Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree109Likes

இன்றைய இளைஞர்கள் - The Youth of Today


Discussions on "இன்றைய இளைஞர்கள் - The Youth of Today" in "Teenagers" forum.


  1. #11
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by lashmi View Post
    உண்மைதான் கோமதி ...இன்றிய இளைய சமுதாயம் இப்படிதான் போய்கொண்டு இருக்கிறது. மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் ,,சுயமாக செயல்படுங்கள் என அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க சொன்ன வார்த்தை அர்த்தம் மாறி அவர்களை சுயநலவாதியாக மாற்றிவிட்டது.

    ஐந்து வயதிலே அவன் மருத்துவனாக வேண்டும் என நினைத்து விடுதியில் சேர்த்து பதினைந்து வயதில் பல நேர்முக தேர்வுகளுக்கு அனுப்பி இருபத்தி ஒரு வயதில் இரண்டு லட்சம் சம்பளத்தில் ஒரு இளைஞன் பணியில் அமர்ந்தால் அவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?

    மனம் என்று ஒன்று இருந்தால் தானே மனிதநேயம் இருக்கும். இன்று இருக்கும் இளைய தலைமுறை மனிததர்மத்தை அடமானம் வைத்து அறிவை பெறுகிறது. அதில் வரும் சுகத்திற்கு சமூகமும் அடங்கிபோகின்றது.

    மது குடிப்பது ஒரு கேவலமான செயல்,பிறர் மனை நோக்கான் என பண்பாடுகளோடு வளர்ந்தவர்கள் நாம். இப்போது இருக்கும் தலைமுறையோ இவை எல்லாம் தங்களின் தகுதியை உயர்த்தும் காரணியாக பார்க்கிறது.

    ஒருவீட்டில் அப்பா அம்மாவிற்கு சண்டை ....மது அருந்துகிறார் என அம்மா திட்ட அதற்கு பத்துவயது அவரது பெண் சொல்கிறாள். குடிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல...என் தோழிகளின் அப்பாவும் குடிக்கிரார்கள். நீ தான் தேவை இல்லாமல் சண்டை போடுகிறாய் என அம்மாவை திட்டுகிறாள். எங்கே போய்கொண்டு இருக்கிறது இந்த சமுதாயம் ???????
    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் லட்சமி.

    தன்னம்பிக்கையை வளர்ப்பதாக எண்ணி, செய்த செயல்கள் இப்படி ஒரு நிலைமையை உண்டு பண்ணி விட்டது.
    உங்கள் கருத்துக்களை சொன்னதுக்கு மிக்க நன்றி.


    Sponsored Links

  2. #12
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by Geethanjali16 View Post
    எல்லோருமே அப்படி இருப்பதில்லை தோழி... ஆனால் என்ன முன்பெல்லாம்,அதிகமாக மனிதாபிமானம் கொண்ட மனங்கள் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது என்பதுதான் வருத்தமாக உள்ளது. பொது இடங்களில் {பஸ்,மருத்துவமனை}வயதானவர்களோ, ஊனமுற்றவர்களோ நிற்கும் நிலை ஏற்பட்டால் கூட பலர் எழுந்து நின்று அவர்களுக்கு உட்கார இடம் தருவதில்லை என்பதை நேரில் பார்க்கும் போது மன மிகவும் வேதனை அடைகிறது.
    நானும் பலதடவை இதுபோல் பார்த்து, வருந்தி இருக்கிறேன்.
    நன்றி கீதா.


  3. #13
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஒருவரின் செயலை மட்டும் வைத்து இன்றைய ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தையும் நாம் மதிப்பிட முடியாது அல்லவா கோமதி?

    அந்தப் பெண்மணி உதவி கேட்ட போது அந்த இளைஞர் எந்த மாதிரி மனநிலையில் இருந்தாரோ?

    கீழே உள்ள லிங்க்ல துர்கா சக்தி பகிர்ந்து இருக்கிற article படிச்சு பாருங்க... அந்த நல்ல செயலை செய்ததும் இளைஞர்கள் தான்.


    Miracles do happen in our daily life

    இந்த சமுதாயத்தில் இரண்டு விதமான மனோபாவத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தான் நம் இளவரசி இந்த மாத பெண்மை மின்னிதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    Penmai eMagazine August 2015
    நானும் இதைப் படித்தேன், சுமதி.ஒருவரின் செயலை வைத்து, மற்றவர்களை எடைப்போட கூடாதுதான்.


  4. #14
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by chan View Post
    Dear @kkmathy


    நாம் எல்லோரும் சில காலம் பின் நோக்கி செல்வோமாக,,நாம் நம் சிறு வயதில் ,மற்றும் இளம் வயதில் பேசிய வை,நடந்து கொண்ட முறை பற்றி ,இப்பொது நடுத்தர வயதில் நின்னைத்து பார்த்தால் ,நாம இப்படி நடந்து கொண்டோம் என்று தோன்றும்,
    நமக்கு நம் 20 வது வயதில் சரி என்று படுவது ,40 வயதில் தவறு என்றும்
    40 வது வயதில் சரி என்று படுவது ,60வயதில் தவறு என்றும் தோன்றும்,இது வயதும் அனுபவமும் நமக்கு சொல்லி தரும் படம்.

    நம் இளம் வயதில் நாம் நடந்து கொண்ட விதம் பார்த்து நம் முந்திய தலைமுறைகள் இப்படி தான் வருத்த பட்டு இருப்பார்கள்.

    இது காலத்தின் கோலம் ,இன்றைய இளம் தலைமுறைகள் செயல்கள் பார்த்து வருந்து வது இயற்கையே,

    இன்றைய இளம் தலைமுறைகள் நம்மை விட தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகவும் ,திறமையாகவும்
    காட்டாற்று வெள்ளம் போல் உள்ளனர்,அது ஒழுங்காக கரை சேரவேண்டும்.

    அவர்களுக்கு பொறுப்பும் ,கடமையும் வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் ,நம்பிக்கை தானே வாழ்க்கை,
    இளம் தலைமுறைகள் எதிலும் வேகம் வேகம் என்று உள்ளார்கள்.அவர்கள் முட்டி மோதி அடிபட்டு நிக்க போகிறார்களா,அல்லது தெளிந்து நிதானித்து கரை சேர்வது அவர்களின் சாமர்த்தியம் பொருத்தது.

    நீங்கள் குறிப்பிட நிகழ்ச்சி பற்றி விவாதித்தல் ,அதில் உள்ள சரி ,தவறுகள் என்னவென்றால்

    அந்த பெண்மணி லிப்ட் use செய்ய தெரியாதவர் ஆக இருந்தால்,அவர் உதவி கேட்டும் உதவாதது தவறு.

    அந்த பெண்மணி லிப்ட் use செய்ய தெரியாதவர் ஆக இருந்து ,அடுத்தவர் அவருக்கா செய்யவேண்டும் என நின்னைப்பது தவறு,அவருக்கு லிப்ட் எண்களை அழுத்த முடியாத சூழலில் இருந்து அவருக்கு உதவி கிடைக்க வில்லை ,என்றால் மிகவும் வருந்த தக்கது.

    பொதுவாக நாம் லிப்டில் முதலில் ஏறினால் பின் வருவவர்கள் இடம் மரியாதை கருதி நீங்கள் எந்த தளம் செல்ல வேண்டும் என கேட்பது வழக்கம் ,மற்றும் நாகரிகம் ,அவர்கள் தவிர்த்து அவர்களே press செய்வதும் உண்டு,சிலர் சொல்வதும் ,உண்டு,அந்த நபர் உடன் வருவவரும் தான் செல்லும் தளம் வருவதாக நின்னைத்து இருக்கலாம்.

    மரியாதை நிமித்தமாக கேட்டு இருக்க வேண்டும்.

    எதிலும் எதிர்பார்ப்பு இருத்தால் ஏமாற்றமே, எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்று கொண்டாள் எப்பொதும் சுகம் ,நிம்மதி.
    எதிர்ப்பார்ப்பு இருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று சுருக்கமாக சொல்லி விட்டீர்கள்.


    ஆயினும் மரியாதை நிமித்தம், அந்த இளைஞர் செய்து இருக்கலாம்.
    மிக்க நன்றி லட்சுமி.


  5. #15
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இதில் இன்னொரு கோணமும் இருக்கு. அந்த பெண்மணி மூன்று என்று சைகை செய்ததாக சொன்னீர். அந்த இளைஞன் பார்வையில் மரியாதை குறைவாக எண்ணி இருக்கலாம் (நான் என்ன இங்க லிப்ட் ஆப்பரேட்டரா? ). இளைஞர்களுக்கு என்றுமே அதிகாரம் பிடிக்காது. ஏன் யாருக்குமே பிடிக்காது.


    இதே அந்த பெண்மணி "தம்பி கொஞ்சம் மூண அழுத்துரியா பா" ன்னு சொல்லி, அந்த பையன் கண்டுக்காம இருந்திருந்தா, அது தான் உண்மைலேயே வருந்தக்கூடிய விஷயம்.. எனக்கென்னவோ அவன் கண்டிப்பா செஞ்சிருப்பான்னு தோணுது.
    உண்மை தான் ரதி.
    இப்போதைய இளைஞர்கள், அதிகாரம் என்ன, அறிவுரை கூட கேட்பதில்லை.
    தேங்க்ஸ் ரதி உங்கள் கருத்துகளுக்கு.


  6. #16
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சரி அந்த மகள் நடவடிக்கையின் அர்த்தம்..... அவள் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, தன் தாயைப்பற்றி தான் நெடு நாட்களாக சொல்லத்துடிக்கும் குற்றசாட்டை சொல்லிவிட்டாள். அதாவது அவள் மறைமுகமாக சொல்ல நினைப்பது " அம்மா நீ என்கிட்ட , மத்தவங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்குற.... சக்திக்கு மீறி.... என்னால/மத்தவங்களால உன்ன , உன் எதிபார்ப்ப திருப்தி செய்ய முடியல.... நீ எப்ப தான் இத புரிஞ்சிக்கப்போற."
    அடக் கடவுளே, இப்படி கூட இருக்குதா !!!!
    ரதி, நான் கூட நினைத்தேன். என்ன இந்த பெண் இப்படி சொல்லி இருக்காளேன்னு. இப்பதான் தெரியுது.
    தேங்க்ஸ் ரதி.





  7. #17
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    அந்த பையன் செய்தது தவறுதான்...அவனின் மன நிலை என்னமோ தெரியவில்லை, எதையும் ஈசியா எடுத்துக் கொள்ளும் குணம் படைத்தவனா இருந்தால் அவன் கண்டிப்பா உதவி பண்ணியிருப்பான், என்னை கேட்டால் சில முகங்களை பார்த்தால் உதவி கேட்காமல் இருப்பது உத்தமம்!!!!


  8. #18
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by kkmathy View Post
    அடக் கடவுளே, இப்படி கூட இருக்குதா !!!!
    ரதி, நான் கூட நினைத்தேன். என்ன இந்த பெண் இப்படி சொல்லி இருக்காளேன்னு. இப்பதான் தெரியுது.
    தேங்க்ஸ் ரதி.
    இது சாதாரண மன நிலை தான் மதி சிஸ். நம்மளால ஒருத்தரோட நடவடிக்கை பிடிக்காம எப்படி விமர்சிக்கறதுன்னு தயக்கமா இருக்குறப்போ வேற ஒருத்தர் அத செய்றப்போ நாமும் போய் சேர்ந்து இவ்ளோ நாள் தயங்குனத வெளிப்படுத்துவமே, அது தான்.


    இது எங்க வீட்ல பார்த்த விஷயம், அதனால தான் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது.


  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    Quote Originally Posted by kkmathy View Post
    இப்போதைய இளைஞர்கள், அதிகாரம் என்ன, அறிவுரை கூட கேட்பதில்லை.
    மதி சிஸ், இளைஞர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இன்னும், போன தலைமுறையை (எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பெரியோர் சொல்லை சொன்ன படி செய்தல்)போல் அவர்களும் இருக்க வேண்டும், என்று எதிர்பார்ப்பது தான் தவறு. அவர்கள் மாற வேண்டுமெனில் பெரியவர்களும் மாற வேண்டும். அவர்கள் கேட்பதில்லை என்பதை விட கேட்கும்படி மற்றவர்கள் சொல்வதில்லை.


    இதை என் பிள்ளைகளிடத்தில் காண்கிறேன். இவர்கள் தானே நாளைய இளைஞர். அதிகாரம் செலுத்தி என்னால் எல்லா சமயமும் ஜெய்க்க முடிவதில்லை. இதுல என் காலத்தையும் இவர்கள் காலத்தையும் ஒப்பீடு செஞ்சு, அது வேற என் டென்சன ஏத்தும். இவர்கள் என்னிடம் மரியாதை செலுத்துவதில்லை என்பதை விட, என்னால் அவர்களை சரியாக, மரியாதையாக நடத்த முடியவில்லை என்பது தான் நிதர்சனம். இரு பக்கமும் புரிதல் + மாற்றத்திற்கான போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.


  10. #20
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

    ஓரிருவரின் செயல்களை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது கோமதி.
    அந்த இளைஞன் என்ன மனநிலையில் இருந்தானோ????
    அந்த பெண்மணியின் செயல் அதிகாரம் செய்வது போல இருந்திருக்கலாம்.
    அல்லது அவர் உள்ளே செல்லும்போதே எண்ணை அழுத்திச் சென்றிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
    அந்த பெண்மணி ஒரு குறையும் இல்லாது active ஆக இருந்திருக்கலாம்.
    இப்படியாக பல காரணங்கள் இருந்திருக்கலாம்........
    இங்கு பலர் கூறியதுபோல மற்றவர்கள் எங்களுக்கு செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாது இருந்தால் இப்படியான செயல்கள் நடக்க வாய்ப்பில்லை.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter