பெண்மை இணையதள நிர்வாகி சகோதரி இளவரசி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். பெண்மை இணையதள நட்புகள் அதீதமான பற்றும் பாசமும் சகோதர மனப்பான்மையும் திகழ எல்லோருக்கும் நன்மையே விளைய வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் பங்காற்றுகின்றனர் என்பதில் யாதொரு ஐயமும் எவருக்கும் இருக்காது என்பது என் நம்பிக்கை. கூட்டுப்பிரார்த்தனைக்காக ஒரு சகோதரியால் தொடங்கப்பட்ட திரி வேறொரு பிரிவின் உபதிரியாக இருப்பதால் சட்டென கண்டு பிடிக்கவோ, நினைவில் வைத்துக் கொள்ளவோ சிரமமாக உள்ளது.எனவே என் வேண்டுகோள், கீழே நான் பதித்துள்ள சுட்டியின் திரியை தளத்தின் பிரதான மெனுவில் ஸ்டிக்கியாக அமைத்துத் தந்தால், மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல உள்ளம் படைத்த நட்புகளுக்கு உதவியாக இருக்கும். செய்வீர்களா சகோதரி?

Group Prayer - கூட்டு பிராத்தனை

Similar Threads: