Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree389Likes

How to manage or handle teenagers


Discussions on "How to manage or handle teenagers" in "Teenagers" forum.


  1. #21
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: How to manage or handle teenagers

    பட்டாம்பூச்சி குழந்தைகளின் பெற்றோருக்கு...


    ‘கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்க விடறீங்களா?’ ‘இந்த வீட்ல நிம்மதியே இல்லை...’ ‘இதைச் செய்யாதே... அதைப் பண்ணாதேன்னு எல்லாத்துக்கும் கண்டிஷன்... கட்டுப்பாடு... ஏன்தான் இந்த வீட்ல வந்து பிறந்தேனோ...’ ‘எனக்கு உங்க ஹெல்ப் தேவையில்லை... நானே பார்த்துக்கறேன்... நான் என்ன சின்னக் குழந்தையா...’ - உங்கள் வீட்டில் டீன் ஏஜில் பிள்ளைகள் இருந்தால் அங்கே நிச்சயம் இந்த டயலாக்கு களை கேட்டிருப்பீர்கள்.


    இதையெல்லாம் நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? அவர்களது இந்தப் பேச்சு உங்களுக்குள் வேதனையை உண்டாக்குமா அல்லது பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருப்பதன் அறிகுறிதான் இது என எடுத்துக் கொள்வீர்களா?

    பாசமில்லாத, பிணைப்பில்லாத, மரியாதைக் குறைவான வார்த்தைகளாக இவற்றைப் பார்க்காமல், உங்கள் பிள்ளைகள் விடலைப்பருவத்துக்குள் நுழையத் தயாராவதன் அறிகுறியாகப் பார்ப்பதே நல்லது. டீன் ஏஜின் தொடக்கத்திலேயே சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் இயங்குவதையே பிள்ளைகள் விரும்புவார்கள். அதாவது கூட்டைவிட்டுப் பறக்கத் தயாராகிற பறவைகள் மாதிரி... இது பெற்றோரிடமிருந்து பிரிந்து சுதந்திரமாக செயல்பட பிள்ளைகளைத் தயார்படுத்துகிற பருவம்கூட.

    டீன் ஏஜில் பிள்ளைகள் ஒவ்வொருவரின் நடவடிக்கை ஒவ்வொருவிதமாக இருக்கும். சிலர் பெற்றோரிடம் பேசவே மாட்டார்கள். சிலர் குறைவாகப் பேசுவார்கள். இன்னும் சிலர், பெற்றோரிடமும் குடும்ப உறுப்பினர்களிடமும் வாக்குவாதம் செய்து சவால் விடுகிற தொனியில் பேசுவார்கள். பெற்றோருக்கு தங்களின் புது உலகத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது, தங்கள் நண்பர்களுக்கு பெற்றோரை விட அதிகம் தெரியும் என்கிற பாணியில் எரிச்சல் மூட்டும் வகையில் பேசுவார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் முடிவுகளை தாமே எடுப்பார்கள்.

    உதாரணத்துக்கு தனக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பது, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு விஷயங்களைத் தேர்வு செய்வது, தாங்கள் பிற்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்வது என எல்லாவற்றுக்கும் பெற்றோரைக் கேட்காமல் தாமே முடிவு எடுப்பார்கள்.
    உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் அறை, அனுமதி மறுக்கப்படுகிற அந்தரங்க இடமாக மாறும். தனிமையை அதிகம் நேசிக்கத் தொடங்குவார்கள். அவர்களது விருப்பங்களை தங்கள் அறையின் சுவர்களில் தொங்கும் போஸ்டர்கள், அலமாரியை அலங்கரிக்கும் ஸ்டிக்கர்கள், அதிர்ந்து அலறும் சிடி பிளேயர் போன்றவற்றின் மூலம் உணரலாம். திடீரென டைரி எழுதுவார்கள்.

    அதில் அவர்களது நட்பைப் பற்றிய நல்லது கெட்டதுகள் பதிவாகும். உங்களுக்கும் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்கும் இடையில் விழத் தொடங்கும் இடை
    வெளியை உங்களால் தடுக்க முடியாது. ‘இத்தனை நாள் ஊட்டி ஊட்டி வளர்த்தேனே’ எனப் புலம்பிப் பயனில்லை. அது அவர்களின் தன்னிச்சை முன்னேற்றத்தின் ஆரம்பம். அதைத் தடுக்க முயற்சித்தால் உங்களிடையே பிளவு தான் உண்டாகும். அதை அனுமதிக்கக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இந்த மாற்றம் ஒரே இரவில் நிகழ்வதில்லை. பதின்மப் பருவத்தின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தெரியும். அதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் அவர்கள் உங்களைவிட்டு விலகும் போது, பாதிப்பு அதிக மிருக்காது.

    பிள்ளைகள் வளர வளர, அவர்களுக்கு எது வரை சுதந்திரம் கொடுக்கலாம் என்கிற கேள்வி உங்கள் மண்டையைக் குழப்பும். எந்த வயதிலிருந்து உங்கள் பிள்ளையை வீட்டில் தனியே இருக்க அனுமதிக்கலாம்? இரவில் நண்பர்களுடன் தங்க அனுமதிக்கலாம்? பார்ட்டிக்கோ, சினிமாவுக்கோ நண்பர்களுடன் செல்ல அனுமதிக்கலாம்? இப்படி பொதுவான கேள்விகள் எழும். இதற்கென எழுதப்பட்ட விதி ஒன்றும் கிடையாது. ‘பிள்ளைகளை விட்டுப்பிடிக்க வேண்டும்’ என நான் சொன்னதைப் பற்றி ஒரு பெற்றோர் என்னிடம் விவாதித்தனர். ‘இது எப்படி முடியும்? சுதந்திரமாக விட்டு விட்டால் பிள்ளைகள் கை மீறிப் போய்விட மாட்டார்களா?’ எனக் கேட்டனர்.

    பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். ஆனால், அவர்களைப் பாசக் கயிற்றினால் பிணைத்து, அக்கயிற்றினை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து விட்டு, தேவையான பொழுது இழுத்துப் பிடியுங்கள். முதலில் உங்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து பேசுங்கள். முதல்கட்டமாக ஒரு சில விஷயங்களில் அவர்கள் உங்களை சார்ந்திருப்பதில் இருந்து விலகி, சுதந்திரமாக இயங்க அவர்களுடன் திட்டமிடுங்கள். அந்த திட்டப்படி நடந்து கொள்ளுங்கள். போக போக அவர்கள் உங்களுடன் நெருங்கி விடுவார்கள். அவர்களுக்கு எந்தெந்த விஷயங்களில் அதிகப் பொறுப்பு தேவைப்படுகிறது என நினைக்கிறீர்களோ, அதை அடையாளம் கண்டு, உடனே செயல்படுத்துங்கள்.

    தள்ளிப் போட்டால், அது வேறு மாதிரியான டென்ஷனை உருவாக்கும். உதாரணத்துக்கு, உங்கள் மகளுக்கு 15 வயதானதும் ஐபாட் வாங்கித் தருவதாக வாக்களித்திருக்கிறீர்கள் என்றால், பதினாலரை வயதிலேயே வாங்கிக் கொடுங்கள். ‘நீ பொறுப்பா நடந்துக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதான் சொன்னதுக்கு முன்னாடியே வாங்கிக் கொடுத்துட்டேன்’ எனச் சொல்லுங்கள். உங்கள் மீதான அன்பும் பார்வையும் மதிப்பும் அவளுக்குக் கூடும். நெருக்கமும் உண்டாகும். டீன் ஏஜ் பிள்ளைகளுக்கான எல்லா முடிவு களையும் எடுப்பதில், பெற்றோருக்கு என்னவோ அலாதி ஆசை. ஆனால், அது அவர்களது சுதந்திரத்தைப் பாதிக்கும். சரியான முடிவெடுப்பது என்பது பயிற்சிகளின் மூலம்தான் கைவரும்.

    தோல்விகள் வெற்றிக்கு படியாக அமையும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள அவர்களது முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதியுங்கள். சிலது சரியாக இருக்கும். பலது தவறாக இருக்கலாம். தவறுகள்தான் அவர்களுக்குப் பாடம் கற்றுத் தரும். தவறுகள் பெரிதாக அவர்களை பாதிக்காத வரை அவர்களை தவறு செய்து அதன் மூலம் கற்றுக்கொள்ள விட்டு விடுங்கள். செய்த தவறுகளை விமர்சிக்காதீர்கள். சரியான முடிவுகளைப் பாராட்டுங்கள். போகப்போக அவர்கள் தம் பலவீனங்களை உணர்ந்து ஆலோசனை கேட்பார்கள்.

    இந்த இக்கட்டான பருவத்தில் உங்கள் பிள்ளைகளை விட்டுப்பிடித்து சமாளிக்க இன்னும் சில டிப்ஸ்:

    உடைகளை நீங்களே தேர்வு செய்வதைத் தவிர்த்து, பணத்தை அவர்களிடம் கொடுத்து, வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் விருப்பப்படி ஹேர் கட் செய்து கொள்ள அனுமதியுங்கள். அது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அது குறித்து வரும் விமர்சனங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்பதை அவர்கள் உணர இது உதவும்.

    எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் சொல்லாமல், அவர்களிடமே கேளுங்கள். 7 மணி என்று சொல்கிறார்கள். ஸ்கூல் வேன் 7.15க்கு வரும். வேனை பிடிக்க முடியாமல், பள்ளிக்கூடம் செல்ல என்ன செய்வது என யோசிக்கட்டும். அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிற பாடம், அடுத்த முறை அந்தத் தவறை செய்ய வைக்காது.

    பிள்ளைகளுக்குப் பொறுப்புகளை, சுதந்திரத்தைக் கொடுப்பது எத்தனை அவசியமோ, அதே அளவு அவர்களுக்கான இடைவெளியையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    பிள்ளையின் அந்தரங்கத்துக்கு மதிப்பளியுங்கள். அவர்களது அறைக்குள் நுழைவதற்கு முன் கதவைத் தட்டுங்கள்.

    உங்கள் மகள் அல்லது மகனின் டைரியை படிப்பது, இமெயிலை பார்ப்பது, தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்பதையெல்லாம் தவிருங்கள்.

    உங்கள் குழந்தையின் விருப்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நீங்கள் டீன் ஏஜில் இருந்தபோது சந்தித்த அதே பிரச்னைகளை நினைவு கூருங்கள்.

    உங்கள் குழந்தையின் பிரச்னைகளையும் குழப்பங்களையும் உங்கள் பிள்ளைகளின் அனுமதியின்றி, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நம்பிக்கை என்பது தகர்ந்து விட்டால், அதைத் திரும்ப உருவாக்குவது மிகவும் சிரமம்.

    உங்களுக்குக் கொஞ்சமும் புரியாத இசையை பிள்ளைகள் ரசிக்கிறார்களா? தடை போடாதீர்கள். அந்த வயதில் அவர்களது நண்பர்கள் எதையெல்லாம் ரசிக்கிறார்களோ, அதையேதான் உங்கள் பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். காலப் போக்கில் அவர்களது விருப்பங்கள் தாமாக மாறும். அதனால் என்னவோ உங்கள் கலாசாரமே சீரழிந்து விடும் என்ற அளவுக்கு சிந்திக்காதீர்கள்.

    டீன் ஏஜ் பிள்ளைகளால் நீங்கள் அடிக்கடி தர்மசங்கடத்துக்குத் தள்ளப்படுவீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும் என்கிற நிலையிலும், தன்னை தனி மனுஷனாகவோ, மனுஷியாகவோ காட்டிக் கொள்வதைத்தான் அந்த வயதில் விரும்புவார்கள். இதனால் நண்பர்கள் மத்தியில் உங்களை உங்கள் பிள்ளைகள் கண்டு கொள்ளாமல் விடலாம். நண்பர்களின் முன்னால் நீங்கள் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்ற பாசத்தின் அறிகுறிகளை அவர்கள் விரும்பாமல் போகலாம். உங்களை தம் பெற்றோர் எனக் காட்டிக் கொள்வதை விரும்பாமல் போகலாம். அதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். பிள்ளைகள் வளர்ந்ததும், இச்சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நினைவு கூர்ந்து அவர்களும் சிரிப்பார்கள்.

    இந்தக் குழப்பமான பருவத்தில் சுதந்திரமும் வேண்டும், பெற்றோரின் அன்பும் ஆதரவும் வேண்டும் என நினைப்பார்கள். உங்கள் அன்பை எதிர்பார்ப்பார்கள். அதே வேளை அதை வெளிப்படுத்தும் வழியாக அத்தனை நாள்களாக நீங்கள் கடைப்பிடித்த ‘கட்டிப்பிடி வைத்திய’த்தை விரும்ப மாட்டார்கள்.

    குழந்தைகளாகவே பார்க்காமல், அவர்களை உங்களுக்கு சமமான தனிமனிதர்களாகப் பாருங்கள். அரசியல் தொடங்கி, விலைவாசி வரை எல்லாமும் பேசுங்கள். அவர்களது அபிப்ராயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்.

    டீன் ஏஜை கடப்பது என்பது அவர்களுக்குமே மிக மிக இக்கட்டானதுதான். முடிந்த வரை அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். எதைப் பற்றி யாவது உங்களிடம் பேச நினைத்தால், நேரம் ஒதுக்கி, காது கொடுத்துக் கேளுங்கள். உங்கள் சொல்பேச்சைக் கேட்காமல், உங்களுக்கு உடன்பாடில்லாத விஷயங்களை அவர்கள் செய்கிற போது, அமைதியாக இருங்கள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எல்லைக்குட்பட்டு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கட்டும்.

    வீடு என்பது அவர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான ஒரு இடம் என்கிற சூழலை உருவாக்குங்கள். உங்கள் அபரிமிதமான அன்பும் ஆதரவும் அதை அவர்களுக்கு உணர்த்தும்.



    Sponsored Links

  2. #22
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: How to manage or handle teenagers

    டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து

    பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே முதலிடம்! அது மட்டுமில்லை... வாழ்நாள் முழுக்க அவர்களது ஆரோக்கியத்தைப் பேணி காப்பதற்கான அஸ்திவாரமும், இதுவே!

    குழந்தைத்தன்மை கொஞ்சூண்டு மிச்சமிருக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, அந்தப் பருவத்தின் தொடக்கத்தில் முதலில் கொடுக்க வேண்டியது கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்த உணவுகள்.

    கீரையின் மூலம் கிடைக்கிற இரும்பும் கால்சியமும் இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரைகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. கீரையில் உள்ள குளோரோபில் சரும நிறத்தைக் கூட்டி, அழகைத் தரும். உடலில் கால்சியம் குறையும் போது, சோர்வு உண்டாகும். வியர்வை அதிகமாக வெளியேறினால் கூட, கால்சியம் வீணாவதாகவே அர்த்தம். அதை ஈடுகட்ட, பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, சாத்துக்குடி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை வெயிலே படாமல், ஏசி-க்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோரும் உண்டு. டீன் ஏஜில் அதெல்லாம் சரிப்படாது. 13 வயதுக்குப் பிறகு வைட்டமின் டி என்கிற சத்து அவசியம் தேவை. எதிர்ப்புத் திறனுக்கு அதுதான் ஆதாரம். உடலில் கால்சியம் சேர்வதற்கும், வைட்டமின் டியின் பங்கு மகத்தானது.

    என்னதான் உணவின் மூலம் கால்சியம் சேர்ந்தாலுமே, அதற்கு மூலமான வைட்டமின் டி ஆனது, சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டும்தான் கிடைக்கும். வெயில்ல போனா கருத்துடுவே... உடம்புக்கு ஆகாது என்றெல்லாம் பிள்ளைகளை நிழலோட்டமாக வளர்க்காமல், பள்ளி உள்பட வெளியிடங்களுக்கு சைக்கிளில் செல்லப் பழக்குங்கள். வெயில் பட விளையாட அனுமதியுங்கள்.

    ஆஸ்தான நடிகை, நடிகரைப் பார்த்து, அவர்களைப் போலவே கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு ஆசைப்படுவதை இன்று டீன் ஏஜ் ஆண், பெண்களிடம் அதிகம் பார்க்கிறோம். 13 வயதுப் பெண் குழந்தைக்குக்கூட, எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயம்! அதற்காக டயட் என்கிற பெயரில் பட்டினி! ஆண் பிள்ளைகளுக்கோ 6 பேக், 8 பேக் மோகத்தில் அதே கட்டாயம்! இது மிகவும் தவறு. உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்காமல், எடையைக் குறைக்கிற நோக்கத்தில், தவறான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது உடலை பலவீனப்படுத்தி, வளர்ச்சியை பாதிக்குமே தவிர, வேறொன்றும் செய்யாது.

    எல்லாவற்றிலும் நாகரிகத்தை விரும்பும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உணவிலும் அதே ஆர்வம். பீட்சாவும் பர்கரும் சாப்பிடுவதுதான் அவர்களை நாகரிகமானவர்களாகக் காட்டு வதாக நினைப்பு. அந்த மாதிரி உணவுகள் அழகு, ஆரோக்கியம் என இரண்டுக்குமே எதிரிகள். மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்த உணவுகள் தினமுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. மிளகு, நரம்புகளைப் பலப்படுத்தி, நினைவாற்றலுக்கு உதவும். சீரகம், உடலைக் குளிர வைத்து, முகப்பருவை விரட்டும். வெந்தயம், கடுகு, இஞ்சி, எள், கருஞ்சீரகம், பப்பாளி, அன்னாசி போன்றவை பூப்படைந்த பெண்களுக்கு அவசியமானவை. டீன் ஏஜில் இருந்தே எடுத்துக்கொள்ளப் பழகினால், பின்னாளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. தைராய்டோ, முறையற்ற மாதவிடாயோ பாதிக்காது. பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி பசலைக்கீரை, பாகற்காய், வாழைப்பூ சேர்த்த உணவுகளைக் கொடுத்து வந்தால், இன்று விஸ்வரூபமெடுத்து பயமுறுத்தும் பிசிஓடி பிரச்னை பக்கத்தில் கூட நிற்காது. டீன் ஏஜ் பெண்களுக்கு மாதத்தில் 5 நாள்கள் நெல்லிக்காய் சாறும், ஆண் பிள்ளைகளுக்கு ஆப்பிள், அத்திப் பழங்களையும் கொடுத்தால், வயதுக்கேற்ற வாளிப்புடனும் வனப்புடனும் திகழ்வார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். நோயில்லாத வாழ்க்கையை இங்கிருந்தே தொடங்குவோமே!


  3. #23
    bujji9797 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    360

    Re: How to manage or handle teenagers

    Friends,
    Thanks for all your reply....I donot have my own sisters with me & I could not able to share this with any one because they see our daughter in that anglie only. I also seen Father's view towards is varying from mother... .. I find infact little embrassed when I started posting about this issue...shall I do it or not... how it will be taken... like many thoughts have come to me . But now I am feeling much relaxed after sharing and seeing your advice. I could get lot of helping hands to balance myself as amother of teenagfer. Yes.... it is very tough & learning time for every parent ..... Hope I could getr over all these with the support ... Iduvum Kadanthu Pogumm....
    Thanks again for all your support & keep continuing this thread & it is much valuable to share yopur views & experience which is definetely helpful to some one...who may be silent reader...


  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by bujji9797 View Post
    Friends,
    Thanks for all your reply....I donot have my own sisters with me & I could not able to share this with any one because they see our daughter in that anglie only. I also seen Father's view towards is varying from mother... .. I find infact little embrassed when I started posting about this issue...shall I do it or not... how it will be taken... like many thoughts have come to me . But now I am feeling much relaxed after sharing and seeing your advice. I could get lot of helping hands to balance myself as amother of teenagfer. Yes.... it is very tough & learning time for every parent ..... Hope I could getr over all these with the support ... Iduvum Kadanthu Pogumm....
    Thanks again for all your support & keep continuing this thread & it is much valuable to share yopur views & experience which is definetely helpful to some one...who may be silent reader...


    Hi Bujji.......very happy to note that, you feel us as your sister.There are many of us.

    Even, I don't have any own sister.

    So, for people like us, PENMAI shares as the PLATFORM.

    ​Hope, this thread will be very much helpful to you and other mothers of teenage children.

    Jayanthy





  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to manage or handle teenagers

    Now, parents may find their kids, who were willing to please their rules and regulations, earlier, are now rebellious against parental control.

    Do not get frustrated by their behavior. This is quite normal.


    During this time, for one minute, they may behave as if they are grownup children, while the other moment, they behave as a child. We should understand that they are struggling as how to behave.


    They will want to dress up like their favorite cine heroes and heroines. They would like to do whatever they do in the films.

    Regarding, dressing, you can just leave them according to their wishes. Just tell them, to be sure about the way others will perceive about their looks.


    Regarding their activities, as their heroes, insist them, that movies are only
    FANTASIES and may not fit for REAL LIFE.

    Do not fight with them, for their changing looks, while you should strongly object only for addictions like drugs etc.



    Jayanthy





  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to manage or handle teenagers

    You (both mother and father) can share your own memories of adolescent age, and how you had gone through those periods. But let this be in a positive attitude.

    The next problem, they may face during this time, is
    ACNE. They may be very much worried about this and may try all solutions to overcome this. Tell them, that this is not a big issue and that they look nice, in a different way. If the problem becomes severe, allow them to take some useful treatments.

    This is the right time (by the of 13), to start preparing them
    mentally, that, they may need to be alone (away from you) , in order to pursue their higher studies. If they are not mentally prepared, they might feel much depressed and scared, when they are staying alone in hostels, in the later stage.

    Jayanthy





  7. #27
    GayathriArun's Avatar
    GayathriArun is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri ArunPrakash
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Dubai, UAE
    Posts
    459

    Re: How to manage or handle teenagers

    Dear Jayanthi Maam,
    What a useful thread, your intention of starting it is amazing. I will be back here for more updates and also with questions. Thanks.

    Gayathri ArunPrakash

  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by GayathriArun View Post
    Dear Jayanthi Maam,
    What a useful thread, your intention of starting it is amazing. I will be back here for more updates and also with questions. Thanks.

    Thanks Gayathri......and you are always welcome to ask questions.....eagerly waiting to answer them


    Jayanthy





  9. #29
    GayathriArun's Avatar
    GayathriArun is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri ArunPrakash
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Dubai, UAE
    Posts
    459

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hi...... good evening,,,,,,,,,,,

    its not very difficult task to manage the teen agers......
    because of hormone change, we feel some different activities in them...
    first one..
    their dressing code,
    second the crush in opposite sex..
    third always like to be lonely..
    fourth keep on dreaming...
    slight diversion and less concentration from studies..
    like to chat more with friends through mobile or internet..

    to overcome this issues,

    u be a good friend to ur daughter,,,
    talk openly to her..
    guide her in a polite way...
    try to give practise about meitation to ur daughter .
    indirectly monitor her activities..
    dont use harsh words ..
    dont stress her to study..
    while she is studying u sit along with her..
    keep the computer in the common places like hall or living room.. so that they cant misuse the internet....
    finally dont keep on watching themm.. be friendly.. thats all


    regards,

    viji


    Dear Viji,
    I liked the points you gave to overcome the issues especially the last line "don't keep watching them, be friendly" is really a "must to follow" thingy for parents. Thanks.

    Gayathri ArunPrakash

  10. #30
    GayathriArun's Avatar
    GayathriArun is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri ArunPrakash
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Dubai, UAE
    Posts
    459

    Re: How to manage or handle teenagers

    Dear SumathiSrini,

    Your contribution to this thread just brings back the practical things that had happenned and that is happening in the day to day life in most houses. Thanks and pls write more regarding this topic.

    Gayathri ArunPrakash

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter