Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரஙĮ


Discussions on "Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரஙĮ" in "Trying to Conceive" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

    ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மந்திரம்

    திருக்கருகாவூரில் உள்ள ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மந்திரம் மேல் அமைந்த மந்திரம் இது. இந்த மந்திரமும் சந்தான பாக்கிய அனுபவ நலன்களைத் தரக்கூடியதாகும். இதை ஒரு குருபுஷ்ய நட்சத்திரத்தன்றோ (வியாழக்கிழமை வரும் பூச நட்சத்திரம்), பானுபுஷ்ய நட்சத்திரத்தன்றோ (ஞாயிற்றுக்கிழமை வரும் பூச நட்சத்திரத்தன்றோ) ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.

    48 தடவைகள் இந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்து வருவதால் அன்னையின் அருள் கிடைத்து சந்தான பாக்கியம் கிடைக்கும். இதற்கும் வெள்ளி டம்ளரில் பசும்பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். பாலில் அரை ஸ்பூன் அளவு தேன் மட்டும் கலந்து கொள்ளவேண்டும்.

    அரச மரத்தில் கிழக்குப் பக்கமாகச் செல்லும் கிளையில் இருந்து ஒரு முழுமையான அரச இலையைப் பறித்து வந்து அதை நீரில் சுத்தமாகக் கழுவிவிட்டு, அதில் சந்தனம் தடவிக் கீழே வைத்து, அதன் மேல் பசும் பாலுள்ள வெள்ளி டம்ளரை வைக்க வேண்டும். ஸ்படிக மாலை கொண்டோ, அல்லது ருத்ராட்ச மாலை கொண்டோ 48 முறை, 108 நாட்களுக்குச் செய்து வர வேண்டும்.

    மந்திரம் பூர்த்தியான பிறகு பாலை தம்பதியர் இருவருமே அருந்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பூஜை பூர்த்தியான பிறகு ஆல இலைகளைச் சேர்த்து வைத்திருந்து 108 ஆனவுடன் அதை ஒரு நதியிலோ அல்லது குளத்திலோ, கடலிலோ விட்டு விட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் திருக்கருகாவூர் வந்து நேர்த்திக் கடன் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும்.

    ஸ்ரீ கர்ப் பரட்சாம்பிகையின் திருவுருவப் படத்தை பூஜைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பஞ்சோபசார பூஜையாகவே செய்து முடிப்பதும் விசேஷமாகும். இதற்குரிய மந்திரம் வருமாறு:-

    'ஓம் கர்ப்ப ரட்சாம்பிகையை ச வித்மஹே
    மங்கள தேவதாயை ச தீமஹி
    தந்நோ தேவி ப்ரஜோதயாத்'


    Read more: Sri Raja Rajeswari Manthiram - ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் ஸ்ரீ ரா



    Mantra for Conceiving

    Swayamvara parvathi Mantra:

    Om Hreem Yoginim Yogini Yogeswari Yoga Bhayankari Sakala Sthavara
    Jangamasya Mukha Hridayam Mama Vasam akarsha Akarshaya Namaha

    This Mantra increases the chances of conceiving a child, pregnancy, to overcome infertility, to prevent abortion etc.

    Read more: Mantra to Get Pregnant



    Sponsored Links
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

    தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
    தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹாம் சரணம் கத
    தேவ தேவ ஜகன்னாத் கோத்ரே விருத்திகரப் பிரபோ


    தேஹிமே தநயம் சீக்கிரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்



    - குழந்தை இல்லாத பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க இந்த ந்சதான கோபால கிருஷ்ண மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    =========================
    தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

    சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும்.
    புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும்.
    தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம்.
    முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும்.
    முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

    இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு.
    கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு.
    காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும்.
    பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

    அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
    மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
    சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
    க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
    மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
    த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
    க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
    க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
    பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
    த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
    ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
    லம்-இத்யாதி பஞ்சபூஜா

    மந்திரம்

    ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
    கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
    தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
    ஹ்ருதயாதி-ந்யாஸ
    பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
    த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்panam

    Read more: Santanagopala Mantra Or Solakas in Tamil


    ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
    ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தந யோக த்ருஸ்யாம்
    ஸாக்ஷőத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
    கோதாம் அநந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
    பொருள்: விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் குலத்தில் உதித்தவளே! ரங்கநாதரை மணம் செய்தவளே! பூமிதேவியின் அம்சமாகப் பிறந்தவளே! கருணையே உருவானவளே! கோதை நாயகியே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.





    Read more: Santanagopala Mantra Or Solakas in Tamil


    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

    ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியில்,



    சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி

    ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
    சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
    த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


    எனும் ஸ்லோகத்தில் ,


    "ஹே தேவி, சிவஸ்வரூபமான நான்கு சக்கரங்கள், சக்திவடிவமான ஐந்து சக்கரங்கள், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தாதுக்கள் ஒன்பது, உன்னுடைய பிந்து ஸ்தானத்துடன் கூடிய மந்திர கோணங்கள், எட்டு தளங்கள், பதினாறு தளங்கள், மூன்று மேகலைகள், மூன்று பிரகாரங்கள், ஆகியவற்றுடன் சேர்ந்து, 44 தத்துவங்களாக அமைந்துள்ளன."


    என்று ஸ்ரீசக்ரத்தின் வடிவத்தை விளக்குகிறார்.


    இந்த ஸ்லோகத்தை, காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 8 நாட்கள்,தினந்தோறும், 1000 முறை ஜபம் செய்தால், புத்திர சந்தானம் உண்டாகும். ஜபம் செய்துவிட்டு, வெல்லப் பாயசம், மஹாநைவேத்தியம் (பச்சரிசி சாதம் ஒரு பிடி, வேக வைத்த துவரம்பருப்பு ஒரு ஸ்பூன்,ஒரு துளி நெய் சேர்ந்தது) நிவேதனம் செய்ய வேண்டும்.




    Read more: Soundarya Lahari for Pregnancy - புத்திர சந்தானம் உண்டாகும்.சௌந்தர



    Mantra To prevent abortion



    Pumansam Patram Janey Tam Pumananu Jayatam Bhagvati Putranam Mata Jatanam Jamyashyam Yan" - atharvana veda


    Read more: Sloka to Prevent Abortion


    Moola Mantra to conceive and to prevent abortion

    Om hrim lajja jjalyam thah thah lah om hrim svaha

    Read more: Moola Mantra to conceive and to prevent abortion


    Garbarakshambigai sloka to conceive and to prevent abortion



    Aum devendhiraani namosthubyam Dhevendhira piriya baamini
    Vivaaha baakyam aarokyam puthra laabam sadhehime
    Padhim dhehi sudham dhehi Soubaakyam dhehime subhe
    Soumaangalyam subam Gnayanam Dhehime Garbarakshake

    Kaathyaayini mahaamaaye Maha yoginya dhisvari
    Nandhagoba seedham dhevam Padhim Megurudhe Namah



    Read more: Garbarakshambigai Sloka to conceive


    Garbha rakshambigai Gayathri Mantra (to conceive and also to prevent abortion)

    Om Garbharakshambigai vithmahe
    Manggala devatheye dhimahe
    Thanno devi prosothayat

    Read more: Garbha rakshambigai Gayathri Mantra to conceive and also to prevent abortion


    Jayanthy





  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

    Once you got conceived by God's grace, you may listen and chant the below mantras which are given in mp3 formats for your convenience.

    Please click the below link in which lots of links are given for this purpose.



    pregnancy mantras with mp3

    Jayanthy





  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரஙĮ

    வம்ச விருத்தி வழிபாடு

    வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்


    கே.குமார சிவாச்சாரியார்

    'கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் ஓடிப்போச்சு. இன்னும் வயித்துல ஒரு புழு-புச்சி தங்கலையே... அந்த சாமி கண்ண திறக்க மாட்டேங்குதே’

    'கோடி கோடியா சொத்து இருந்து என்ன பிரயோசனம்? வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேண்டாமா?’

    - இப்படி, குழந்தை இல்லாத குறையால் மருகித் தவிக்கும் குடும்பங்கள் நிறைய. பொண்ணும் மாப்பிள்ளையுமாக வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்கள் கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இருக்காது. சம்பாதித்ததை சந்தோஷமாக அனுபவிக்கும் கொடுப்பினை இல்லாமல் தவிப்பார்கள்.

    இன்னும் சில தம்பதிகள் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்போது பிள்ளைக்கனி வாய்க்காமல் போகும் சம்பவங்களும் உண்டு.

    இப்படி, குழந்தை இல்லாமல் மருகும் நிலை ஏற்படுவது ஏன்? சந்ததி இல்லாமல் சங்கடப் படும் நிலைக்கு, ஜாதகத்தில் என்னென்ன குறைபாடுகள் காரணமாகின்றன? அந்தக் குறைகளைக் களைவதற்கு என்ன வழி?
    அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

    கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றொரு கருத்து சொல்லப்படுகிறது.

    அதேபோன்று பெண்களுக்கு கருப்பையில் முட்டை வளர்ச்சி தடைப்படும்போது கரு தங்காமல் போய்விடுகிறது. இதற்கான காரணத்தை அறிய அவர்களின் சிலேஷ்டும நாடித்துடிப்பை அறிய வேண்டும். 56 நாடிகள் ஓடினால், கரு தங்கும். குறைந்தால் அதற்குத் தகுந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்களுக்கு உயிரணுக்களின் கவுன்ட்டிங் அதாவது எண்ணிக்கை '74 ஜீவ அணுக்கள்’ என்று இருக்க வேண்டும். குறைந்தால் குழந்தை பாக்கியம் தடைப்பட வாய்ப்பு உண்டு.
    மிக முக்கியமாக... குழந்தையின்மைக்கு உணவும் சூழலும்கூட காரணமாகின்றன.

    எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் என்பது கண்டிப்பாக உண்டு. திருமணமாகி 15 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து, தகுந்த பரிகார வழிபாடுகளை நம்பிக்கையுடன் செய்து வந்தால், விரைவில் பிள்ளைக்கனி வாய்க்கும்.

    பிள்ளை பாக்கியம் தடையாகும் ஜாதக அமைப்புகள்...
    * லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்து 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால், காலதாமதம் ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    * 5-ஆம் பாவாதிபதி 3-ல் இருக்க... சந்திரனும், 4-ஆம் பாவாதி பதியும் 6-ல் இருந்தால் தாயாரின் சாப தோஷத்தால் குழந்தை பிறக்காது தடை ஏற்படலாம்.

    * லக்னத்துக்கு ஒன்றில் குரு அமர்ந்து, குருவுக்கு ஒன்பதில் சுக்கிரனும், லக்னாதிபதியும் இருந்தால் 40 வயதுக்கு மேல் குழந்தை பாக்கியம் ஏற்படலாம்.

    * லக்னாதிபதி, 5-ஆம் பாவாதிபதி, 7-ஆம் பாவாதிபதி, வாரிசுக்கு உரியவரான குரு ஆகிய நால்வரும் வலிமை இல்லாதிருந்தால், வாரிசு பிறக்க தடை உண்டாகும்.

    * 5-ஆம் பாவத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திட, லக்னாதிபதி புதன் வீட்டில் இருந்து புதனின் பார்வையோ அல்லது சேர்க்கையோ ஏற்பட்டால், அந்த ஜாதகன் புத்திரன் இல்லாமல் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்.

    * 5-ஆம் பாவத்தில் ராகு அமர்ந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால், சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, பிறக்கும்போது குழந்தை இறந்துபோய்விட வாய்ப்பு உண்டு.

    * 7-க்கு உடையவன் 11-ல் அமர்ந்து, 5-க்கு உடையவன் சுபரின் இணைப்பு பெற்றிருக்க... செவ்வாயும் சனியும் 5-ல் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தத்து புத்திர யோகம் உண்டாகும் என்று பராசர ஹோராவின் விதிகள் சொல்கின்றன.

    * பொதுவாக 5-ஆம் இடமே புத்திரஸ்தானம், லக்ஷ்மி ஸ்தானம் எனப்படுகிறது. 5-ஆம் இடத்துக்கு உரிய கிரகமானது 12, 8, 6-ஆம் இடங்களில் பாவரால் சூழப்பட்டால், 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக பிள்ளைப்பேறு வாய்க்கும். இப்படியான கிரக அமைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு வாரிசு இல்லையே என்று முடிவு கட்டிவிடக் கூடாது.


    ஜாதக ரீதியான இந்த காரணங்களைத் தவிர, வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

    * வீட்டில் பித்ருக்கள் வழிபாடு முறையாக நடைபெற வேண்டும்.

    * கோயில், மடங்கள், குரு பீடங்கள் ஆகியவற்றின் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, வாரிசுத் தடை உண்டாகும்.

    * திருமணம் ஆகாமலேயே கன்னி ஒருத்தி இறந்திருந்து, அந்த கன்னிக்கு உரிய பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் வாரிசு தடை ஏற்படும்.

    * ஊரில் உள்ள அரசு, ஆல மரம் மற்றுமுள்ள தலவிருட்சங்களை உங்கள் வீட்டுப் பெரியவர்கள் எவரேனும் வெட்டியிருந்தால், பேரன் பிறக்காத நிலை உருவாகலாம். இதற்கு முறையான விருட்ச பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    * கெமிக்கல் கலப்பில்லாத உணவுப் பழக்கமும், மன அமைதியும் விரைவில் குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத்தரும்.

    சரி! இனி மேற்கண்ட குறைகளைக் களைந்து பிள்ளைப் பாக்கியம் பெறுவதற்கான வழிபாட்டை அறிவோம்.

    ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் நிறைந்த, அவர் வாசம் செய்கின்ற புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பதாலும், அதன் இலையை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

    சுக்கில சதுர்த்தி, பௌர்ணமி தினங்களில் சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து ஆல், அரசு, புரசம் சமித்துக் களால் ஹோமம் செய்து, அவரவர் குல சம்பிரதாயப்படி வழிபட புத்திரத் தடை நீங்கும்.

    வம்ச விருத்தி பூஜை

    பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

    அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

    'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

    மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

    தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
    வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா?

    ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.

    அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!

    - வழிபடுவோம்...
    வம்ச கவசம்!
    ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
    துர்க்காயை ஸததம் நம:
    புத்ரபாக்யம் தேஹி தேஹி
    கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
    ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
    ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
    மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
    ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
    ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
    வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
    கர்ப்ப ரட்சாம் குரு குரு
    குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
    நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
    கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
    சோஷய சோஷய ஸ்வாஹா
    அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
    ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
    கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
    அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
    ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
    அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter