04:56 PM -
Learning to click & dance, for a cause
By vijigermany in forum News & PoliticsReplies: 0Last Post: 13th Feb 2012, 12:15 AM -
Learning to live
By vijigermany in forum Life without mateReplies: 0Last Post: 21st Dec 2011, 11:29 PM -
well learning seo in forums
By Ruby815 in forum General DiscussionsReplies: 0Last Post: 6th Aug 2011, 02:59 PM -
10 Most Spoken Languages on Planet Earth
By silentsounds in forum Interesting FactsReplies: 1Last Post: 26th Jul 2011, 09:57 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks