Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

How to handle the Teenagers?-விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப


Discussions on "How to handle the Teenagers?-விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப" in "Teenagers" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool How to handle the Teenagers?-விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப

    குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், விடலைப் பருவம் என்பது ஒரு மிக முக்கியப் பருவம். எது சரி? மற்றும் எது தவறு? என்று ஆராய ஆரம்பிக்கும் பருவம். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் பருவம். இத்தகையப் பருவத்தில், பெற்றோர்-பிள்ளைகள் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
    தங்களின் பிள்ளைகள் எந்த நிலையிலும் வழிமாறி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. ஆனால், பிள்ளைகளை கையாள்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில், பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
    * உங்களின் விடலைப் பருவ பிள்ளை, என்ன சொல்ல வருகிறது என்பதை கனிவோடு கேட்கப் பழக வேண்டும். ஏனெனில், ஒரு குழந்தை சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர்களிடம் ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் கூறிவிடும். ஆனால் அதே பிள்ளை, விடலைப் பருவத்திற்கு வந்தவுடன், பல விஷயங்களை பெற்றோரிடம் சொல்வதற்கு தயங்குகிறது. எத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் எப்படி உங்களின் விடலைப் பருவ பிள்ளைகளிடம் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் அனுமானித்து, அதன்படி, உங்களுடனான உறவுநிலையில் ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்கிறார்கள்.
    * ஒவ்வொரு நாளிலும், குழந்தையுடன் செலவிடுவதற்கென்றே வீட்டில் ஒரு நேரம் வகுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. குழந்தைகள் படிக்கும்போது, நீங்கள் சிறிதுநேரம் அவர்களின் உடன் அமர்ந்து படிக்கலாம். பாடப்புத்தகம் அல்லாத சில சிறந்த புத்தகங்களை, குழந்தைகளுக்குப் படிக்க கொடுத்து, அதன் கருத்தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம்.அதுபோன்ற கலந்துரையாடலில், உங்களின் கருத்தை திணிப்பதை தவிர்த்து, அவர்களின் கருத்தை ஆர்வமுடன் கேளுங்கள்.
    * பொதுவாக இரவு நேரத்தில் உணவருந்தும்போது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஒரு நல்ல ஆரோக்கிய சூழல். இந்தப் பழக்கமானது, உங்களுக்கும், உங்களின் விடலைப் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஏனெனில், அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை பெற்றோரிடம் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை, பெற்றறோர்கள் தங்களின் கருத்துக்களை திணிப்பதற்கான போதனைக் களமாக ஆக்கிவிடக்கூடாது. பிள்ளைகளைப் பேசவிட வேண்டும்.
    * வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையை நீங்களும், உங்களின் விடலைப் பருவ பிள்ளையும் இணைந்து செய்து கொண்டே பேசலாம். வீட்டை சரிப்படுத்துதல், வெளியில் கடைக்கு செல்லுதல் போன்ற பணிகளை செய்துகொண்டே பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது, சூழ்நிலையை எளிதாக்கும்.
    * பல ஆய்வு முடிவுகளின்படி, ஒரு வீட்டில் தந்தையைவிட, தாய்தான் குழந்தைகள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அதிகளவில் துணைபுரிகிறார். தந்தை ஒரு அதிகார மற்றும் கட்டளை மையமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில், பல தந்தைகளும் தங்களின் பிள்ளைகளிடம் நெருங்கி வருகிறார்கள்.
    * சில விடலைப் பிள்ளைகளிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால், அவர்கள், அதற்கு முற்றிலும் எதிர்பதமாகவே செய்வார்கள். ஏனெனில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான், பெற்றோர்கள் தெளிவாக செயல்பட வேண்டும். உங்களின் முடிவுகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல், அவர்களுடன் ஆலோசித்தே எந்த திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனையை முதிர்ச்சியானதாக மாற்றும்.
    * தொடர்ச்சியான மற்றும் பின்வருபவைகள் பற்றி சிந்திக்கும் மூளையின் பகுதியானது, விடலைப் பருவத்தில்தான் வளர்ச்சியடைகிறது. விடலைப் பிள்ளைகளுக்கு, சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், தங்களின் புதுமையான செயல்களின் மூலம் நம்மை அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.
    * உங்களின் விடலைப் பிள்ளையை எப்படி வழிநடத்துவது என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பிள்ளையின் முன்பாக வெளிப்படையாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.
    * பல இல்லங்களில், பெற்றோரிடையே, தாங்கள் சொல்வதைத்தான் தங்களின் பிள்ளை கேட்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் இருக்கும். இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதால், அவர்கள் இந்த சூழலை எதிர்மறையாக கையாள நினைப்பார்கள்.
    * தாயும்-தந்தையும், ஒருவரின் அக்கறையில் மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன்பாக நீங்கள் ஒற்றுமையுணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களின் விடலைப் பிள்ளையுடனான உங்களின் உறவு வலுப்படும்.
    * என்னதான் உங்களின் அரவணைப்பிலேயே உங்களின் குழந்தை வளர்ந்திருந்தாலும், அவர்கள் விடலைப் பருவத்தை எட்டியவுடன், தாங்கள் பெரிய மனிதர்கள் என்பதை உணர்கிறார்கள். எனவே அவர்களின் தனிமை உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, தலையிட்டு, அவர்களை சங்கடப்படுத்தக்கூடாது. தேவையான உதவிகளை தவறாமல் செய்ய வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தெரியாத வண்ணம் சரியான முறையில் கண்காணிக்கவும் வேண்டும்.
    * ஒரு பிரச்சினையைப் பற்றி உங்களது விடலைப் பிள்ளையிடம் நேரடியாக பேசுவதற்கான சூழல் இல்லாதபோது, கருத்தை எழுத்தில் தெரிவிப்பது ஒரு சிறந்த வழியாகும். நேருக்கு நேர் பேசுவது சிறந்த வழிமுறை என்றாலும், சில சமயங்களில் நேரடி விவாதங்கள் எல்லையை மீறி சென்றுவிட வாய்ப்புண்டு. எனவே, அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான உரையாடல் பெரும் உதவியாக இருக்கும்.
    * அதேசமயம், நீங்கள் எழுதியதை(கடிதம் வாயிலாகவோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ) அனுப்பும் முன்பு அல்லது கொடுக்கும் முன்பாக, அவற்றை ஒருமுறை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணர்ச்சி வசத்தில் நீங்கள் ஏதேனும் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த நேரிடலாம். எனவே சரிபார்த்து அவற்றை திருத்திவிட வேண்டும்.
    * உங்களின் விடலைப் பிள்ளைகள், அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், எதை உங்களிடம் சொல்ல வேண்டும் மற்றும் தேவையில்லை என்று முடிவெடுக்கும் நிலைக்கு அவர்கள் வருகிறார்கள். எதுமாதிரியான விஷயங்களை உங்களிடம் அவர்கள் ஆர்வத்துடன் கூறுகிறார்கள் என்பதையும், எதுபோன்ற விஷயங்களை அவர்கள் உங்களிடம் கூறத் தயங்குகிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
    * எனவே, நீங்கள் அவர்களுடன் மேற்சொன்ன வகைகளில் உறவை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், சூழலை மென்மையாக்கி, உங்களின் விடலைப்பிள்ளை உங்களிடம், அனைத்து முக்கிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

    Similar Threads:

    Sponsored Links
    girija chandru and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்பட

    மிகவும் தேவையான பதிவு . நன்றி .

    Jayanthy





  3. #3
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: How to handle the Teenagers?-விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எ

    regarding teenagers, i opine the following :-

    1) boys are finding it more difficult to adjust.
    2) girls get briefed much earlier...!!!
    3) boys are more shy to discuss their views.
    4) girls are more brave to face than boys.
    5) they will not respond to shoutings, yellings.
    6) they will respond only to love and care
    7) they look out only for a bit of affection.
    8) they adore more friends because, they dont advise
    9) peer pressure is more on them...
    10) tey are good in self analaysis

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter