சந்திரகலா

தேவையான பொருள்கள்

சர்க்கரையில்லாத கோவா - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
குங்குமப்பூ சிறிதளவு
ஏலப்பொடி சிறிதளவு
மைதா - 1 கப்
சூடான நெய் - 1/4 கப்
சமையல் சோடா சிட்டிகை
பால் சிறிதளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை


  1. சர்க்கரையில்லாத கோவா, ஒரு கப் சர்க்கரை, கு.பூ. ஏலப்பொடி சேர்த்து, வாணலியில் வைத்து லேசாக சூடு செய்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
  2. மைதாவில் சூடான நெய் ஊற்றி சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறிது தண்ணீர்விட்டு பூரிமாவு பதம் பிசையவும்.
  3. இந்த மாவை வட்டமாகத் தேய்த்து, அதனுள் கோவாவை வைத்து அரை வட்டமாக மூடி, சோமாஸி கரண்டியால் ஓரங்களை கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  4. 2 கப் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர்விட்டு, வழக்கம்போல் பால்விட்டு நுரைக்கும் அழுக்கை எடுக்கவும்.
  5. பிசுக்குபதம் பாகுகாய்ச்சி, பொறித்த சந்திரகலாவை பாகில் முக்கி எடுக்கவும்.


Similar Threads: