காப்பீடு காக்க


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-kapp.jpg

அ.தி.மு.க. ஆட்சி வந்தஉடன் கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து செய்தது. தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 ல...ட்சம் வரை வழங்கப்படும். புதிய திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை உள்பட 1,016 சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை பெறமுடியும். 113 தொடர் சிகிச்சை, 23 நோய் கண்டறிதல்முறை ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் அல்லது 24 மணி நேர இலவச தொலைபேசி சேவையான 180042 53993 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நன்றி : டாக்டர் விகடன்