Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


 1. #51
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by sriju View Post
  ஹாய் J ஆன்ட்டி சூப்பர் திரி

  கல்யாணம்ன்னா எனக்கு எப்பவும் பொண்ணு மாப்பிள்ளை நியாபகம் எல்லாம் வந்ததே இல்லை ஆன்ட்டி. சொந்தமா இருந்தாலும் சரி, நட்பூசா இருந்தாலும் சரி நாம எப்படி போய் கலக்கணும் விழாவை எப்படி சிறப்பிக்கணும் இதான் என் முதல் யோசனை நீங்க சொன்னதும் தான் மத்தது கூட நியாபகம் வருது

  எனக்கு எல்லார் வீடு கல்யாணமும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை ஆன்ட்டி. சர்ச், முஸ்லிம் கல்யாணம், காரைக்குடி வீட்டில கல்யாணம், வாடா இந்தியா கல்யாணம், ஐயர் கல்யாணம், இன்னும் நிறையா..... இந்த வகையில எனக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி

  இப்போதைக்கு நான் எங்க சொந்தம் அண்ட் ஒரு மலையாள கல்யாணம் பார்த்துருக்கேன் இன்னும் நிறைய லிஸ்ட்ல இருக்கு காத்திருப்போம்...

  இதை எல்லாம் விட எனக்கு பீச் வெட்டிங் மேல ஒரு அலாதி பிரியம், நேர்ல பார்த்தே ஆகணும்ன்னு தீராத ஆசை @gkarti டேய் நம்ம கோவா ட்ரிப்ல இதையும் சேர்த்திக்கோ, நாம போறப்போ யாரும் கல்யாணம் பண்ணலைனா நாமளே யாரையாவது பிடிச்சு பண்ணி வைக்கிறோம்

  சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எனக்கு பாதி தெரியவே தெரியாது ஆன்ட்டி, எங்க குடும்ப கல்யாணம் எல்லாத்திலையும் என்னை வாசல்ல பன்னீர் தெளிக்க நிக்க வச்சி கொன்னுடுவாங்க, நான் கெட்டிமேளம் வாசிக்கும் பொது எல்லாம் ஓடி ஓடி போய் பார்ப்பேன்.. ஆனா அப்போ எல்லாம் தாலி கட்ட மாட்டாங்க நான் எந்த கெட்டிமேளம் வசிக்கும் போது போகலையோ அப்போ தான் கட்டுவாங்க.. கடுப்பாஆ இருக்கும். இப்போ கொஞ்சம் பெரிய பொண்ணுன்னு consider பண்ணி பனீர் வேலையை சின்ன பசங்களுக்கு கொடுத்துட்டாங்க...

  எங்க பெரியப்பா ஒருத்தர் சீர்திருத்த கல்யாணம் பண்ணினாரு, ரொம்பவே நல்லா இருந்தது. நோ மந்திரம் நோ ஹோமம் எல்லாரோட ஆசிர்வாதம் மாட்டும் இருந்தது

  ஆடம்பரம் மட்டுமே நம்மளை உயர்வா காட்டும்ன்னு நிறைய செலவு பண்ணி கல்யாணம் பண்றது எல்லாம் செட் ஆகாது ஆன்ட்டி, இருக்குறதை வச்சி எவ்வளவு சிறப்ப செய்யலாம்ன்னு திட்டம் போடுறது தான் புத்திசாலி தனம்.

  முக்கியமா சாப்பாடு விசயத்தில இப்போ எல்லாம் நிறைய செலவு பண்றாங்க அதை குறைச்சிக்கலாம். கண்டிப்பா சாப்பாடு தான் கல்யாணத்தை பத்தி பேச வைக்கும் ஆனா அதுக்காக 50 வகைன்னு இஷ்டத்துக்கு வைக்குறது அதில எவ்வளவு வீணாகுது, பந்தி போட்டு இலை வச்சி சாப்பாடு போட்டா அது தான் பேசும் எப்பவும்

  இப்போதைக்கு இவ்வளவு தான் ஆன்ட்டி தோணிச்சு அப்பறம் நியாபகம் வந்தா வருகிறேன்...

  தேங்க்ஸ் ஸ்ரீஜூ

  ஆஹா இப்போவாவது உன்னை பெரிய பொண்ணுன்னு மதிச்சு கல்யாணம் நடக்கிற இடத்துல விடுறாங்களா ...சூப்பர் சூப்பர் . இப்போ சடங்குகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரியவருதா ?

  எல்லாவகை கல்யாணமும் பிடிக்குமா உனக்கும் ...சூப்பர் சூப்பர் .இது எல்லாத்துலேர்ந்தும் கொஞ்சம் எடுத்து உன் கல்யாணத்துக்கு சேர்த்துடுவோம் .

  ஹா ...இதென்ன பீச் வெட்டிங் ??? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே ??!!

  ஹ...ஹ...ஹ...யாரையாவது ஏன் பிடிக்கணும் ? உனக்கே அந்த முறைல செய்துட்டா போச்சு இதை மட்டுமே கண்டிஷனா எல்லார்கிட்டயும் சொல்லிடு

  ஆமாடா ஸ்ரீஜூ ....எதுக்கு இந்த மாதிரி 50 வகையெல்லாம் ? எத்தனைப் பேருக்கு இதெல்லாம் பிடிக்குமோ தெரிலை .

  இருக்குறதை வச்சி எவ்வளவு சிறப்ப செய்யலாம்ன்னு திட்டம் போடுறது தான் புத்திசாலி தனம்
  ரொம்ப சரியா சொல்லிட்ட


  Sponsored Links
  Jayanthy

 2. #52
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by chan View Post
  எனக்கு ஆடம்பர திருமணத்தில் எப்போதும் உடன் பாடு இல்லை .எளிமையான திருமணம் போதும் என்பது என் கருத்து.

  அடுத்து தனது செல்வ செழிப்பை காட்டும் விதமாக திருமண விழாவில் பரிமாறப்படும்.வித விதமான உணவுகள் சாப்பிடுவதை விட யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாவதை தவிர்க்கலாம்.ருசியான சிம்பிள் ஆன மெனு போதும்.

  ஆடம்பரமான இந்த சாப்பாட்டு செலவை குறைத்து.அந்த பணத்தில் ஒரு வேளைக்கு திருமணம் ஆன தம்பதிகள் கையால் மற்றொரு நாளில் முதியோர் இல்லம்,ஆதரவு அற்ற குழந்தைகள் இல்லம் சென்று சாப்பாட்டு வழங்கலாம்.

  அடுத்தது நாம் நம் முகூர்த்த சேலை மிகவும் விலை அதிகமாக பல ஆயிரம் கொடுத்து அதிக வேலைபாடுகள் சேலை வாங்குகிறோம் . அது அப்போதைக்கு பெருமையாக இருந்தாலும் ,பின் அதை வாழ்நாளில் அதிக முறை உடுத்த முடிவது இல்லை.அதிக பட்சம் நம் உடன் பிறந்தவர்கள் கல்யாணம்,நம் கணவர் உடன்பிறந்தவர்கள் கல்யாணம் மட்டும் தான் கட்டுவோம்.

  மாப்பிளை வீட்டில் முகூர்த்த சேலைக்கு செலவழிக்க நினைக்கும் பணத்தில் ,அழகான நல்ல விலையில் உள்ள, அடிக்கடி பல விழாக்களுக்கு உடுத்தும் விதமாக பல பட்டு புடவை எடுத்து தரலாம் ,அல்லது ஒரு நல்ல புடைவை ஒரு பத்து ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தில் தங்கம் அல்லது வேறு பொருள் வாங்கி தரலாம்.

  திருமண சமயத்தில் சில சமயம் சிலர் மாப்பிள்ளை வீட்டு பந்த காட்டுவார்கள்.அப்போது பெண் வீட்டார் திருமணம் நல்ல படியாக முடியவேண்டும் என்று பொருத்து போவார்கள்.ஆனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாது அது பெண்ணின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்று,அதை சிலர் எளிதாக எடுத்து கொண்டு திருமணத்திற்கு பின் சகஜமாக இருப்பது உண்டு.

  ஆனால் பலர் இதை மனதில் வைத்து கொண்டு சந்தர்ப்பம் வரும் போது கணவர் வீட்டாரை படுவதும் உண்டு (இதை தான் முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்லுவது உண்டு). திருமண உறவு என்பது கண்ணாடி பாத்திரத்தை போன்றது பார்க்க அழகாய் இருக்கும் அது அஜாக்கிரத்தையாய் யார் கையாண்டாலும் உடைவது நிச்சயம்.அதை மனதில் கொண்டு இரு வீட்டாரும் பரஸ்பரம் நம் குழந்தை நல்ல இருக்க வேண்டும் என்று விட்டு கொடுத்து வெட்டி பந்தா இல்லாமல் இரு வீட்டாருக்கும் சிரமம் இல்லாமல் ,தன் தகுதிக்கு ஏற்றவாறு திருமணம் முடித்தால் நல்லது.

  மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தவர்களின் வாழ்வு அவ்வளவாக சிறப்பாக இல்லை என்பது என் கருத்து(ஊர் கண்ணு படறமாதிரி திருமணம் இருக்க கூடாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்)

  தேங்க்ஸ் லக்ஷ்மி .

  ரொம்ப அழகா சொல்லிட்டீங்க பல கருத்துக்களை . எல்லாமே valid பாயிண்ட்ஸ்.

  ஆமாம் . ரொம்ப பெரிய மெனுவா தயாரிச்சு வேஸ்ட் பண்ணாம , பணத்தை பிறருக்கு உதவலாம் . நல்ல ஒரு ஞாபகார்த்தமாவும் இருக்கும் .

  புடவை விஷயமும் ரொம்ப சரியா சொல்லிட்டீங்க . ஒரே புடவைக்கு இவ்வளோ செலவு பண்ணுறதை மேலும் நிறைய புடவைகள் வாங்கித் தந்தா , பல கல்யாணங்களுக்கும் விதவிதமா போட்டுக்க யூஸ்புல்லா இருக்கும் .

  ஆமா லக்ஷ்மி ....இந்த பந்தா காட்டுறதை பலரும் ரொம்பவே எதிர்பார்த்து செய்யறா மாதிரியே தோணும் . மத்தவங்க கஷ்டத்தையும் கண்டிப்பா உணரணும்.

  ஆஹா ...சென்டிமென்டாகவும் அடிக்கறீங்களே ..சூப்பர் சூப்பர் .

  பல உபயோகமான தகவல்கள் சொல்லிருக்கீங்க லக்ஷ்மி, தேங்க்ஸ்.

  Jayanthy

 3. #53
  sriju's Avatar
  sriju is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  srija bharathi
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  coimbatore
  Posts
  6,781

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  ஹா ஹா யா ஆன்ட்டி இப்போ எல்லாம் உள்ள விடுறாங்க

  இது கூட சூப்பர் ஆன்ட்டி எல்லாம் கலந்து புது விதமா பண்ணிடலாம்

  பீச் வெட்டிங் ஒன்னும் இல்லை ஆன்ட்டி மண்டபம் பதிலா பீச்ல கல்யாணம் mostly கிறிஸ்டியன் வெட்டிங் அப்படி நடந்து நான் படத்தில பார்த்திருக்கேன் Destination வெட்டிங்
  ன்னு கூட சொல்லுவாங்க ஆன்ட்டி ஹா ஹா எனக்கா ஹி ஹி பாவம் எங்க சுப்பு டாடி ஆன்ட்டி அவர் இஷ்டத்துக்கு பண்ணட்டும் எனக்கு

  நன்றி ஆன்ட்டி

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் ஸ்ரீஜூ

  ஆஹா இப்போவாவது உன்னை பெரிய பொண்ணுன்னு மதிச்சு கல்யாணம் நடக்கிற இடத்துல விடுறாங்களா ...சூப்பர் சூப்பர் . இப்போ சடங்குகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரியவருதா ?

  எல்லாவகை கல்யாணமும் பிடிக்குமா உனக்கும் ...சூப்பர் சூப்பர் .இது எல்லாத்துலேர்ந்தும் கொஞ்சம் எடுத்து உன் கல்யாணத்துக்கு சேர்த்துடுவோம் .

  ஹா ...இதென்ன பீச் வெட்டிங் ??? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே ??!!

  ஹ...ஹ...ஹ...யாரையாவது ஏன் பிடிக்கணும் ? உனக்கே அந்த முறைல செய்துட்டா போச்சு இதை மட்டுமே கண்டிஷனா எல்லார்கிட்டயும் சொல்லிடு

  ஆமாடா ஸ்ரீஜூ ....எதுக்கு இந்த மாதிரி 50 வகையெல்லாம் ? எத்தனைப் பேருக்கு இதெல்லாம் பிடிக்குமோ தெரிலை .  ரொம்ப சரியா சொல்லிட்ட 4. #54
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by kasri66 View Post
  முதலில் கார்த்திக்கு சிந்தனை செய் மனமே....ன்னு பாடிக்கொண்டு ஒரு விபரீதக் கற்பனை வந்தது... இப்போ உங்களுக்கா ஜெயந்தி? @jv_66

  sorry, just kidding... ஓகே, இங்கே நான் இந்த பதில் போடும்போது மூணு பேஜ் ஓடிருக்கு. ஜெயந்தியின் பதிலைக் கூட நான் இன்னும் படிக்கலை... முதலில் என் எண்ணத்தை சொல்லிட்டு யாரெல்லாம் நம்மோட ஒத்துப் போயிருக்காங்கன்னு verify பண்ணிக்கிறேன்...

  எனக்கு நான் பிறந்த இந்த மதமும் இதில் உள்ள சடங்கு சம்பிரதாயமும் ரொம்பவும் பிடித்ததுதான். ஆனால் சின்ன வயசில் வடஇந்தியர்கள் உடை, அவர்கள் way of wearing saree, வகிடு முழுக்க குங்குமத்தை இட்டுக்கொள்வது இதெல்லாம் பார்த்து அது மேலே ஒரு ஆசை இருந்தது. ஆனால் மடிசார் புடவையிலும் ஆசை இருக்கும். என் அம்மா பாட்டியிடமெல்லாம் கேட்பேன்... ஏன் நாம மடிசார் புடவையை சேட்டு மாமி மாதிரி தலையில் போட்டுக்கறதில்லை என்று...மொட்டை பாட்டி மாதிரி இருக்கும் போ... என்பார் என் பாட்டி. இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.

  அதே போல அவர்கள் திருமணத்தில் மாப்பிள்ளை குதிரையில் வருவதும், (அந்த வயசில் என் தீராத சந்தேகம் என்னன்னா, குதிரையிலிருந்து இறங்கியதும் அந்த பையன் நேரா nad
  நான் இருந்த ஊரில் அதிகமிருந்த சௌராஷ்டிரா இன மக்கள் திருமணங்களில் ரதம் போல அமைத்து அதில் ஜானவாசம் வருவதும் பார்க்கப் பிடிக்கும்.
  முஸ்லிம் இன திருமணங்களில் முகத்தை மல்லிகைப் பூவால் மறைப்பதை ஆச்சரியமா பார்த்திருக்கேன். ஏன்னா, முகத்தை மறைத்துக்கொண்டிருக்கும் மணமகன் குதிரையில் வரும்போது குதிரை மிரண்டுட்டா என்ன ஆகும்னு ஒரே பயமா இருக்கும்....(இதுவரை நான் வேற்று மத திருமணம் ஒன்று கூட attend பண்ணதில்லை... எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் பல திருமண மண்டபங்கள் இருந்தன... அதில் நடக்கும் திருமண ஊர்கோலத்தை பார்த்துமட்டும் இருக்கேன்...)அப்புறம் வளர்ந்த பின் நம்ம கல்யாணத்தில் இருக்கும் rituals எல்லாம் புரிந்தபின் அதை மாற்றும் விருப்பம் இல்லை.

  அடுத்து கற்பனை கல்யாணத்தை விட்டுட்டேனே... அதையும் சொல்லிடறேன்..

  எங்கள் திருமணங்களில் நலங்கு என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. திருமணம் முடிந்ததும் மணமகன் மணமகள் ஒருத்தருகொருத்தர் தலையில் அப்பளம் உடைப்பது, தேங்காயை tug of war மாதிரி இழுப்பது என்று. அதில் பாட்டு பாடுன்னு சொல்லி கொடுமைப்படுத்தறதை மட்டும் delete பண்ணிடனும். அப்புறம் பழைய காலக் கல்யாணம் போல மிகவும் நெருங்கின சொந்தக்காரர் மட்டும் இருக்க, வீட்டிலேயே திருமணம் நடக்கணும். friends, colleagues எல்லாம் அழைத்து பெரிய ஹோடேலில் அருமையான டின்னர் கொடுக்கணும். இது செலவையும் மிச்சப் படுத்தும், எல்லாரையும் பர்சனல்ஆ கவனிக்க வசதியாவும் இருக்கும். ஆனா அதுக்கு ரெண்டு வீட்டாரும் சம்மதிக்கணும்...

  தேங்க்ஸ் சித்ரா .

  ஹ ...ஹா ...இல்லல்ல ...ஒரு 10, 15 நாளாவே இதைப் பத்தி யோசிச்சுட்டே இருந்தேன் ...என்ன மாதிரி கொண்டுவரலாம்ன்னு .

  ரெண்டு பேருக்கும் எதேச்சையா ஒண்ணா கிளிக் ஆகிருக்கு . அவ்ளோதான் .

  ஆஹா ...ஏகப்பட்ட டவுட்ஸ் இருந்திருக்கே உங்களுக்கு , பற்பல கல்யாணங்களை பத்தி ...ஒருவழியா எல்லாம் கிளியர் ஆகிடுத்து இல்லையா ...சூப்பர் .

  ஹ ...ஹ...மடிசாரை தலைலையும் போட்டுக்கறதா ...

  குதிரைக்குதான் பழக்கமா ஆகிருக்குமே ..ஹி...ஹி

  நானும் வேற எந்த மதக் கல்யாணமும் பார்த்ததே இல்லை .

  ஹ ...ஹ...நலங்குல பாட்டு பாடுறதை நிறுத்திடணுமா ..கண்டிப்பா ...பையனோ பெண்ணோ மிரண்டு போய்ட மாட்டாங்களோ ..ஆனா இப்போல்லாம் ரொம்ப சிலர்தான் இந்த நலங்கெல்லாம் வைக்கிறா .

  உங்களுக்கும் சிம்பிள் மேரேஜ் தான் பிடிக்கறதா ...சூப்பர் .

  Jayanthy

 5. #55
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by sriju View Post
  ஹா ஹா யா ஆன்ட்டி இப்போ எல்லாம் உள்ள விடுறாங்க

  இது கூட சூப்பர் ஆன்ட்டி எல்லாம் கலந்து புது விதமா பண்ணிடலாம்

  பீச் வெட்டிங் ஒன்னும் இல்லை ஆன்ட்டி மண்டபம் பதிலா பீச்ல கல்யாணம் mostly கிறிஸ்டியன் வெட்டிங் அப்படி நடந்து நான் படத்தில பார்த்திருக்கேன் Destination வெட்டிங்
  ன்னு கூட சொல்லுவாங்க ஆன்ட்டி ஹா ஹா எனக்கா ஹி ஹி பாவம் எங்க சுப்பு டாடி ஆன்ட்டி அவர் இஷ்டத்துக்கு பண்ணட்டும் எனக்கு

  நன்றி ஆன்ட்டி
  ஓஹோ அப்படியா ...அப்போ மண்டப செலவு மிச்சமா ...இது கூட நல்லாருக்கே !!

  சூப்பர் பொண்ணுடா நீ ...அப்பா ஆசைக்கு இடம் கொடுக்கிற மகளா !!

  Jayanthy

 6. #56
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  @naanathithi @Uma manoj @girija chandru

  உங்களோட திருமண முறைகள் வித்தியாசமா இருக்கும் போலிருக்கே ...அதனால அவைகளை , நிதானமா யோசிச்சு , உங்களுக்கு டைம் கிடைக்கும்போது , வேணும்னா உங்க கல்யாண ஆல்பம் எல்லாம் பார்த்து (என்னென்ன சடங்குகள்ன்னு தெரிஞ்சுக்க ) இந்த கீழே உள்ள திரில போடுங்களேன் .

  பலரும் அந்த முறைகளைப் பற்றி தெரிஞ்சுப்பாங்க .


  இன்னும் மத்த யாருக்கெல்லாம் அவங்க கல்யாண முறைகளைப் பற்றி சொல்ல இஷ்டமோ அவங்களும் வந்து சொல்லலாம் .

  Different Customs and Traditions in Weddings....

  Jayanthy

 7. #57
  sriju's Avatar
  sriju is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  srija bharathi
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  coimbatore
  Posts
  6,781

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by jv_66 View Post
  ஓஹோ அப்படியா ...அப்போ மண்டப செலவு மிச்சமா ...இது கூட நல்லாருக்கே !!

  சூப்பர் பொண்ணுடா நீ ...அப்பா ஆசைக்கு இடம் கொடுக்கிற மகளா !!
  ஆமா ஆன்ட்டி மண்டபத்துக்கு இப்போ எல்லாம் இரண்டு லட்சம் ஆகுதமே!! பேசமா இப்படி முடிச்சிடலாம்... அம்பது chair ஒரு மேடை ஒரு முப்பது மீட்டர்க்கு வெள்ளை கலர் துணி அலங்காரமே அவ்வளவு தான் ஆன்ட்டி அப்பறம் அங்க அங்க கலர் கலர் பூக்கள்

  ஹா ஹா ஆமா ஆன்ட்டி கல்யாண விசயத்தில அப்படி தான்

  Last edited by sriju; 25th Feb 2016 at 01:06 PM.

 8. #58
  SinduLakshmi Jagan's Avatar
  SinduLakshmi Jagan is offline Penman of Penmai
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  Sinduja
  Gender
  Female
  Join Date
  Aug 2015
  Location
  Chennai
  Posts
  820

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் சிந்து .

  ஒ ....நார்த் இந்திய திருமணங்களை பார்த்து அப்படியே ஐக்கியமாயிட்டீங்க போலயே...கவலையை விடுங்க . உங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி உங்க கல்யாணத்துல இதே போல 5 நாள் கல்யாணம் நல்ல கிராண்டா செய்யச் சொல்லிடுவோம் . நல்லா என்ஜாய் பண்ணுங்க .

  வேற எது எப்போ தோணினாலும் வந்து சொல்லுங்க .
  Woww.. thanks aunty Apdi nadandha nalla dhan irukum... Sure vandhu solren...

  உங்கள்அன்பிற்குரிய,
  சிந்துலட்சுமி ஜெகன்


  My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
  My stories

 9. #59
  srikumarsavi is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  ......
  Posts
  1,485
  Blog Entries
  1

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  கல்யாணம் என்ற வார்த்தை மன மகிழ்ச்சி தரணும்.
  இரு தரப்பிற்கும் சுமையாகக் கூடாது.

  நான் பையன் வீடு என்று பந்தா பண்ண க்கூடாது
  உங்களால முடிஞ்சதை செய்ங்கன்னு சொன்னாலும் , சிலர் கேட்பதில்லை.
  நாலு பேர் என்ன சொல்வாங்களோன்னும்,இன்னும் சிலர் வாழ்நாளில் ஒரு முறை தானேன்னு அகலக்கால் வச்சு அவதிப்படராங்க
  அது அவரவர் status வெளிபடுத்தும் விஷயமாக இருக்க கூடாது.
  அது பத்திரிக்கையில் தொடங்கி நிகழ்வுகள் வரை.
  இதோ சில...
  பத்திரிக்கை என்பது ஒரு remainder மாதிரி. மணமக்களின் பெயர்கள்,குடும்பம் பற்றிய biodata ,இன்னார் வம்சம் என்பதாக அச்சிட்டு வெளி இடுவது. பல ஆயிரம் செலவில் தயாரிப்பதை விட,அது எளிமையாக இருக்கலாம்.
  எனக்கு தெரிந்து ஒரு திருமணத்தில் fruitsalad க்கு என imported fruits வாங்கி,தயாரிச்சு தந்தாங்க. ஆனா வந்தவங்க அது என்ன variety னு தெரியாம வாங்கி வீண் பண்ணினாங்க.
  ஒரே நேரத்தில ஏகப்பட்ட ரகம்-கரும்பு பால்,roller ஐஸ்,சோடா varieties,பருத்தி பால்,பாதாம் பால், ஐஸ்கிரீம்ஸ் varieties
  buffet இருந்தாலும் வாங்கி tasteபண்ணி வீண் பண்றாங்க.
  healthy food few combination ஓட இருந்தா நல்லா இருக்கும்.
  ஆடம்பரம் கட்டாயம் தவிர்க்கணும்.
  வரவேற்ப்பு அலங்காரம் என்ற பெயரில் வீணாகும் செலவுகளை தவிர்க்கலாம்.
  மிதமாய் விசேஷம்னு தெரியும் வகையில் செய்யலாம்.
  காய்கறி அலங்காரம்.வாடிய பின் தூக்கி குப்பையில் தான் போடுகிறார்கள்.

  எங்கப்பா friend ஒருத்தர் அவரோட மூன்று பெண்களுக்கும் கோவிலில் திருமணம்,பின் அருகில் இருக்கும் ஹோடேலில் தரமான விருந்து.கல்யாணத்திற்கு ஆகும் செலவுக்கு ஈடான பணத்தை மணமக்கள் இருவர் பெயரிலும் deposit செய்து விடுவார்.

  என் கருத்து முரணாக தெரியலாம்.
  அவரவர் குல வழக்கப்படி செய்யும் போது காண இனிமை.

  என் கூட வேலை பார்த்த தோழியின் மகன் திருமணம் -செட்டிநாட்டு வழக்கப்படியே நடந்தது.கானாடு காத்தான் ஏவிஎம்வீடு அருகில் செட்டிநாட்டு வீடு,சீர் வரிசை பார்த்து மலைத்தோம்.இது என்ன, அது என்ன, எதுக்கு இப்படி பண்றீங்கன்னு கேள்வி கேட்டு அவங்க வீட்டு பெரியவங்க பொறுமையா பதில் சொன்னாங்க.
  அனுபவிச்சோம்.சேரன் படம் பார்த்த மாதிரி இருந்தது..

  இன்னுமொரு அனுபவம் கேரளாவில்.
  before my marriage, அப்பாவுடன் churchல் நடந்த friend கல்யாணம் attend பண்ண போனோம். morning 11o’ clock marriage.நாங்க ஈரோடுலிருந்து train ல போனதால் before டைம் around 10.30AM reach ஆயிட்டோம்.கொஞ்சம் interior kerala near Thrissur.
  அங்க போனா, church பூட்டி இருந்தது. எங்களுக்கு ஒரே ஷாக்.ஏன்னா நாங்க பஸ்,then backwater ல boat ,திரும்ப ஆட்டோவில் travel பண்ணி reach ஆனோம்.தப்பா வழி மாறி வந்துட்டோமோன்னுகூட தோணித்து. நல்லவேளை பத்திரிக்கை கைல இருந்தது.verify பண்ணினோம்.அதே இடம் தான்.( செல் போன் use இல்லாத காலம்)திரும்பி போய்டலாம்னு பிளான் பண்ணி கிளம்பும்போது...
  sharp at 10.45AM சரசரன்னு நிறைய கார்கள் வந்தன.marraige group எல்லோரும் வந்து, father முன்னாடி marriage ஒரு ஒருமணி நேரத்துல முடிச்சாங்க.then பையன் வீட்டுக்கு கூட்டிண்டுபோய் non vegவிருந்து.
  பொண்ணு வீட்டுல எங்க ரெண்டுபேர மட்டும் வேற வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட ஏற்பாடு. நாங்க கிளம்பிட்டோம்.பையன் வீட்டுல இதுக்கு ஒதுக்கலை.marriage சாப்பாடு நாங்க தருவது தான் வழக்கம்ன்னு சொல்லி எங்களை விடலை.எதுக்கு இதைspecial ஆ சொல்றேன்னா,நாங்க மட்டும் தான் veg னு தெரிஞ்சு பையன் வீட்டுல - எங்க ரெண்டு பேருக்கும் nearby இருந்த அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்,அவங்களால முடிஞ்ச அளவு, அவசரமா veg items prepare பண்ணி அசத்திட்டாங்க.கஷ்டப்பட்டு அலைந்து தயிர் வாங்கி பரிமாறுனாங்க..அங்க தயிர் கிடைப்பது கஷ்டமாம்.மறக்க முடியாத அனுபவம்.
  உறவுகளை மதிச்சாங்க.அது மனசை தொட்ட விஷயம்.
  கல்யாணம் என்பது எளிமையாய் இருவரி இணைக்கும் நிகழ்வாக நெருங்கிய உறவுகள்அனைவரும் வாழ்த்த- நிறைவான எளிய விருந்துடன் அமைந்தால் சுகம்.
  Last but not least- எனக்கு பிடித்தது
  அப்பா மடியில் மடிஸார் புடவையை கட்டிக் கொண்டு அமர்ந்து அனைவரும் பூத்தூவி வாழ்த்த நிகழ்ந்த மாங்கல்ய தாரணம் .இப்பவும் நினைக்க இனிமை.
 10. #60
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  எமக்கு தகவல் கொடுத்த ஜெ.வி அவர்களுக்கு நன்றி!


  எனக்கு திருமணம் நடந்தயன்று அணைத்து சடங்குகளும் நடந்தது. கிட்டக்க ஒரு வாரம் சடங்குகள் நடந்தது. மாப்பிளைக்கு நலங்கு வைத்தல் ஆரம்பித்து, கல்யாணம் வரை சடங்குகள் நடந்தது. குறிப்பா, பொண்ணுக்கு மெட்டி அணிவதும், பானையில் மோதிரம் போட்டு, மாப்பிள்ளையும், பொண்ணும் சேர்ந்து மோதிரத்தை தேடி எடுப்போம். பிறகு கல்யாணம் விருந்து, முடிந்தவுடன் எங்கள் சொந்தகாரர்களுக்கு வேட்டி சட்டை மற்றும் பட்டு புடவைகள் கொடுப்போம். நானும் என் மனைவியும் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவோம். அந்த நேரத்தில், கொஞ்ச பணம் வசூலாகும். ஹீ ஹீ...


  இப்போதெல்லாம் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. காரணம் நம்ம ஊரு கலாச்சாரம் மாறி விட்டு வருவதால், சில குடும்பங்களுக்கு சில சடங்குகளை மறந்து விடுவார்கள்.


  இது மட்டுமல்ல, சில பெரு நகரத்தில், பணத்தை மிச்சபடுவதுக்காக, கல்யாணத்தை ஒரே நாளில் முடித்து விடுவார்கள். காலையில் கல்யாணம் நடைபெறும். மாலையில் திருமண வரவேற்பு விழா (Reception) நடைபெறும். என் கல்யாணத்தில் மூன்று நாட்களில் சடங்குகள் நடந்தது.  (தாமதமாக பதிவு செய்ததிற்கு, அடியேனை மன்னிக்கவும்.)  Attached Thumbnails Attached Thumbnails திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா-m-3.jpg   திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா-m-2.jpg   திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா-m-1.gif   திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா-m-4.jpg   திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா-m-5.jpg  

  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter