Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree389Likes

How to manage or handle teenagers


Discussions on "How to manage or handle teenagers" in "Teenagers" forum.


  1. #41
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by sumathisrini View Post
    உங்கள் வாழ்க்கையின் மிக தர்மசங்கடமான காலகட்டம் எது? - இந்தக் கேள்வியை எந்தப் பெற்றோரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.
    டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்த வருடங்களைக் குறிப்பிடுவார்கள்.


    யெஸ்... டீன் ஏஜ் பிள்ளைகளுடன் பெற்றோர் படும் அந்த அவஸ்தைகளை சொன்னா புரியாது... சொல்லுக்குள்ளே அடங்காது!
    நீங்கள் எதைச் சொன்னாலும், அதை எதிர்த்துப் பேசினால்தான் அவர்களுக்குத் திருப்தியே! அதையும் மீறி நீங்கள் ஏதேனும் சொன்னால்... மொக்கை போடாதீங்கப்பா... லெக்சர் அடிக்காதீங்கம்மா... உங்களுக்கென்ன தெரியும்? என வாயை அடைப்பார்கள். அதற்காக அவர்களுக்கு உங்கள் மீது அன்போ, அக்கறையோ இல்லை என அர்த்தமில்லை. அவர்களைப் பொறுத்த வரை தமது சுய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகக் கருதுவார்கள். பெற்றோர் தம்மைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவார்கள். தம் பெற்றோர் பலமானவர்களாக, தம்மைப் பாதுகாப்பவர்களாக, தம்மை சரியான வழியில் செல்வது எப்படி என்பதை உணரச் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

    டீன் ஏஜ் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் சொல்லலாம். குறிப்பாக உங்கள் பிள்ளை தூங்கத் தயாராகும் இரவு வேளையில் சொல்வது உன்னதம். அந்த நேரத்தில் அவர்களுக்கு உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விஷயங்களை நினைவிலும் வைத்துக் கொள்வார்கள். உங்கள் பெற்றோர், உங்களிடம் என்னவெல்லாம் பேச வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறது ஒரு இணையதளம். அதற்கு அவர்கள் என்னென்ன விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யம்!

    1. நாங்க உன்னை அளவு கடந்து நேசிக்கிறோம். உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நாங்க தயாரா இருக்கோம்...
    உங்கள் பிள்ளைகளை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை அவர்களிடம் நீங்கள் கடைசியாக எப்போது சொன்னீர்கள்? சில நேரங்களில் நாம் வெவ்வேறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம். உறவுகளின் மகத்துவத்தையும் மேன்மையையும் மறந்து போகிறோம். நம்ம குழந்தைங்கதானே... நாங்க அவங்களை நேசிக்கிறோம்னு சொன்னாத்தான் புரியுமா என்ன? என நினைக்காதீர்கள். வேறு எதனாலும் உணர்த்த முடியாத எத்தனையோ விஷயங்களை வார்த்தைகள் அவர்களுக்கு உணர்த்தும் பல நேரங்களில்!

    2. உன்கிட்ட எத்தனையோ நல்ல குணங்களும் திறமைகளும் இருக்கு. அதை நினைச்சா எங்களுக்குப் பெருமையா இருக்கு!
    நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு உங்கள் பிள்ளையிடம் நிச்சயம் ஏதோ சில விஷயங்கள் இருக்கும். அது அடுத்தவருக்கு உதவும் குணமாகவோ, தனித்தன்மையான கலைத்திறனாகவோ, வேறு எதுவாகவோ இருக்கலாம். அதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். மற்றவர்களிடம் பேசும்போது, உங்கள் குழந்தையிடம் உள்ள நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டிப் பேசுங்கள். நான் உன்னை நினைச்சுப் பெருமைப்படறேன் என்கிற அந்த ஒற்றை வாக்கியம், எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது எனப் பாருங்கள்.

    3. உன் கனவுகள் நிறைவேற நான் எந்த வகையில உதவணும்?
    உங்கள் டீன் ஏஜ் பிள்ளை, உங்களின் மினியேச்சர் இல்லை. அவர்களுக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். தனது விருப்பங்கள் கவனிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத சூழலில் வளரும் பிள்ளைகள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள். குடும்பம் முழுக்க டாக்டர்களாக இருக்கலாம். அந்தப் பிள்ளைக்கோ எழுத்தாளராக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். தான் வளர்ந்த வாழ்க்கை முறை, மதம், கலாசாரம் தாண்டி, வேறு ஒரு வாழ்க்கை முறையின் பால் ஈர்க்கப்படுவார்கள். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... உன் வாழ்க்கையை நீ விரும்பியபடி அமைத்துக்கொள்ள நிச்சயம் என் ஆதரவு உண்டு என நம்பிக்கை கொடுங்கள்.

    4. என்னை மன்னிச்சிடு...
    தவறு செய்ததை ஒப்புக்கொள்வதோ, அதற்காக மன்னிப்பு கேட்பதோ சின்னக் குழந்தைக்குக்கூட ஈகோவை தூண்டும் ஒரு விஷயம். தமிழில் மட்டுமில்லை... எந்த மொழியிலுமே பலருக்கும் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. பெற்றோர் என்கிற காரணத்தினாலேயே நீங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா என்ன? தவறு செய்தால், தயங்காமல் ஒப்புக்கொள்ளுங்கள். அதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்துவிடாது. மாறாக உங்கள் மீது மரியாதையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். தமது உணர்வுகளைப் புரிந்துகொள்கிற, தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும். உங்களாலோ, வேறு யாராலோ உங்கள் குழந்தை காயப்படுத்தப்படுகிற ஒவ்வொரு தருணத்திலும் மன்னிப்பு கேட்கத் தவறாதீர்கள்.

    5. நீ நல்லவ(ன்)னு எனக்கு தெரியும்! நான் உன்னைப்பற்றி எவ்வளவு பெருமைப்படுறேன்னு உனக்குத் தெரியாது!
    தன்னைப் பற்றி தன் பெற்றோர் உயர்வாக நினைக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லா டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் இருக்கும். நல்லவர், வல்லவர், இனிமையானவர், திறமையானவர் என தாராளமாக உங்கள் பிள்ளையை நீங்கள் புகழ்ந்தீர்களானால், அதுவே அவர்களுக்குள் சுயமரியாதையை அதிகப்படுத்தி, உங்கள் இருவருக்கும் இடையிலான உறவையும் பலப்படுத்தும். தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து இத்தகைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில், டீன் ஏஜ் மனதும் கிட்டத்தட்ட பெரியவர்கள் மனது மாதிரிதான். உங்கள் பிள்ளை என்னதான் முரடாக இருந்தாலும், ஏதேனும் ஒரு பாசிட்டிவான விஷயத்தைக் கண்டறிந்து, அதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டிப் பேசுங்கள்.

    6. நீ எப்படி இருக்கியோ... அப்படியே நாங்க உன்னை ஏத்துக்கறோம். இந்தக் குடும்பத்துக்கு நீ ரொம்ப முக்கியம். குடும்பம் நல்லபடியா நடக்க உன் பங்கு ரொம்ப முக்கியம்.
    தான், தன் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இருக்கும். அதை அவர்கள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். நேரெதிராகக் கூட நடந்து கொள்வார்கள். உண்மை என்னவென்றால், அவர்களுக்குத் தேவை உங்கள் சம்மதமும் அங்கீகாரமும். அவர்கள் மீது அளவுகடந்த, கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக் காட்டுங்கள். அவர்கள் என்ன செய்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். நான் உன்னை மதிக்கிறேன், நான் உன்னை ஏத்துக்கறேன் என வார்த்தைகளின் மூலமும் அதைப் பிரகடனப்படுத்திக்கொண்டே இருங்கள்.

    7. நான் உன்னை புண்படுத்தணும்னு சொல்லலை. எனக்கு மிகவும் வருத்தமா இருந்தது. கோபம் வந்தது. அதனாலதான் சொன்னேன்.
    அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இப்படி நடக்கும். நீங்கள் ஒன்று சொல்வீர்கள். அதை உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள். கோபத்திலோ, வேதனையிலோ வெளிப்படுத்திய வார்த்தைகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என சில பெற்றோர் நினைக்கலாம். தனது வார்த்தைகளின் அர்த்தம் வேறு என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிற அவசியம் அவர்களுக்குத் தெரியாது. இது மிகப்பெரிய தவறு. எதையோ சொல்ல நினைத்து, அது உங்கள் பிள்ளையால் வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டது தெரிந்தால், அதை விளக்கி, மன்னிப்பு கேட்கக் கூச்சமே படாதீர்கள்.

    8. நீதான் எனக்கு முக்கியம். உனக்கு நல்ல அம்மா (அப்பா) வா இருக்கணும்னு நினைக்கிறேன். நான் செய்தது உன்னைக் காயப்படுத்தியிருக்கலாம். ஆனா, அது வேணும்னு செஞ்சதில்லை. நான் உன்னை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். நீ செய்தது எனக்கு பயமா இருந்தது. அதனாலதான் அப்படி செஞ்சேன். உன்னைப்போல் டீன் ஏஜ் பிள்ளைங்களை வளர்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு உனக்குக் கல்யாணமாகி, பிள்ளை பிறந்த பிறகு நீ உணர்வே... எல்லா பெற்றோருக்கும், அவர்களது பிள்ளைகள் ஸ்பெஷல்தான்... முக்கியம்தான். ஆனால், அதை எத்தனை முறை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்? வார்த்தைகளில் அதைக் காட்டுங்கள். கட்டிப்பிடி வைத்தியம் செய்யுங்கள். மகனோ, மகளோ வளர்ந்து விட்டார்களே, எப்படிக் கட்டிப்பிடிப்பது என்கிற தயக்கமே வேண்டாம். செய்து பாருங்கள், உணர்வீர்கள் மாற்றத்தை!

    9. உனக்கு என்ன பிரச்னைன்னாலும் தைரியமா என்கிட்ட சொல்லு. என்னவா இருந்தாலும் சரி. நான் உன்னை நம்புறேன். அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, நான் உன்மேல் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறேன். எனக்கு உன்னோட பாதுகாப்புதான் முக்கியம்...
    பதின்மப் பருவம் மிகவும் சிக்கலான பருவம். எந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பருவம். தாம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்துள்ள காலம். குழப்பமாக உள்ள இந்த காலத்தில் உங்கள் முழுமையான ஆதரவு உங்கள் குழந்தைக்கு தேவை. நீங்கள் எப்பொழுது கடைசியாக, நான் உன்னை நம்புகிறேன் என்று கூறினீர்கள்? உங்கள் பிள்ளை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அதை உங்கள் மகளிடமோ, மகனிடமோ சொல்ல இதை விட நல்ல தருணம் ஏது?

    10. உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன செய்யறாங்கன்னு எனக்கு அக்கறையில்லை. நீதான் எனக்கு முக்கியம்... இப்படி சொல்லித்தான் பாருங்களேன்!
    மேலோட்டமாகப் பார்த்தால் இதெல்லாம் ஒரு மேட்டரா எனத் தோன்றலாம். கொஞ்சம் மெனக்கெட்டு, முயற்சி செய்துதான் பாருங்களேன். உங்கள் பிள்ளையின் டீன் ஏஜ் பருவம் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பருவத்தில் உங்கள் பிள்ளைக்கும் உங்களுக்குமான உறவில் ஏற்படுகிற தாக்கம், அவர்கள் வளர்ந்த பிறகான வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் காட்டும். பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். அடிக்கடி அவர்களை நீங்கள் நேசிப்பதைச் சொல்லுங்கள். கட்டியணையுங்கள். அதே நேரம் அவர்களது கடிவாளமும் உங்கள் கைகளிலேயே இருக்கட்டும்.
    அருமை அருமை சுமதி கொடுக்க வேண்டிய எல்லா கருத்தையும் ஒருமித்து கொடுத்து விட்டீர்கள் ...இதுலேயே teen ager ii சமாளிக்கும் பக்குவத்தை பற்றி அழகாக சொல்லி இருக்கு ..

    thanks ....


    Sponsored Links

  2. #42
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by bujji9797 View Post
    Friends,
    Thanks for all your reply....I donot have my own sisters with me & I could not able to share this with any one because they see our daughter in that anglie only. I also seen Father's view towards is varying from mother... .. I find infact little embrassed when I started posting about this issue...shall I do it or not... how it will be taken... like many thoughts have come to me . But now I am feeling much relaxed after sharing and seeing your advice. I could get lot of helping hands to balance myself as amother of teenagfer. Yes.... it is very tough & learning time for every parent ..... Hope I could getr over all these with the support ... Iduvum Kadanthu Pogumm....
    Thanks again for all your support & keep continuing this thread & it is much valuable to share yopur views & experience which is definetely helpful to some one...who may be silent reader...
    don't worry dear... ithuvum kandanthu pogum nu solli evallavu thelliva irukkinga... then why to worry...
    And this thread is also giving so much of helpful tips, which u can do ...
    and it is very useful also...


  3. #43
    bujji9797 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    315

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    don't worry dear... ithuvum kandanthu pogum nu solli evallavu thelliva irukkinga... then why to worry...
    And this thread is also giving so much of helpful tips, which u can do ...
    and it is very useful also...
    Thanks Sudha... but ovoru nalum ovoru vidiyalum eppadi irukumo enra baym irukirathu.... kadavulidam edhu vandalum samalikkira thairyathai than vendugiren.... this age teenagers are learing the things in very hard manner, doing mistake & regret for that, facing the consequenses, then only they are learning..... ? even learning is the question only... being a mother , we dnot want to see our child to have any problem or hurdle... the mind says, the experience onlky make them to grow & groom but trhe heart is feeling for their bitter experince... parents than romba pavam, ithu rendukkum naduvula matikkuttu....


  4. #44
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by bujji9797 View Post
    Thanks Sudha... but ovoru nalum ovoru vidiyalum eppadi irukumo enra baym irukirathu.... kadavulidam edhu vandalum samalikkira thairyathai than vendugiren.... this age teenagers are learing the things in very hard manner, doing mistake & regret for that, facing the consequenses, then only they are learning..... ? even learning is the question only... being a mother , we dnot want to see our child to have any problem or hurdle... the mind says, the experience onlky make them to grow & groom but trhe heart is feeling for their bitter experince... parents than romba pavam, ithu rendukkum naduvula matikkuttu....

    Yes bujji, What you are telling is cent percent right. There is no other go. This is the age, that they like to oppose what ever we tell. They used to think, only their friends as angels and the parents as demons.

    ​Only when they do mistakes and learn them, they are understanding the worthiness of their Parents. But this is common with all human beings. ALL OF US ARE NOT PERFECT. Always trial & error helps us to improve in our life.

    This happens a lot in the TEEN AGE and we need to be only the Observers.

    Jayanthy



  5. #45
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: How to manage or handle teenagers

    Hi jayanthy mam,
    Thanks for starting this thread.ellorum niraya vishayanghal share pannitu irukeengha.my daughter is 16yrs .nan intha stage ellam ippo thancross panni vanthu irukken.payangarama emotionala iruppangha.we have to adjust.antha neram namma emotionsa control pannitu avanghakaluku time kuduthu appuram yethu sonnalu m they will take in a right sense.niraya porumai avasiyam.friendlya treat pannanum avanghaluku namma support irkkunu unarthite irukkanum.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  6. #46
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: How to manage or handle teenagers

    From the age of 13 or 14 itself, atleast the mother should be telling the child very often , the most important words I ALWAYS TRUST you.

    You should be telling these words to encourage them , and hence, they will hesitate to do wrong deeds and would feel guilty whenever they happen to do.

    Even, when they happen to stay away from you, you can tell these words via phone.

    I TRUST YOU A LOT AND YOU WILL ALWAYS DO GOOD THINGS, AND BE AWAY FROM THOSE WHO DO WRONG DEEDS.

    These words will really make magic within the children.

    You should not tell these words all of a sudden when they start doing something wrong.

    On the other hand, you may be checking their friends' background and your child's activities, without their knowledge.

    Even if they go wrong, explain them the right thing, and that you trust them that they will not repeat it again.


    Jayanthy



  7. #47
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: How to manage or handle teenagers

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    Hi jayanthy mam,
    Thanks for starting this thread.ellorum niraya vishayanghal share pannitu irukeengha.my daughter is 16yrs .nan intha stage ellam ippo thancross panni vanthu irukken.payangarama emotionala iruppangha.we have to adjust.antha neram namma emotionsa control pannitu avanghakaluku time kuduthu appuram yethu sonnalu m they will take in a right sense.niraya porumai avasiyam.friendlya treat pannanum avanghaluku namma support irkkunu unarthite irukkanum.


    ​Romba correct Sudha

    Jayanthy



  8. #48
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: How to manage or handle teenagers

    பருவப் பெண்களின் தாய்மார்களுக்கு…


    பெண்கள் முகத்தில் ஏற்படும் பருக்கள், எண்ணெய் பசையுள்ள தோல் மற்றும் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், "டீன்ஏஜ்’ பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர்.

    பெண்களின் வாழ்க்கையில், "டீன் ஏஜ்’ என்பது வசந்த காலம் போன்றது. பொதுவாக, 13, 19 வயது வரையிலான பருவத்தை, "டீன் ஏஜ்’ என்கிறோம். இந்தியாவில், 25 கோடிக்கும் அதிகமாக டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை உள்ளது. இக்காலகட்டத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல், இப்பருவத்திலும் அவர்களை கவனிக்க வேண்டியது அவசியம்.

    டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் சில…

    * பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால், 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், மருத்துவரை அணுகுவது நல்லது.

    * சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது, எண்ணெய் பசையுள்ள தோல் மற்றும் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக் கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், "டீன் ஏஜ்’ பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர். எனவே, இது குறித்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

    * பெண்களுக்கு, தன் சுத்தம் பேணுவது பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்து, கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

    * இப்பருவத்தில், உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப்பூர்வமாக பலவித மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாவதால், தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி குறித்தும், வெளியிடங்களில் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கூற வேண்டும்.

    * வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன் ஏஜ் பெண்களுடன், தினமும் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி மனம் விட்டு பேச வேண்டும். இது, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.

    * இந்த வயதுக்குரிய பல்வேறு பிரச்னைகளால், டீன்- ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவை, 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் மேம்படும்.



    Last edited by sumathisrini; 26th Jul 2013 at 01:25 PM.
    ramyaraj, vasanthi and jv_66 like this.

  9. #49
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: How to manage or handle teenagers

    இன்றைக்கு, மொபைல் போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எங்கே திரும்பினாலும், பெண்கள் காதில் மொபைல் போனை வைத்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது, முக்கியமானதாகவும் இருக்கலாம், முக்கியமில்லாத விஷயமாகவும் இருக்கலாம்.

    வித விதமான, வண்ண வண்ணமாக, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்கள் தான் இளம் பெண்களின் பேவரைட்! தனியாக இருக்கும் பெண்களுக்கு மொபைல் போன் ஒரு தோழியாக நட்புறவாடுவது உண்மை. பெற்றோர் எங்கேயாவது வெளியில் செல்லும்போது, தங்கள் குழந்தைகள், பெண் பிள்ளைகளை வீட்டில் இருக்க வைக்கும் சூழ்நிலையில், மொபைல் போன் அவர்களிடம் இருப்பதால், எந்த நேரத்திலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது நிஜம்.

    பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை. அதேசமயம், அதன் மூலம் வரும் ஆபத்துக்களையும், பிரச்னைகளையும் அவர்கள் அறிய வேண்டும். தேவையில்லாமல் மிஸ்டு கால் வந்தால், அதை எப்படி தவிர்ப்பது, யாராவது ஆபாசமாக பேசினால், எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர்களுக்கு தெரிய வைப்பது மிகவும் அவசியம்.

    மேலும், மொபைல் போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. அது பொழுது போக்கும் கருவியல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    பொதுவாக, மொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் எது என்றால், அது மிஸ்டு கால்தான். எங்கே, எப்போது, யார் மிஸ்டு கால் கொடுத்தாலும் உஷாராக இருக்குமாறு, உங்கள் வீட்டு இளம் பெண்களிடம் சொல்லி வைப்பது நல்லது. உங்களுடைய மகள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தும்போது, யாரிடம் பேசுகிறாள், என்ன பேசுகிறாள் என்பதை கவனியுங்கள். அது, தவறாக இருக்கும் பட்சத்தில், அறிவுரை கூறி, கண்டிப்பது நல்லது. ஆனால், எக்காரணம் கொண்டும் மொபைல் போன் பயன்படுத்த தடை போடாதீர்கள். ஏனென்றால், இந்த சின்ன விஷயம் அவளுடைய மனதையே பாதித்துவிடும்.உங்கள் மகள் நடுராத்திரியில் மொபைல் போனில் பேசுகிறாள் என்றால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து, அவளை கண்காணியுங்கள். மொபைல் போனுக்கு எப்போதும், பிரீபெய்டு கார்டுகளை பயன்படுத்த செய்யுங்கள். குறிப்பாக, அதற்குரிய பணத்தை அவளிடமே கொடுத்து கட்டச் சொல்லுங்கள். அப்போது தான் பணத்தின் அருமை அவளுக்குத் தெரியும்.

    தற்போது யாரை சந்தித்தாலும், உடனே, "உங்களுடைய மொபைல் போன் நம்பர் என்ன…’ என்று கேட்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் யார் கேட்டாலும், கேட்பவரின் குணநலன், பண்பு தெரிந்து நம்பரை கொடுக்குமாறு அறிவுறுத்துங்கள்.

    அதேபோல், பொது மக்கள் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையம், நடைபாதை, சாலைகளில் மொபைல் போனில் சத்தமாக பேசுவதோ, நம்பர் சொல்வதோ, முகவரியை சொல்வதோ கூடாது. சாலையை கடக்கும்போதும், ரோட்டில் நடந்து செல்லும் போதும் மொபைல் போனில் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். குறிப்பாக, வாகனங்கள் ஓட்டிக் கொண்டே, மொபைல் போனில் பேசக் கூடாது. இதனால், விபத்துகளும், வழிப்பறிகளும் நடக்க வாய்ப்புண்டு. அதேபோல், சிலர், ரயில்வே டிராக்கில் நடந்து செல்லும்போது, மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். இது உயிருக்கே உலை வைத்து விடும். மொத்தத்தில், மொபைல் போன், தகவல் தொடர்புக்கு மட்டுமே என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.





    ramyaraj, vasanthi and jv_66 like this.

  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: How to manage or handle teenagers

    சிறந்த வழிமுறைகளை சொல்லி நன்றாக வழி நடத்துகிறீர்கள் சுமதி . நன்றி

    sumathisrini likes this.
    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter