Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 6 of 6
Like Tree12Likes
  • 4 Post By priyavishnu
  • 3 Post By priyavishnu
  • 3 Post By priyavishnu
  • 1 Post By priyavishnu
  • 1 Post By priyavishnu

I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை 

Discuss here on I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை  within the Tamilnadu forums, part of the Penmai's Hub forum; (Ankor வாட் டெம்ப்ளே - என்னுடிய நண்பர் ஒருவருடைய face book லிருந் தஎன்னை கவந்த செய்தி இது , பெண்மை அங்கத்தினருடன் பகிர்ந்து கொள்ள விரும்பி ...

  1. #1
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை 



    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை -ankor.jpg

    (Ankor வாட் டெம்ப்ளே - என்னுடிய நண்பர் ஒருவருடைய face book லிருந் தஎன்னை கவந்த செய்தி இது , பெண்மை அங்கத்தினருடன் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே கொடுத்துள்ளேன் )


    உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

    இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

    இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும்

    regards,
    priyavishnu
    YOKI, Darra, myworld and 1 others like this.

  2. #2
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    Re: I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை



    "தாராசுரம்" கோயிலில் உள்ள "இசைப் படிகள் " பற்றிய செய்தியை தருகிறேன்.இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் " மகன் , " ராஜேந்திர சோழன் ". கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் " .ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்
    !!ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும் !!. இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது, அதனால் இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.
    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை -tharasuram.jpg



    regards,
    priya vishnu
    YOKI, myworld and Thendral D. like this.

  3. #3
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    Re: I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை

    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை -tharasuram2.jpg



    உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !!.

    இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்

    regards,
    priyavishnu

    YOKI, myworld and Thendral D. like this.

  4. #4
    myworld's Avatar
    myworld is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Anitha
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    2,579

    Re: I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை

    Very intresting informations Priya...
    Thanks for sharing.. :-)
    Anitha

    "Necessity is the mother of invention"

  5. #5
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    Re: I love tamil- " கோச்சடையன் " ,

    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை -koch.jpg



    சமீபத்தில் தமிழக மக்கள் அதிகமாக உச்சரித்த பெயர் " கோச்சடையன் " , எப்படி உச்சரிக்காமல் இருக்க முடியும் ? தமிழக மக்கள் அனைவரின் அபிபான நடிகரின் வரப்போகும் படம் ஆயிற்றே ! !. இதில் நம்மில் எத்தனை பேர் அந்த படத்திற்கு கொடுக்கும் ஆர்வத்தை, அந்த பெயரின் சொந்தக்காரனின் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள கொடுத்திருப்போம் ! ! ? ? யார் இந்த " கோச்சடையன் " ? ? இதோ அவனைப்பற்றிய சில தகவல்கள்..

    சங்கம் வைத்து நம் தமிழை காத்த மரபில் வந்த பாண்டிய மன்னன் தான் இந்த " கோச்சடையன் ரணதீரன் "கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தவன். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
    ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    படையெடுத்துச் சென்ற இவன், முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. .

    ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

    இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

    இவ்வளவு சிறப்புடைய நம் மன்னனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? ? ?.

    " இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய்,
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே "
    YOKI likes this.

  6. #6
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    Re: I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை


    I love tamil-கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை -rusia.jpg



    Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை )
    ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!
    தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

    ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

    தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

    "உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

    இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

    வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

    வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.


    regards,
    priyavishnu
    YOKI likes this.

Similar Threads

  1. Replies: 2
    Last Post: 25th Feb 2012, 01:16 PM
  2. Replies: 9
    Last Post: 29th Jan 2012, 01:49 PM
  3. Replies: 0
    Last Post: 1st Nov 2011, 08:08 AM
  4. Replies: 1
    Last Post: 26th Sep 2011, 05:48 PM
  5. Replies: 1
    Last Post: 26th Jul 2011, 11:07 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •