Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 3 Post By chan
  • 2 Post By shanthiudayappan
  • 1 Post By jv_66

Drugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்&am


Discussions on "Drugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்&am" in "Teenagers" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Drugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்&am

    தனிமை தரும் தவறான வாய்ப்புகள்


    டாக்டர் ஆர்.காட்சன்
    ஓவியம்: முத்து
    பள்ளிமாணவிகள் தேர்வு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக ஒன்றுசேர்ந்து மது அருந்துவது போன்ற சில படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    அதேநேரம், தனிமையில் போதை சுகத்துக்காக மட்டும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது ஆண்களின் வழக்கம். நல்லவேளையாகப் பெண்களிடையே அந்த வழக்கம் இன்னமும் அதிகம் தொற்றிக்கொள்ளவில்லை. வளர்இளம் பெண்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு தென்படத் தொடங்கியிருந்தாலும், ஆண்களிடமிருந்து அவர்களை வித்தியாசப்படுத்துவது இந்த ஒரு விஷயம்தான்.

    வளர்இளம் பெண்கள் என்றைக்காவது கூட்டமாகவோ, கொண்டாட்டங்களின்போதோ மட்டும் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். சமூகரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதுதான், இதற்கு முக்கியக் காரணம். வளர்இளம் பெண்களின் போதைப்பழக்கத்துக்கும் இளவயது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் 100 மில்லி லிட்டர் குடிப்பது, ஆண்கள் 300 மில்லி லிட்டர் குடிப்பதற்குச் சமம். அத்தனை எளிதில் ஆண்களைவிட போதைக்கு அடிமையாகும் தன்மையுடன் பெண்களுடைய நரம்பு மண்டலம் அமைந்துள்ளது.

    ஆபத்தான தனிமை
    இதுபோன்ற பழக்கங்களிலிருந்து பள்ளிப் பருவத்தில் தப்பிவரும் பெரும்பாலான ஆண்-பெண் வளர்இளம் பருவத்தினர் கல்லூரிக்குள் நுழையும்போதுதான், அடுத்தகட்ட ஆபத்தான சூழ்நிலைக்குள் நுழைகின்றனர். அதுவரைக்கும் உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்கள், பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருப்பார்கள். ஆனால், கல்லூரிப் படிப்பை வெளியூரில் தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    அப்போது பெற்றோரின் நேரடி கண்காணிப்பு இல்லாமல் இருப்பது, கட்டற்ற சுதந்திரம் மற்றும் அனானிமிட்டி (Anonymity) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் யாரும் நம்மை அறிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம் போன்றவை காரணமாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம்.

    எனவே, வாரிசுகள் வேறு ஊரில் உள்ள கல்லூரிக்குச் சென்றுவிட்டாலும் அவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு வீட்டிலிருக்கிற உணர்வைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மீது தாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுடைய ஆசிரியர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களுடைய கல்வி, மற்ற விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    தூரமாக இருந்தால் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊரில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களை அவ்வப்போது சென்று பார்த்துவருமாறு பொறுப்பாக ஒருவரை நியமிக்கலாம். வாரிசுகளுடைய நலனில் அக்கறை உள்ள, அவர்களுடைய நெருங்கிய நண்பர்களோடு பெற்றோரும் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது, பல நேரம் உதவியாக இருக்கும். தேவைக்கு மீறிய பணப்புழக்கம் அவர்கள் கையில் இருப்பதைத் தவிர்க்கலாம். எப்போதாவது ஒருமுறை மட்டுமே அவர்களால் ஊருக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றால், வங்கிகளில் பணத்தைப் போட்டுக் கொடுத்து ஏ.டி.எம். பரிமாற்றங்களைக் கண்காணித்துக் கொள்ளலாம்.

    மனநோயும் போதைப்பழக்கமும்

    வளர்இளம் பருவத்தினரைப் பொறுத்தவரையில் மனநோய்க்கும் போதைப்பழக்கத்துக்கும் உள்ள சம்பந்தம் ‘முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா’ என்ற குழப்பத்தைப் போலத்தான். சில வேளைகளில் வளர்இளம் பருவத்தினர் மனநோயால் பாதிக்கப்பட்டதன் முதல் அறிகுறியே போதைப்பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பதாக இருக்கக்கூடும்.

    அதிலும் குறிப்பாக மன அழுத்த நோய் இவர்களைப் பாதிக்கும்போது, அவர்களுடைய மன அழுத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும் ஒரு வழியாகப் போதைப்பழக்கம் ஆரம்பமாகும். ஆனால் மன அழுத்த நோய் என்பது மனநல மருத்துவத்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்று. பல நேரங்களில் மனநல மருத்துவரை அணுகக் காலம் தாழ்த்துவதால், வளர்இளம் பருவத்தினர் சீர்கெட்டுப் போகும் வாய்ப்பு அதிகமாகிறது. மன அழுத்தத்தைப் பற்றி தனியாகப் பார்ப்போம்.

    இதுபோலப் பல மனப் பதற்ற நோய்கள், மனச் சிதைவு நோய்களின் முதல் அறிகுறியாகவும் போதைப்பழக்கம் இருக்கலாம். இவை எல்லாம் வளர்இளம் பருவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். சில நேரம் மனநோய் ஆரம்பித்துப் பல அறிகுறிகள் தெரிந்த பிறகு, போதைப்பொருட்களுக்கு அடிமையாவதும் உண்டு. இதுபோன்ற மனநோய்களால் ஏற்படும் குடி மற்றும் போதைப்பழக்கங்களை மனநோய்க்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே சரிசெய்துவிட முடியும். எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் சிகிச்சை எடுப்பதுதான் சிறந்த தடுப்புவழி.
    கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
    உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
    தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine July 2017. You Can download & Read the magazines HERE.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 29th Jul 2017 at 12:56 PM.
    jv_66 likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Drugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்

    பழக்கமும் அடிமைத்தனமும்


    டாக்டர் ஆர்.காட்சன்

    போதைப் பொருளான மது எளிதில் கிடைப்பதும், நமது சமூகமே மது அருந்துவதை காபி குடிப்பது போன்ற சாதாரண ஒரு பழக்கமாகப் பார்ப்பதுமே இளம் பருவத்திலேயே குடிபோதையின் அறிமுகம் கிடைப்பதற்கு முக்கியக் காரணம்.

    யார் அடிமை?
    போதைப் பொருட்களுக்கு அடிமையான பெரும்பாலோர், தாங்கள் அதற்கு அடிமையாகிவிட்டதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்பலாம் குடிக்க மாட்டேன்’ என்பது எல்லோரும் சொல்வதுதான். ஒருவர் தினமும் குடிப்பது, குடிக்காமலோ - போதைப் பொருளைப் பயன்படுத்தாமலோ ஒருநாள்கூட இருக்க முடியாத நிலை, நிறுத்தினால் தூக்கமின்மை, கை நடுக்கம் ஏற்படுவது, காலை எழுந்தவுடன் போதைப் பொருளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை போன்ற அறிகுறிகள் எல்லாம், அவர் போதை அடிமையாகிவிட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

    இன்றைக்குத் தினமும் ஒரு ஃபுல்லோ அல்லது அதற்கு மேலோ குடிப்பவர்கள் எல்லாம் ஒரே நாளில் அந்த நிலையை எட்டிவிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வளரிளம் பருவத்தில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ சிறிதுசிறிதாகக் குடிக்க ஆரம்பித்தவர்கள்தான். எனவே ‘இன்னைக்கு மட்டும் தானே குடிக்கிறேன், எப்போதாவது தானே எடுத்துக்கொள்கிறேன், நல்லது கெட்டது வரும்போது மட்டும்தானே பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லித் தப்பிக்க நினைப்பார்கள். கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால், போதைப் பொருட்கள் மூளை நரம்புகளில் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமித்துவிடும் நச்சு என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துக் கல்லூரி முடிக்கும் கட்டத்தில் நிரந்தரக் குடிகாரர்களாகவே பலர் மாறிவிடுவார்கள்.

    குடிநோயின் பாதிப்புகள்
    முன்பெல்லாம் ஒரு நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் மூத்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘டி.பி. நோய்க்கு டெஸ்ட் எடுத்தாச்சா’ என்பதுதான். ஆனால், இப்போது அதை முந்திக்கொண்டு வரும் கேள்வி குடிநோய்தான். இளம் வயதிலேயே பல வகை நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு போன்றவை மது அருந்துவதால் ஏற்படுகின்றன.

    மேலும் போதையில் நிதானம் இழப்பதால் மாணவப் பருவத்திலேயே ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள், விபத்துகளால் மரணம் போன்றவை அதிகரிக்கின்றன. வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கும் வலிப்புநோய்க்கும் மதுப்பழக்கம் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

    மனதை மாற்ற முடியுமா?
    மதுப் பழக்கத்தைப் பொறுத்தவரையில் இளம் பருவத்தினர் மனதில் உள்ள சில தவறான நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் எளிதில் போதைக்கு அடிமையாக்கிவிடுகின்றன. குடிக்கிற ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். வளரிளம் பருவத்தினர் ‘மச்சான், இன்னைக்கு நான் சந்தோசமா இருக்கேன். கண்டிப்பா சரக்கு அடிச்சே ஆகணும்’ என்றோ, ‘மண்டை காயுது, கட்டிங் போட்டாதான் சரியாகும்’ என்றோ காரணம் சொல்லுவார்கள். இப்படிச் சில காரணங்களைச் சொல்லிக் குடிக்க ஆரம்பித்தால், அதுவே பின்னால் குடிப்ப தற்கு ஒரு சாக்குபோக்காக மாறிவிடும். அது மட்டுமல்லாமல் குடிப் பழக்கம், கவலைகளை மறப்பதற்கு நிச்சயமாக மருந்து அல்ல.

    புகைப்பழக்கம்
    எல்லாப் போதைப் பொருள் பழக்கங்களுக்கும் நுழைவாயில் எதுவாக இருக்கும்? புகைப் பழக்கம்தான். அதை போதைப் பொருள் என்றே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதுவே போதை உலகத்தின் வாசல்.
    வளரிளம் பருவத்தில் பலரும் முதன்முதலில் பரிசோதித்துப் பார்க்கும் போதைப் பொருள் சிகரெட் அல்லது பீடிதான். சிலருக்கு அவ்வளவு தைரியம் இல்லாவிட்டாலும் பேப்பரைச் சுருட்டிப் பற்ற வைத்து வாயில் வைத்துக்கொள்வது, நாக்கில் படாமல் ஊதுபத்தியை வாய்க்குள் வைத்துப் புகையை வெளியிடுவது போன்ற செயல்கள் மூலமாகத் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள்.

    அடிமையாவது எப்படி?

    இப்படி ஆரம்பிக்கும் பாதிப் பேர் சில நாட்களில் விட்டுவிடுவார்கள். ஆனால், இயற்கையாகவே பதற்றத் தன்மை உள்ள வளரிளம் பருவத்தினர் இதற்கு அடிமையாக அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற வேதிப் பொருள் ஆரம்பத்தில் மனப் பதற்றத்தைத் தணித்து, இப்படிப்பட்டவர்களை கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வைக்கும். மேலும் கல்லூரிக்குச் சென்ற உடன் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்கும் வகையில், மூளையைத் தூண்டும் திறனை இது கொண்டிருப்பதால் புகைப்பதைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

    நிக்கோடின் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களில் மூளை ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால், ஒருவருடைய கவனம் மற்றும் சுறுசுறுப்பைக் கூட்ட உதவும். ஆனால், இது உதவி செய்பவர் போல வந்து பின்பு வில்லனாக மாறிவிடும். எப்படியென்றால், இந்த நிக்கோடின் செயல்படும் நேரம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். அதன் பின்பு மூளை நரம்புகள் அதே வேகத்தில் செயல்படக் கூடுதல் நிகோடினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். இதனால்தான் நாளடைவில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வகுப்புகளின் பாதியிலோ, சினிமா பார்க்கும் போது இடையில் டாய்லெட்டிலோ சென்று தம் அடிக்காமல் பலரால் இருக்க முடிவதில்லை.

    என்ன செய்யலாம்?
    குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றாலே சிலருக்கு தம் அடிக்கத் தோன்றும். உதாரணமாக டீ, காபி குடிக்கச் சென்றால் புகைக்காமல் இருக்க முடியாது. எனவே, பழகிப்போன டீக்கடை, பெட்டிக்கடைகளைக் கொஞ்ச நாளுக்குத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அதை நிறுத்த நிக்கோட்டின் சூயிங்கம் உதவும். மனநல மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

    இது எல்லாவற்றையும் தடுக்க, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு யார் கட்டாயப்படுத்தினாலும் சிறுவயதிலேயே ‘நோ’ சொல்லிப் பழகவேண்டும். இது புகை, குடிப் பழக்கத்துக்கு மிகவும் பொருந்தும். ‘இதில் என்னதான் இருக்கிறது?’ என்ற ஆவல்தான் முதன்முதலில் போதைப்பொருளை எடுக்கத் தூண்டும் எண்ணமாகும். ‘ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று நினைத்துக்கொண்டு அதை ஆரம்பித்தால், வாழ்க்கையையே அது தலைகீழாக்கும். போதை அடிமையாகும் பட்சத்தில் எந்தக் காரணத்துக்காகக் குடிக்க ஆரம்பித்தார்களோ, அதைவிட மிகப் பெரிய பிரச்சினையாகக் குடிநோய் - போதை மாறிவிடும். முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடும்.



    Last edited by chan; 14th Mar 2016 at 01:36 PM.
    jv_66 likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Drug Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்க

    முகமூடி போட்டு வரும் போதைப்பொருட்கள்


    டாக்டர் ஆர்.காட்சன்
    ஓவியம்: முத்து
    நம் நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மதுதான். அடுத்து அதிகபட்சமாகப் புகைப்பழக்கம், கஞ்சா ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றைவிட ஆபத்துமிக்க போதைவஸ்துக்களான அபின், ஓபியம் வகைகள், LSD, கோகெய்ன் போன்றவை சர்வசாதாரணம்.

    இவையெல்லாம் இந்தியாவில் சாமானியமாகக் கிடைக்காமல் இருப்பதற்கு ‘நார்கோடிக் மருந்து தடைச்சட்டம்’ மற்றும் அதன் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனை களும்தான் முக்கியக் காரணம்.


    கஞ்சா
    “கஞ்சா அடிச்சிப் பாரு, மனசுல இருந்து கற்பனை சும்மா கவிதையா கொட்டும், பூமில இருந்துட்டே சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்துடலாம்” என்றுதான் நண்பர்கள் இதை அறிமுகப்படுத்துவார்கள். கஞ்சாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். பொருள், பொட்டலம், ஸ்டஃப், துண்டு உட்படப் பல பெயர்கள் இருக்கும். கஞ்சா இலைகளை, புகையிலை போல பீடி அல்லது சிகரெட்டினுள் வைத்து இழுத்தால் போதை வரும். எல்லா இடங்களிலும் இது வெளிப்படையாகக் கிடைப்பதில்லை.

    மதுரை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்கள்தான் இதைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

    ஆரம்பத்தில் இந்தப் போதை ஒருவித மயக்கத்தைத் தந்தாலும் நாளடைவில் கற்பனைத்திறன், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் மந்தமாக்கிவிடும். பின்பு மனச்சிதைவு நோய் போன்ற மோசமான மனநோய்களையும் உருவாக்கிவிடும். ஆரம்பத்திலேயே இதைப் பயன்படுத்தாமல் தடுப்பதுதான் சிறந்த ஒரே வழி.

    பெட்ரோலியப் போதைப்பொருட்கள்
    இதையெல்லாம் போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு, வளர்இளம் பருவத்தினர் சில பொருட்களைப் போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வகை பெட்ரோலிய வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒயிட்னர், ரப்பரை ஒட்டப் பயன்படும் பசைகள், பிளாஸ்டிக்கை ஒட்டப் பயன்படும் ஒரு வகை திரவம் உட்படப் பல திரவப்பொருட்கள்தான் இப்போது பள்ளி மாணவர்களிடையே புழங்குகின்றன.
    பாதிப்புகள்
    சிறுவயதிலேயே மூளை நரம்புகள் சுருங்கி ஞாபகமறதி நோய் ஏற்படுவது, இதன் முக்கிய பாதிப்புகளுள் ஒன்றாகும். மேலும் திடீர் ஆக்ரோஷம், வலிப்பு, கை நடுக்கம், மூச்சுத்திணறல், நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும். பள்ளியிலோ வீட்டிலோ மாணவர்கள் இந்தப் பொருட்களைத் தேவையில்லாமல் அதிகப்படியாக வைத்திருப்பது தெரிந்தால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    சிக்ஸ் பேக் சிக்கல்கள்

    வளரிளம் பருவத்தில் உடல் கட்டமைப்பு மீது சிலருக்கு அதிகக் கவனம் ஏற்படும். ‘ஹிரித்திக் ரோஷன் சிண்ட்ரோம்’ என்று கூறும் அளவுக்கு உடற்பயிற்சி மூலம் கட்டழகு இளைஞனாக மாறுவதற்காக ‘ஜிம்’களுக்கு ஓட ஆரம்பிப்பார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படும் மூளை, இதிலும் எப்படியாவது சீக்கிரம் சிக்ஸ் பேக்கை வளர்த்துவிட வேண்டும் என்று நினைக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இந்த நேரத்தில் நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் ஜிம் மையங்கள் மூலமாகவும் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்’ (Anabolic Steroid) என்ற ஊசிமருந்தைப் பயன்படுத்தினால் சீக்கிரம் உடலை வளர்த்துவிடலாம் என்ற தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகின்றனர்.

    இதைப் பயன்படுத்தினால் தசை வளர்ச்சி ஏற்படுவது உண்மைதான். ஆனால் உடலின் எல்லா உறுப்புகளையும் இது பாதிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியாத உண்மை. முக்கியமாக இது பல மனநோய்களையும், மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் செடியை உரம் போட்டு வளர்ப்பது போல உடலை வளர்க்கும் விபரீத முயற்சிகள் வேண்டாம்.

    வளரிளம் பெண்கள் ‘நாங்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை’ என்று போட்டி போட்டுக்கொண்டு உடல் இளைப்பதற்குக் களம் இறங்குவார்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனாலும் ஆனார், அன்றிலிருந்து இந்திய வளரிளம் பெண்களுக்கு ‘ஸ்லிம் ஜுரம்’ பிடித்துக்கொண்டது.

    இதற்காகப் பல நாள் பட்டினி கிடப்பது, கொழுப்பைக் குறைக்கிறேன் என்று தேவையான உணவைக்கூடப் புறக்கணிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘அனோரெக்சியா’ (Anorexia nervosa) என்று பெயர். முற்றிய நிலையில் இது பெண்களின் ஹார்மோன் சுரப்பைப் பாதிப்பதால், பல்வேறு நோய்களை உருவாக்கும். இது ஒரு மனநோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.



    Last edited by chan; 24th Mar 2016 at 08:04 PM.

  4. #4
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    re: Drug Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்க

    good to read

    chan and Durgaramesh like this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Drug Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்க

    Thanks for the info.

    chan likes this.
    Jayanthy





  6. #6
    Gender
    Male
    Join Date
    Dec 2015
    Location
    Salem
    Posts
    56

    Re: Drug Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்&#

    Useful info


  7. #7
    Gender
    Female
    Join Date
    Aug 2017
    Location
    VISBY
    Posts
    74

    Re: Drugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்

    Its really sad that teenagers are getting addicted to drugs. If this continues, we can't even imagine the future of our nation. Thanks for coming up with such a good topic.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter