உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள்
Discuss here on உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள் within the Tamilnadu forums, part of the Penmai's Hub forum; உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள் மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வழக்கமான சந்தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ...
-
31st Oct 2011, 11:09 AM #1
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,322
- Blog Entries
- 1
உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள்
உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள்
மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வழக்கமான சந்தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தவறு கணவரிடமா, மனைவியிடமா என்பது விசாரணைக்குரிய கேள்வி. ஆனால் இதில் மனைவியின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை.. பல குடும்பங்களின் அமைதியை செல்போன் அழித்துக் கொண்டிருக்கிறது.
வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு சாபமாகிவிடுவது ஏன்?
சென்னையைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி லாவண்யா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). படிப்புக்காகவும் அரட்டையடிக்கவும் அவளது செல்போன் எப்போது சிணுங்கிக் கொண்டேயிருக்கும்.
திடீரென அவளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. போகப் போக அவளது வயதுக்கு மிக அதிகமான வார்த்தைகளும் வந்து விழுந்தன. லாவண்யாவுக்கு அது புது அனுபவம். ஒரு நள்ளிரவில் அந்த எண்ணிடமிருந்து போன் வந்தபோதுதான் லாவண்யா அதிர்ந்துவிட்டாள். கொஞ்சல் எஸ்.எம்.எஸ்.கள் மிரட்டல் போன்கால்களாக மாறின. பெற்றோரிடம் விஷயம் போய், ஒரு வழக்கறிஞரின் துணையுடன், செல்போன் பார்ட்டியைக் கண்டுபிடித்தார்கள். அவன் லாவண்யாவுக்கு எப்போதோ அறிமுகமாகி, ஒரே "ஹாய்' ஒரே "பை'யோடு மறக்கப்பட்டவன்.
சென்னையைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் புவனா. இவரது மகன் கல்லூரியில் படிக்கிறான். தன் வயதைச் சொல்லி புவனா கெஞ்சினாலும் செல்போன் பார்ட்டி விடவில்லை. ஆபாசம் சொட்டும் எஸ்.எம்.எஸ். போன்கால் என அவனது அராஜகம் தொடர்ந்தது. கடைசியில் புவனா எட்டு வருடமாகப் பயன்படுத்திய தனது சிம் கார்டைக் கழற்றி வீசிய பிறகுதான் அந்த டார்ச்சரிடமிருந்து விடுதலை கிடைத்தது.
பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ செல்போன் வக்கிரர்களிடம் சிக்கிக் கொள்வது ஏன்? "நம்மோட மூளைல புரோக்கோசீடியாங்கிற மையம் இருக்கு. மொழியை உள்வாங்கிக்கொள்வது இந்தப் பகுதிதான். இது ஆண்களைவிட, பெண்களுக்குப் பெரியது. யாராவது தங்களிடம் பேசிட்டே இருக்கணும்னு பெண்கள் எதிர்பார்க்க இதுதான் காரணம். வக்கிர ஆண்கள் இதைத் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்குறாங்க. செக்ஸ் தேவை கணவர் மூலமாக நிறைவேறாதபோது, பெண்கள் எதிராளியின் ஆசைக்கு இணங்கவும் நேரலாம். போனில் நேரம் காலம் பார்க்காம பெண்கள்ட்ட பேச முடிகிற ஆண்கள் பெரும்பாலும் சராசரி மனிதர்களா இருக்க வாய்ப்பு இல்லை. செக்ஸ் பற்றிய அவங்களோட கண்ணோட்டம் வழக்கத்தை விட ஏதோ மாறுபட்டதாவே இருக்கும்' என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
இந்தியன் சைபர் சொசைட்டியின் தலைவர் "ப்ரைம் பாயிண்ட்' சீனிவாசனிடம் கேட்டோம். "பல சமயங்களில் செல்போன் டார்ச்சரின் பின்னணியை ஆராய்ஞ்சு பார்த்தால் பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே காரணமா இருக்காங்க. செல்போன் நம்பர், மெயில் ஐடி பாஸ்வேர்டுன்னு பல பெண்கள் நண்பர்களிடம் தயக்கம் இல்லாம பகிர்ந்துக்குறாங்க. அவங்களுக்கு நடுவில் பிரச்னை வர்றப்போ, பசங்க இதையே ஆயுதமா பயன்படுத்திடுறாங்க. செல்போன் குற்றங்களுக்காக ஒருவருக்கு ஐந்து வருஷம் வரைக்கும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு' என்கிறார் சீனிவாசன்.
செல்போன் டார்ச்சரை அனுபவிக்கும் பெண்களுக்கு நடைமுறையில் பாதுகாப்பு எப்படி? "செல்போன் விஷமிகளிடம் சிக்கிக்கிட்ட பெண்கள் அதைக் கணவர்கிட்ட சொல்ல முடியாது. "உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?'ன்னு கணவர் சந்தேகப்படுவார். குடும்பத்துல குழப்பம் உண்டாகும். இது குற்றவாளிகளுக்குச் சாதகமாகிடுது. போலீஸிடம் போனால், விசாரணை நடவடிக்கைகள் பெண்களுக்கு தர்ம சங்கடமாவே இருக்கும்ங்கிறதுதான் யதார்த்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் பண்றப்போகூட புகாரை வாபஸ் வாங்குற பெண்களும் உண்டு. இந்தப் புகார்களுக்காகவே காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படணும். பெண் போலீஸே இதில் பொறுப்பு வகிக்கணும். குற்றவாளிகளின் செல்போன் நம்பரை ரத்து பண்றதும் தண்டனையில் ஒரு பகுதியா இருக்கணும். ஏதோ ஒரு முகவரிச் சான்று காட்டுனா, உடனே சிம் கார்டு தரப்படுற நிலைமையை மாத்தணும். அதுவரை செல்போன் டார்ச்சர் ஆசாமிகள் அட்டகாசம் செஞ்சிட்டு தான் இருப்பாங்க' என்கிறார் பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி.
செல்போன் பேச்சை பெரிய பொழுதுபோக்காகக் கருதும் பெண்கள் யோசிப்பார்களா?
தப்பிப்பது எப்படி?
அவசியமின்றி யாருக்கும் செல்போன் நம்பர் கொடுக்காதீர்கள். பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தை நம்பரைப் பதிவு செய்யுங்கள். அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். கடலைபோடும் ஆசாமிகளை கறாராகத் தவிருங்கள். நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வேலைகள் இருந்தாலும், கணவர் மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
- ஆனந்த் செல்லையா- KumudamLast edited by Parasakthi; 15th Feb 2012 at 08:44 AM.
Ganga
I always wanted to be somebody, but now I realize I should have been more specific.
பூவுலகம் காண வாராய் மகளே
-
14th Feb 2012, 10:25 PM #2
Re: உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள்
அறிமுகம் இல்லாத புதிய எண்ணிலிருந்து வரும் அலைபேசி அழைப்புகளை தவிர்த்துவிடுங்கள் .... நிறைய பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம் ....
-
21st Mar 2012, 11:38 AM #3
Newbie
- Gender
- Female
- Join Date
- Mar 2012
- Location
- usa
- Posts
- 2
Re: உஷார் ரிப்போர்ட் - செல்போன் வில்லன்கள்
wow, cannot understand.
Similar Threads
-
காலிப்ளவர் மசால் ரோஸ்ட்
By nayakivel in forum Vegetarian RecipesReplies: 1Last Post: 18th Oct 2011, 09:46 AM -
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்
By Ganga in forum MoviesReplies: 1Last Post: 23rd Aug 2011, 05:05 PM -
சாதனைப் பெண்கள்:சர்வதேசப் போட்டிகளில் வ&
By lathabaiju in forum SportsReplies: 0Last Post: 12th Aug 2011, 05:15 PM -
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரி&
By lathabaiju in forum Healthy and Nutritive FoodsReplies: 0Last Post: 12th Aug 2011, 05:08 PM -
டென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்க
By silentsounds in forum Interesting FactsReplies: 0Last Post: 6th Aug 2011, 09:43 AM


6Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks