Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree9Likes
 • 4 Post By ahilanlaks
 • 1 Post By gkarti
 • 1 Post By sumathisrini
 • 1 Post By ahilanlaks
 • 1 Post By Durgaramesh
 • 1 Post By ahilanlaks

தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&


Discussions on "தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&" in "Teenagers" forum.


 1. #1
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி முடித்தவுடன் நடத்தும் கொண்டாட்டங்கள் காலத்திற்கேற்ப தமது வடிவத்தை மாற்றிக்கொண்டு விட்டன. கோயிலுக்குப் போய் நன்றி சொன்னது... அது புராண காலம்! அடுத்ததாக இனிப்பு கொடுத்து கொண்டாடிய காலங்களும் மலையேறிவிட்டன. சினிமாவுக்குப் போகும் காலமும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இந்தக் கொண்டாட்டம் வேறுமாதிரியாகத் தன்னுடைய கோரமுகத்தை கொஞ்சம் ெகாஞ்சமாக வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறது.

  இறுதித் தேர்வை முடித்தவுடன், பள்ளிச் சீருடையைக் கூட மாற்றாமல், நேராக ‘டாஸ்மாக்’ கடைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்ைக வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத்தான் சில மாணவர்கள் பெருமையாக நினைக்கும் நிலை உள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. இதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செயல் என்னவென்றால், எட்டாம் வகுப்பு மாணவர்களும் கூட ‘டாஸ்மாக்’கை எட்டிப் பார்க்கத் துணிந்திருப்பதுதான். இந்தத் தவறான பாதையைக் காட்டும் கலாசார மாற்றம் மாணவர்கள் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் செயல்.

  இனிமேலும் இந்த விஷயத்தில் பொறுமை காட்டுவது என்பது மாணவ சமூகத்தை மீட்க முடியாத அதலபாதாளத்தில் தள்ளிவிடும். டீன்-ஏஜ் பருவம் என்பது புயலும், கொந்தளிப்பும் நிறைந்த பருவம் என்று உளவியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் குறிப்பது அந்தப் பருவ வயதில் எல்லா மாணவர்களும் எதிர்கொள்ளும் குழப்பத்தைத்தான். இங்கு நிஜ வாழ்க்கையே புயலும், கொந்தளிப்புமாய் மாறியிருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகல்ல.

  டீன்-ஏஜ் பருவம் தலைமைப் பண்பை வெளிக்காட்டிக் கொள்ளும் பருவம். சுதந்திரமாகச் சுற்றித் திரிய விரும்பும் பருவம். கனவுகளில் கோட்டை கட்டி வாழும் பருவம். வாழ்க்கையின் இறுதிநாட்களில்கூட, நினைத்தாலே இனிக்கும் பருவம். அந்தப் பருவத்தை இந்தக் காலத்து மாணவர்கள் பாட்டிலுக்குப் பறிகொடுத்துவிட்டு வாழ்க்கையைப் புதருக்குள் தொலைத்து, பிறகு செய்வது தெரியாமல் பதைபதைப்போடு நிற்கிறார்கள்.

  * நண்பனா? பகைவனா?
  ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பது பழமொழி. ஆனால், இன்று சில நண்பர்களின் கூட்டம்தான் மாணவர்களை வேறு பாதைக்கு அழைத்துச்ெசல்கிறது. சமீப காலமாகத்தான் சந்தோஷமானாலும் துக்கமானாலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ‘சரக்கு அடிப்பது’ என்ற வார்த்தையைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். 250 ரூபாய்க்கு பேன்ட் எடுத்தால் கூட 500 ரூபாய் செலவு செய்து பார்ட்டி வைக்க வேண்டியிருக்கிற கலாசாரத்தை மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

  பார்ட்டி என்ற சொல்லுக்கு மாணவர்கள் இலக்கணத்தில் வேறு அர்த்தம் இப்போது நிலவ ஆரம்பித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த இந்த வைபவம் படிப்படியாக கீழிறங்கி பள்ளிக்கூட மாணவர்கள் வரை வைரஸ் கிருமி போல் தொற்றிக்கொண்டுவிட்டது. முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சக பள்ளி மாணவர்கள் மற்றும் அதே பள்ளியில் வேறு வகுப்பு மாணவர்களுடன்தான் நட்பு கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

  இந்த நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களோடு நட்பு வைத்துக்கொண்டு பள்ளி மாணவர்கள் தங்களின் கலாசாரத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இந்தக் கலாசாரம், உயர் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை விழுங்கி வருகிறது. வயதுக்கு மீறிய நண்பர்களுடன் ஏற்படும் பழக்கம் வரம்புக்கு மீறிய செயல்களை செய்யத் தூண்டுகிறது.

  * குதர்க்கமான குடும்பச் சூழல்
  நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால், இன்று பல குடும்பங்களில் நிலவும் சண்டை, சச்சரவுகள்... பெற்றோருக்குள்ளேயே கலாசார ரீதியிலான தவறான செயல்பாடுகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. இன்றைய குடும்பச் சூழல் சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கிறது. இந்தச் சூழலில் வளரும் பள்ளி மாணவர்களால் நிரம்புகிறது வகுப்பறை. இதுபோன்ற காரணங்களும் குழந்தைகளின் பாதை போதையை நோக்கித் திருப்புகிறது.

  எண்பது சதவிகித பெற்றோர்கள் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இதில் மட்டும் கீழ்த்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை வித்தியாசமே கிடையாது. என்ன? அவர்களின் பழக்கவழக்கங்கள்தான் மாறுபடும். இதில் கேரக்டர் ‘சி’ என்று வர்ணிக்கப்படுபவர்களின் நிலைமை மோசம். இவர்கள் தெருக்களில் விழுந்து கிடப்பவர்கள். நாய்களிடம் சண்டை போடுபவர்கள், மனைவியை காலால் எட்டி உதைப்பவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இந்த ரக பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் சமூக விரோதச் செயல்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இப்படித்தான் இளைஞர்களின் இளமைப் பருவம் தொலைய ஆரம்பிக்கிறது.

  * வழி மாற்றும் விடுதி வாழ்க்கை
  பெற்றோர்களை விட்டு விலகி தொலைதூரங்களில் படிப்புக்காகத் தங்கியிருக்கும் மாணவர்களும், வேலைக்காகத் தங்கியிருக்கும் இளைஞர்களும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை உணர்கிறார்கள். யாருமே பார்க்க இயலாது என்ற நிலையில் பெரும்பாலும் இவர்கள் மனம் நாடுவது தவறான பாதையைத்தான். வார இறுதி நாட்களில் தொடங்குகிற இவர்களின் கொண்டாட்டம் பின்னிரவு தாண்டியும் நீள்கிறது. இந்தப் பழக்கம் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் மெல்ல மெல்லப் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.

  * இனக்கவர்ச்சி
  பாலினக் கவர்ச்சியைப் பத்தாம் வகுப்பு மாணவன் காதல் என்று நம்புவதும், அந்த மாணவி பேச மறுத்தால் காதல் தோல்வி என்று கருதி போதையைக் கையில் எடுப்பதும் இப்போது சகஜமாகி வருகிறது. இது ஒரு வகை பேஷன் போல் பெருகிவருகிறது.

  * என்ன செய்யலாம்?
  ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டிராமல் ஒட்டுமொத்த சமுதாயமும் திருந்த வேண்டும். நாடு முழுவதும் நல்ல குடும்பச் சூழல் உருவாவது மிக அவசியம். பெற்றோர்கள் கண்ணியமாக நடந்துகொள்வதும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்வதால், அவர்கள் வளர்ப்பு முறையில் மாற்றம் ஏற்படும். தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது போன்ற சின்னச் சின்ன அன்பிலும் நன்மை விளையும். பெற்றோருக்கு, மகன், மகள் நட்பு வட்டாரத்தின் மீது எப்போதும் கவனம் இருக்கவேண்டும்.

  கல்லூரிப் படிப்பு வரை தங்கள் கண்காணிப்பிலேயே படிக்க வைக்கப்படும் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதற்காக அவர்களை ஒரேயடியாக கட்டிப்போட்டாலும், அவர்கள் தப்பான வழியை நாட வாய்ப்புண்டு. அதிக மதிப்பெண் என்ற விஷயத்துக்கு இரண்டாம் இடம் கொடுத்து ஒழுக்கநெறிகளின் அவசியத்தைக் கற்றுக்கொடுப்பது இன்றைய கல்வி நிலையங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமையாகும். செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களின் பயன்பாட்டில் பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். தரம் தாழ்ந்த சினிமாவையும், பிற மோசமான மீடியாக்களையும் தவிர்த்துவிட்டாலே போதும். இளமைப் பருவம், போதைப் பருவமாக இல்லாமல் மேதைப் பருவமாக மாறிவிடும்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.  Similar Threads:

  Sponsored Links
  Last edited by sumathisrini; 18th Mar 2017 at 02:15 PM.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 2. #2
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  47,382

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  Good Sharing Kaa!

  ahilanlaks likes this.

 3. #3
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  32,128

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  நல்லதொரு அலசல் புவனா.

  ahilanlaks likes this.

 4. #4
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  Quote Originally Posted by gkarti View Post
  Good Sharing Kaa!
  Thank you Karthi

  gkarti likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 5. #5
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  Quote Originally Posted by sumathisrini View Post
  நல்லதொரு அலசல் புவனா.
  நன்றி சுமி அக்கா

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 6. #6
  Durgaramesh's Avatar
  Durgaramesh is offline Commander's of Penmai
  Real Name
  Durga Devi
  Gender
  Female
  Join Date
  Sep 2015
  Location
  Puducherry
  Posts
  2,193

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  NICE SHARING TFS

  ahilanlaks likes this.

  DURGA DEVI

 7. #7
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: தடம் மாறும் டீன் ஏஜ் பருவம்! யார் பொறுப்ப&

  Quote Originally Posted by Durgaramesh View Post
  NICE SHARING TFS
  Thanks & welcome Durga

  Durgaramesh likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter