Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


 1. #21
  Uma manoj is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  5,416

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  சூப்பர் JV..

  எங்க மராத்தி திருமணத்தில் தாலி கட்டும்போது பையோனட அம்மா பார்க்ககூடாது..முதலில் அதை எடுக்கணும்..ஏன்னா எனக்கும் பையன் இருக்கானே..

  அடுத்து குடத்திலே மோதிரம் போடுவது,ஊஞ்சலில் ஆடுவது இது எனக்கும் பிடிக்கும்..அதை சேர்த்திடுவேன்..

  அப்புறம் திருமண ஆடம்பரத்தில் எனக்கும் விருப்பமில்லை...


  Sponsored Links

 2. #22
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Thanks for tagging me aunty!
  @gkarti grrrrrrrr naan appove sonnen la? naan lavender colour ai theme a vachiruppen nee vanthirunthaa

  Yes aunty . enga weddingsla bridesmaids and flowergirls thani special. avangaluku dress, jewelries, sandalsnu full make up um ponnu veettukkaaranga poruppu. appuram antha dress sandals laam avangaluku than so avanga wedding ku appuramum use panrathu polaththan vaanguvom Romba close friends, sisters ai select pannuvom. wedding grp photo avanga azhaga dress pannalainna sothappirum. En wedding ku naane en kaiyaala bridesmaids ku neckpiece la irunthu bracelet varai senju koduthen.


  ungalukkellaam church weddings pidikrathu pola enaku hindu weddings romba pidikum.

  Weddingla time edukkarathu ponnoda make up um intha video photo edukkaravangaloda atrocity um than! ithai pathi couples munnadiye plan pannanum. engalukkaaga ellaarum vanthirukkum pothu naama appadi avangalai wait panni thitta vaikka koodaathe... so chinna suggestions mattum
  En wedding ku munnad enga perimma 3 months munnadiye oru wedding notebook ready pannittaanga. first theme colourla aarambichu weddingla nadakkara ellaa sinna sinna vishayamum naanga munnadiye note down panniyachu. so engaluku romba easy aa irunthathu.
  Make up_ unga beautician ta strict a ungaluku exactly enna venumnu ketkanum. avangalai experiment panna vitta time thaan aagum. oru trial parthu finalize pannittomna time edukaathu.

  video and photo – ethukaaka ponnai avlo photo thaniyaa edukkarangalo therila.. enga weddingla naan konjam wait panni parthen..thanga mudila..light a perimmata faintish aa irukunu sollitten. avanga quick aa grp photovai eduthuttu church kilambanum avalai rest panna vidunga nu virattittaanga. appadiyum thaniya wedding CD parkum pothu ennai thaniyaa avlo neram ennaalaye paarkka mudilai. naan than edit pannum pothu kooda irunthen..so ellaam cuttitten. full make up, dress um therira pola oru 5 snaps, family kooda oru 10 snaps pothaatha? intha barathanatyam poses laam ethuku? grrrrrr.wedding la nadakkara rituals ai azhagaa capture panninaa pothume.. pudichavanga pannikkalaam..maththavanga strictaa no sollidungappa..chumma time waste than aagum ithunaala. thevaiyillaama sweat vera aagi namake enjoy panna mudiyaama poidum.

  veetla orutharai time manage panrathukkunne vaikkanum. avanga than ellaam time ku nadakkarathu poruppunnu vachaa engaloda wedding ai enga kooda sernthu mathavangalum enjoy pannitu povanga.

  appuram enaku pidicha innoru vishayam dance..bride and groom white dress la aadara first dance aagattum appuram friends kooda aadara dances aagattum semayaa irukum.

  Evening vaikkara church weddings romba pudikkum.

  then wedding speech! couples pathi friends and sibblings athuthan chance nu public la speech kodukarathu sema! kooda sernthu panna avlo atrocity aiyum ange open panniruvanga..most of the time funny aa enjoy pannaalum silar CV aiye read panrathu semma kaduppu!!!

  avlothaaan aunty


  Last edited by naanathithi; 24th Feb 2016 at 03:05 PM.

 3. #23
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by girija chandru View Post
  தமிழ் திருமணம் என்று ஒருமுறை இருக்கிறது

  பலருக்கு சமஸ்க்ருதம் ..தெரிவதில்லை.தமிழில் அருமையாக
  மந்திரங்கள் ஓதி திருமணம் செய்யலாமே !!
  en anna ponnu love marriage, ava kalyanathule thamizh le than mandhiram solli kalyanam pannanga, adhilum thalikkatrathukku munadi vandhavanga athanai peraum sila mandhirangalai solla solli avangalai vaztha sonnanga, romba pudhumayavum, manasukku niraivavum irundhudhu.


  KOTHAISURESH

 4. #24
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by gkarti View Post
  Mollll @Vimalthegreat En Closest Friend Maami thaan, Sema aatam avlo Wedding la Enaku antha Aasai Over.. North-Indian Wedding - Yeah Nekkum aasai daa
  Hahaha Molll vaikrom da unaku oru wedding Rajasthan and Mumbai la.....Ne camel mela irunthu pose kodu moll naan clickuren design design unai

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 5. #25
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் விமலா .

  ஏம்மா ...தை மாசம்தான் கல்யாணம் செய்வாங்களா என்ன ? இப்போ உள்ள மாசி , அடுத்து வர பங்குனி , வைகாசி எல்லாத்துலேயும் செய்வாங்களே

  HAha aunty season thaai maasam thana....wait pani thaai masam marg vaipangalay hindu tradition la.... timing miss agiduchey sonen

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 6. #26
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,116

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Hhahahaha @naanathithi Deiii Un Anniversary Time la varen, Nee again Pannu Appo Lavender theme vachukalam

  //intha barathanatyam poses laam ethuku? grrrrrr.// Hhahahahahahahaa

  @Vimalthegreat Molll,, Nijamathaan Soldriyaa


 7. #27
  saveetha1982's Avatar
  saveetha1982 is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  சவீதா லட்சுமி
  Gender
  Female
  Join Date
  Jan 2014
  Location
  Chennai
  Posts
  7,552

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  ஹாய் அக்கா,

  இது நல்லாயிருக்கே... ஓகே எனக்கு பிடிச்சது எல்லாம் நான் சொல்றேன் இப்போ... எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கும்... எங்க கல்யாணத்துல எனக்கு ஒரு விஷயம் பிடிச்சுது, கல்யாணத்துக்கு முதல் நாள் அவரோட தங்கை வந்து என் கையில கல்யாண வளவின்னு ஒரு இரண்டு டஜன் வளையல் ரெண்டு கையிலயும் போட்டு விட்டாங்க... ஒரே கலகல சத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சுது... அப்புறம் எனக்கு குடத்தில மோதிரம் போடுற விளையாட்டு, தேங்காய் உருட்டி விளையாடுறது, அப்பளம் உடைக்கிறது எல்லாம் ரொம்ப பிடிக்கும்... கிரிஜா போல எனக்கும் ஜாதகம் மேட்டர் பிடிக்கலை... (நானும் அதில் ஒருத்தி என்பதால் இருக்கலாம்...) ஜாதகமே பார்க்காம தான் காதல் கல்யாணம் எல்லாம் பண்ணுறாங்க... எங்கயும் உயர்ந்தும் போகலை, எங்கயும் யாரும் தாழ்ந்தும் போகலை... சோ இனி வேண்டாம் ஜாதகம்... இந்த ஊஞ்சல் விளையாட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு... அதையும் சேர்த்துக்கலாம்... சிம்பிள் கல்யாணம் தான் எனக்கும் பிடிக்கும்... கோவில்ல கல்யாணம், பெரிசா ஒரு ரிசப்ஷன்...

  ஊரே கூடி முதல் நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபத்துல தங்கி நம்ம சொந்ததுக்கிட்ட பேசுறதும்... குட்டீஸ் எல்லாம் ஓடியாடி விளையாடுறதும்... வயசு பசங்க எல்லாம் மண்டபத்துக்கு வந்த வயசு பொண்ணுங்களை பார்க்கறதும், அதுக்கு அந்த பொண்ணுங்க பதில் பார்வை பார்க்கறதும் இதெல்லாம் கூட ஒரு சுகம் தான் அக்கா... சிம்பிள் கல்யாணத்துல இது ரொம்ப சாத்தியப்படாது, ஏன்னா பெரும்பாலும் எல்லாரும் ரிசப்ஷன் வந்திட்டு சாப்பிட்டு கிளம்புறதுல தான் இருப்பாங்க...

  ஒரு முக்கிய விஷயம் சொல்லியே ஆகணும்... தயவு செய்து கல்யாண பொண்ணுக்கு ஆயிரத்தில இருந்து அதிகபட்சம் மூவாயிரத்துக்குள்ள மட்டும் புடவை எடுங்கன்னு கேட்டுக்கிறேன்... அந்த வெயிட்டான புடவையை அன்னைக்கு கட்டுறதே கஷ்டம் இதுல அடிக்கடி வேற நாம கட்டுவோமா என்னா... அப்படி பொண்ணுக்கு விலை கூட எதுவும் செய்ய நினைச்சா அவளுக்கு பிடிச்ச டிரஸ், நகை இப்படி எதுவும் வாங்கி கொடுங்க... வெயிட்டா புடவை வாங்கி கட்ட சொல்லாதீங்க... ஏன்னா அந்த புடவை எல்லாம் கட்டப்படாம பீரோவில தான் தூங்குது... கல்யாணத்துல சாப்பிட போறவங்க அவங்களுக்கு பிடிச்சதை மட்டும் வாங்கி சாப்பிட்டா சாப்பாடு வேஸ்ட் ஆகாது... அது போல கல்யாணம் பண்றவங்க, முன்னாடியே எல்லாமீ இலையில வைச்சுட்ட சாப்பாடு தான் வேஸ்ட் ஆகும்... அந்த கூட்டு பொரியல் பிடிக்காதவங்க அதை தொடவே போறதில்லை... இப்படி வேஸ்ட் பண்ணுறதை விட அதை முன்னாடியே வைக்காம இருக்கலாம்...

  சக்தி சொன்னா போல எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுறேன்னு நெத்தியில பட்டை பட்டையா விபூதிய அப்பி விடுறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க... விபூதி கண்ணுல பட்ட காண்டுல தான் இதை சொல்றேன்... பாதிக்கப்பட்டேன் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு... (எங்க ஊர்ல எல்லாம் விபூதி பூசுறது தான் வழக்கம்...) அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பொண்ணு மாப்பிள்ளையை ஒரு ஒருத்தர் கால்லயா விழ வைக்கிறதுக்கு பதிலா பெரியவர்கள் எல்லாம் ஒண்ணா எழுந்து நின்னா அவங்க ஒட்டுமொத்தமா கால்ல விழுவும் ஆசிர்வாதம் பண்ணா நல்லாயிருக்கும்... பாவம் ஏற்கனவே ஏக களைப்புல இருப்பாங்க அவங்க... இதுல பெண்டு நிமிர்ற அளவுக்கு விழுந்து எழறது ரொம்ப கஷ்டம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கப்பா... அநேகமா எனக்கு தோணின எல்லாம் சொல்லிட்டேன் நினைக்கிறேன்... வேற எதுவும் ஐடியா வந்தா இங்க வந்து சொல்றேன்... இப்போதைக்கு ஜூட் விட்டுக்கறேன்... தாங்க்ஸ் அக்கா... என்னை tag பண்ணதுக்கு...


  தோழமையுடன்...

  சவீதா முருகேசன்


  மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

  Stories of Saveetha


 8. #28
  SinduLakshmi Jagan's Avatar
  SinduLakshmi Jagan is offline Penman of Penmai
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  Sinduja
  Gender
  Female
  Join Date
  Aug 2015
  Location
  Chennai
  Posts
  820

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  @naanathithi

  Hey point le... ! oNnu onum nethi adi!

  Enoda sis oda marriage la kuda, avala nalla sirikka vechi video eduthanga... Velila irukura TV la poi partha engalalaye adha pakka mudiyala.. :(
  Then unga marriage la elam neegala 'vows' ezhuduvingala?? Engayum tamil laye mandiram sonna nalla irukum!

  உங்கள்அன்பிற்குரிய,
  சிந்துலட்சுமி ஜெகன்


  My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
  My stories

 9. #29
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  எனக்கு ஆடம்பர திருமணத்தில் எப்போதும் உடன் பாடு இல்லை .எளிமையான திருமணம் போதும் என்பது என் கருத்து.

  அடுத்து தனது செல்வ செழிப்பை காட்டும் விதமாக திருமண விழாவில் பரிமாறப்படும்.வித விதமான உணவுகள் சாப்பிடுவதை விட யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாவதை தவிர்க்கலாம்.ருசியான சிம்பிள் ஆன மெனு போதும்.

  ஆடம்பரமான இந்த சாப்பாட்டு செலவை குறைத்து.அந்த பணத்தில் ஒரு வேளைக்கு திருமணம் ஆன தம்பதிகள் கையால் மற்றொரு நாளில் முதியோர் இல்லம்,ஆதரவு அற்ற குழந்தைகள் இல்லம் சென்று சாப்பாட்டு வழங்கலாம்.

  அடுத்தது நாம் நம் முகூர்த்த சேலை மிகவும் விலை அதிகமாக பல ஆயிரம் கொடுத்து அதிக வேலைபாடுகள் சேலை வாங்குகிறோம் . அது அப்போதைக்கு பெருமையாக இருந்தாலும் ,பின் அதை வாழ்நாளில் அதிக முறை உடுத்த முடிவது இல்லை.அதிக பட்சம் நம் உடன் பிறந்தவர்கள் கல்யாணம்,நம் கணவர் உடன்பிறந்தவர்கள் கல்யாணம் மட்டும் தான் கட்டுவோம்.

  மாப்பிளை வீட்டில் முகூர்த்த சேலைக்கு செலவழிக்க நினைக்கும் பணத்தில் ,அழகான நல்ல விலையில் உள்ள, அடிக்கடி பல விழாக்களுக்கு உடுத்தும் விதமாக பல பட்டு புடவை எடுத்து தரலாம் ,அல்லது ஒரு நல்ல புடைவை ஒரு பத்து ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தில் தங்கம் அல்லது வேறு பொருள் வாங்கி தரலாம்.

  திருமண சமயத்தில் சில சமயம் சிலர் மாப்பிள்ளை வீட்டு பந்த காட்டுவார்கள்.அப்போது பெண் வீட்டார் திருமணம் நல்ல படியாக முடியவேண்டும் என்று பொருத்து போவார்கள்.ஆனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாது அது பெண்ணின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்று,அதை சிலர் எளிதாக எடுத்து கொண்டு திருமணத்திற்கு பின் சகஜமாக இருப்பது உண்டு.

  ஆனால் பலர் இதை மனதில் வைத்து கொண்டு சந்தர்ப்பம் வரும் போது கணவர் வீட்டாரை படுவதும் உண்டு (இதை தான் முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்லுவது உண்டு). திருமண உறவு என்பது கண்ணாடி பாத்திரத்தை போன்றது பார்க்க அழகாய் இருக்கும் அது அஜாக்கிரத்தையாய் யார் கையாண்டாலும் உடைவது நிச்சயம்.அதை மனதில் கொண்டு இரு வீட்டாரும் பரஸ்பரம் நம் குழந்தை நல்ல இருக்க வேண்டும் என்று விட்டு கொடுத்து வெட்டி பந்தா இல்லாமல் இரு வீட்டாருக்கும் சிரமம் இல்லாமல் ,தன் தகுதிக்கு ஏற்றவாறு திருமணம் முடித்தால் நல்லது.

  மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தவர்களின் வாழ்வு அவ்வளவாக சிறப்பாக இல்லை என்பது என் கருத்து(ஊர் கண்ணு படறமாதிரி திருமணம் இருக்க கூடாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்)

  Last edited by chan; 24th Feb 2016 at 04:52 PM.

 10. #30
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  முதலில் கார்த்திக்கு சிந்தனை செய் மனமே....ன்னு பாடிக்கொண்டு ஒரு விபரீதக் கற்பனை வந்தது... இப்போ உங்களுக்கா ஜெயந்தி? @jv_66

  sorry, just kidding... ஓகே, இங்கே நான் இந்த பதில் போடும்போது மூணு பேஜ் ஓடிருக்கு. ஜெயந்தியின் பதிலைக் கூட நான் இன்னும் படிக்கலை... முதலில் என் எண்ணத்தை சொல்லிட்டு யாரெல்லாம் நம்மோட ஒத்துப் போயிருக்காங்கன்னு verify பண்ணிக்கிறேன்...

  எனக்கு நான் பிறந்த இந்த மதமும் இதில் உள்ள சடங்கு சம்பிரதாயமும் ரொம்பவும் பிடித்ததுதான். ஆனால் சின்ன வயசில் வடஇந்தியர்கள் உடை, அவர்கள் way of wearing saree, வகிடு முழுக்க குங்குமத்தை இட்டுக்கொள்வது இதெல்லாம் பார்த்து அது மேலே ஒரு ஆசை இருந்தது. ஆனால் மடிசார் புடவையிலும் ஆசை இருக்கும். என் அம்மா பாட்டியிடமெல்லாம் கேட்பேன்... ஏன் நாம மடிசார் புடவையை சேட்டு மாமி மாதிரி தலையில் போட்டுக்கறதில்லை என்று...மொட்டை பாட்டி மாதிரி இருக்கும் போ... என்பார் என் பாட்டி. இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.

  அதே போல அவர்கள் திருமணத்தில் மாப்பிள்ளை குதிரையில் வருவதும், (அந்த வயசில் என் தீராத சந்தேகம் என்னன்னா, குதிரையிலிருந்து இறங்கியதும் அந்த பையன் நேரா nad
  நான் இருந்த ஊரில் அதிகமிருந்த சௌராஷ்டிரா இன மக்கள் திருமணங்களில் ரதம் போல அமைத்து அதில் ஜானவாசம் வருவதும் பார்க்கப் பிடிக்கும்.
  முஸ்லிம் இன திருமணங்களில் முகத்தை மல்லிகைப் பூவால் மறைப்பதை ஆச்சரியமா பார்த்திருக்கேன். ஏன்னா, முகத்தை மறைத்துக்கொண்டிருக்கும் மணமகன் குதிரையில் வரும்போது குதிரை மிரண்டுட்டா என்ன ஆகும்னு ஒரே பயமா இருக்கும்....(இதுவரை நான் வேற்று மத திருமணம் ஒன்று கூட attend பண்ணதில்லை... எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் பல திருமண மண்டபங்கள் இருந்தன... அதில் நடக்கும் திருமண ஊர்கோலத்தை பார்த்துமட்டும் இருக்கேன்...)அப்புறம் வளர்ந்த பின் நம்ம கல்யாணத்தில் இருக்கும் rituals எல்லாம் புரிந்தபின் அதை மாற்றும் விருப்பம் இல்லை.

  அடுத்து கற்பனை கல்யாணத்தை விட்டுட்டேனே... அதையும் சொல்லிடறேன்..

  எங்கள் திருமணங்களில் நலங்கு என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. திருமணம் முடிந்ததும் மணமகன் மணமகள் ஒருத்தருகொருத்தர் தலையில் அப்பளம் உடைப்பது, தேங்காயை tug of war மாதிரி இழுப்பது என்று. அதில் பாட்டு பாடுன்னு சொல்லி கொடுமைப்படுத்தறதை மட்டும் delete பண்ணிடனும். அப்புறம் பழைய காலக் கல்யாணம் போல மிகவும் நெருங்கின சொந்தக்காரர் மட்டும் இருக்க, வீட்டிலேயே திருமணம் நடக்கணும். friends, colleagues எல்லாம் அழைத்து பெரிய ஹோடேலில் அருமையான டின்னர் கொடுக்கணும். இது செலவையும் மிச்சப் படுத்தும், எல்லாரையும் பர்சனல்ஆ கவனிக்க வசதியாவும் இருக்கும். ஆனா அதுக்கு ரெண்டு வீட்டாரும் சம்மதிக்கணும்...

  Last edited by kasri66; 24th Feb 2016 at 05:32 PM.
  - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter