Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By PremaKumar
  • 5 Post By lashmi

daughter not understanding parents and our conditions


Discussions on "daughter not understanding parents and our conditions" in "Teenagers" forum.


  1. #1
    PremaKumar is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Madurai
    Posts
    1

    daughter not understanding parents and our conditions

    hi all i am here for a suggestion for my 1st daughter. me and my husband both are working in private companies in madurai. we have 2 daughters, 1st daughter just now joined in college and 2nd daughter studying in 10th standard.

    my problemis now with my 1st daughter. we are middle class family and don't spend much and also having many commitments. with struggle joined her in top colleges in tamilnadu. she asked for smart phone and we too gave it and spent nearly 1.5 lacs for her studies.

    even now she is not satisfied she is asking for another mobile high range and asking for other gadgets and costly things like what her friends using. we had explained our family situation but she is not understanding.

    we are frustrated very much. help please. how to make understand the family situation.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine November 2015. You Can download & Read the magazines HERE.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 23rd Nov 2015 at 01:44 PM.
    sumathisrini, jv_66 and lashmi like this.

  2. #2
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: daughter not understanding parents and our conditions

    ஹாய் பிரேமா பெண்மைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    உங்களது ஆதங்கம் புரிகிறது தோழி. இதில் MIDDLE ,HIGH, LOW கிளாஸ் குடும்பம் எனபது முக்கியம் அல்ல. முதலாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு என்ன தேவைகள், அதை எந்த அளவுக்கு நாம் நிறைவேற்றி தருகிறோம் என்பது தான் பார்க்க வேண்டும்.

    நீங்கள் உங்களது கடமையை சரியாக செய்து இருக்கிறீர்கள். அதனால் வருத்தப்பட தேவையில்லை.

    குடும்ப சூழ்நிலை என்பது சொல்லி புரியவைக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களும் நம்முடனே தானே இருந்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அது புரியும். உங்களது வளர்ப்பு சரியான முறையில் இருந்தால் அதாவது எந்த முடிவு எடுத்தாலும் குடும்பத்தில் அனைவருடனும் கலந்து ஆலோசித்து எடுத்து செய்து இருந்தால் உங்கள பெண் குடும்ப சூழ்நிலையை நன்கு அறிந்திருப்பாள்.

    கல்லூரி வாழ்க்கை , அந்த பருவம் இப்படி எல்லாம் பேசவைகிறது. இது எல்லா இடத்திலும் நடக்கும் பிரச்சனை தான். தன்னை விட மற்றவர்கள் வைத்திருப்பது தான் உயர்ந்தது என்ற எண்ணம் இந்த வயதில் தலை தூக்குவது தவிர்க்க முடியாது.

    உங்கள் மகளிடம் தெளிவாக சொல்லி விடுங்கள். உனது தேவை என்ன ? அதற்கு என்ன வேண்டும்...நீ தாரளமாக கேள் அதை நான் செய்து தருகிறேன். ஆனால் விலை மாடல் இதெல்லாம் நமது குடும்ப சூழ்நிலை பொறுத்தே முடிவு எடுக்க முடியும். மாடல் எனபது தினம் தினம் மாறக்கூடியது. விலையும் அது போலதான்....இன்று 10000ரூபாய் பொருள் நாளை 5000 கு கிடைக்கும். அதனால் அதை வைத்து என்னால் வாங்கி தரமுடியாது என்று உறுதியாக சொல்லி விடுங்கள்.

    அப்புறம் தோழி என் மகள் என் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளவதில்லை என புலம்பாதீர்கள். இப்போது இருக்கும் பிள்ளைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். இந்த வயது அப்படி பேச வைக்கிறது.

    சில இடத்தில் விளக்கம் சொல்லுங்கள்...சில இடத்தில் முடியாது என உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள், சில இடத்தில் உங்களது மகளின் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுங்கள். அது அந்த சூழ்நிலையை பொறுத்து நாம் முடிவு எடுக்க வேண்டும்.

    இந்த விஷியத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் அவள் விருப்பத்திற்கு சீட் வாங்கி கொடுத்து இருக்ரீர்கள். அதனால் இதையும் பிடிவாதம் பிடித்தால் கிடைக்கும் என்ற ஆசையில் அவள் கேட்டு இருக்கலாம்.

    நீங்கள் உறுதியாக சொல்லிவிடுங்கள். நான் வாங்கி கொடுத்திருக்கும் பொருள் உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும். இதற்கு மேல் விலை குறைவாக இருந்தாலும் நான் வாங்கி தர மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்.

    கண்டிப்பாக உங்கள் மகள் புரிந்து கொள்வாள். கவலை வேண்டாம் தோழி.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine November 2015. You Can download & Read the magazines HERE.


    Last edited by sumathisrini; 23rd Nov 2015 at 01:44 PM.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter