இப்படித்தான் மணப்பெண் தயாராகிறாள்

கல்யாணத்துக்கு முதல் நாள் அரக்கப் பரக்க பார்லர் விசிட்... பொருந்தியும், பொருந்தாமலும் ஏதோ ஒரு மேக்கப், ஹேர் ஸ்டைல்... கை நிறைய மெஹந்தி... கல்யாண புகைப்பட ஆல்பத்தை பார்த்தால், பெயின்ட் அடித்த மாதிரி மேக்கப்... அதுவும் வியர்வையும், கண்ணீரும் வழிந்ததில் கலைந்து போயிருக்கும். பிரைடல் மேக்கப் என்கிற பெயரில் மணப்பெண்கள் இப்படித்தான் அவதிப்பட்டார்கள், சமீப காலம் வரை.
இன்று கல்யாணத்துக்கு நாள் குறித்த கையோடு, பியூட்டி பார்லரில் அப்பாயின்மென்ட் வாங்குகிறார்கள்.

நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் 6 மாத இடைவெளி கிடைக்கிற பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். பின்னே... அந்த 6 மாத காலத்தில் சுமாரான தோற்றமுடைய அந்தப் பெண், பேரழகியாக உருமாறும் மேஜிக்தான் இப்போது மணப்பெண்கள் மத்தியில் லேட்டஸ்ட்!
ஒரு மணப்பெண் எப்படித் தயாராகிறாள், எந்தெந்த கட்டத்தில் என்னென்ன சிகிச்சைகள் அவசியம், மணப்பெண் அலங்காரத்தில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்... விளக்கமாகப் பேசுகிறார் வீணா.
இருக்கிற அழகு சாதனங்களை ஆளுக்கேத்த மாதிரி உபயோகிச்சது அந்தக் காலம். இப்ப ஒவ்வொருத்தரோட சருமத்துக்கும், கூந்தலுக்கும் எது பொருந்தும், எது கூடாதுனு தெரிஞ்சு, தனித்தனியான பொருள்களை உபயோகிக்க ஆரம்பிச்சிட்டோம். முன்ன ரெண்டு நாள் முன்னாடிதான் பார்லருக்கு போவாங்க. இப்ப மண்டபம் புக் பண்றதுக்கு முன்னாடியே பார்லரை புக் பண்றதுதான் ஃபேஷன். கல்யாணப் பெண்கள் பொதுவா 6 மாசத்துக்கு முன்னாடிலேர்ந்து சிகிச்சைகளை ஆரம்பிக்கிறதுதான் நல்லது. குறைஞ்சது 3 மாசத்துக்கு முன்னாடியாவது ஆரம்பிக்கணும். மாசத்துக்கொரு முறையோ, 20 நாளைக்கொரு முறையோ ஃபேஷியல் செய்யறது முக்கியம். முகத்துக்கு ஃபேஷியல் மாதிரி இப்ப ஒட்டுமொத்த உடம்புக்கும் பாடி பாலீஷ் வந்திருக்கு. உடம்பு முழுக்க உள்ள சருமத்துல இறந்த செல்களை நீக்கி, மசாஜ் பண்ணி, பேக் போட்டு, நீராவிக் குளியல் கொடுத்து, பிறகு குளிக்க வைக்கிற ஆடம்பரமான சிகிச்சை இது. கல்யாணத்துக்கு ஒருசில நாள் முன்னாடி இதைச் செய்துக்கிறது கல்யாணப் பொண்ணுங்களை தேவதை மாதிரி உணர வைக்கும். பொடுகு, முடி உதிர்வுனு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடியே சிகிச்சைகளை எடுத்துக்கிட்டாதான் பலன் தெரியும் என்கிற வீணா, மணப்பெண் அலங்காரத்தில் லேட்டஸ்ட் விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

தங்க ஃபேஷியல் இப்பவும் இருக்கு. ஆனா, பிளாட்டினம் ஃபேஷியல்தான் கல்யாணப் பொண்ணுங்களோட சாய்ஸ். சருமத்தை சிவப்பாக்கிற லைட்டனிங் ஃபேஷியலுக்கும் வரவேற்பிருக்கு. கல்யாணத்துக்கு சில நாள் முன்னாடி, அவங்களோட கல்யாணப் புடவையோட கலரை கொண்டு வந்து காட்டுவாங்க. அந்த கலருக்கு பொருந்தற மாதிரியான மேக்கப்பும், ஹேர் ஸ்டைலும் செய்து, ட்ரையல் பார்ப்போம். கல்யாணத்துல ஹோமப் புகையால கண்ணீரோ, வியர்வையோ வழிஞ்சு, மேக்கப் கலையாம இருக்க இப்பல்லாம் 100 சதவீதம் வாட்டர் ப்ரூஃப் மேக்கப்தான். ஃபோட்டோல பிரமாதமா தெரியணும்னு நினைக்கிறவங்களுக்கு ஹை டெஃபனஷன் மேக்கப். முன்னந்தலை பக்கம் தூக்கின மாதிரியான ஹேர் ஸ்டைல், புடவை கலர்லயே கல் வச்ச நெயில் ஆர்ட், கூந்தலோட ஒரு பகுதியை மட்டும் ஸ்ட்ரெயிட்டனிங் பண்றது, டாட்டூஸ்... இதெல்லாமும் லேட்டஸ்ட் என்கிறவர், மணப்பெண்களுக்கு டிப்ஸ் தருகிறார்.
மொபைல்ல ரொம்ப நேரம் பேசாம, போதுமான அளவு தூங்கணும். தூக்கம்தான் அழகுக்கு ஆதாரம்.
நிறைய தண்ணீர், பச்சை காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும்.ராத்திரி தூங்கப் போறப்ப, மேக்கப்பை
எடுத்துடணும்.நேரம் கிடைக்கிறப்பல்லாம் பப்பாளி, தேன் கலந்து முகத்துல தடவி, லேசா மசாஜ் பண்ணிக் கழுவறது, சருமத்தை பளபளப்பா வைக்கும்.
கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடிதான் வாக்சிங் பண்ணணும்.

கல்யாண புடவையை இஸ்திரி பண்ணிட்டுக்
கட்டினா, மடிப்பு அழகா வரும்.

Vasantham

Ganga

Similar Threads: