Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes

முதல் சந்திப்பு!


Discussions on "முதல் சந்திப்பு!" in "Weddings" forum.


  1. #21
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற கே

    ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

    1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

    2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

    3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

    4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

    5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

    6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

    7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

    8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

    9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

    10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

    11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

    நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........
    ... ஹாஹாஹா நான் சொல்ல மாட்டேனே


    Sponsored Links
    sumathisrini likes this.
    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  2. #22
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில.

    காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு.

    1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங் ன்னு ஒரு sms அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
    2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
    3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க
    4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
    5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
    6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
    7. நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
    8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
    9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், இந்த ட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும். (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
    10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
    இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  3. #23
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: முதல் சந்திப்பு!

    Quote Originally Posted by reshma View Post
    suji kannaaaa
    veetla solren seekirama date fix pannunganu(sujiku oru maaaaaaaaaaaasam porukarathu remba kastamnu...)...konjam porumai thevai...
    ata itha yeapdi kavanikkama vitten 3 nala.. atatata 3 days miss pannittene.. kathiruppathum oru sugam than paattiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  4. #24
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    பெண்களை கவர கணவர்கள் செய்ய வேண்டியவை

    1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
    2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
    3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
    4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்
    5. வாரந்தோறும் திரைப்படங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்
    6. வாரந்தோறும் நல்ல உணவகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
    7. அடிக்கடி அவர்கள் அழகாக இருகிறார்கள் அல்லது கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
    8. ஒரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ திரிஷாவைப் போலிருக்கிறாய் என்று. இன்னொரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ தமனாவைப் போலிருக்கிறாய் என்று சொல்ல வேண்டும்.
    9. அவர்கள் சேலை உடுக்கும் போது பக்கத்தில் நின்றும் இருந்தும் மடிப்புக்க்களை சரியாக சரி செய்து விடவேண்டும்
    11. அவர்கள் நச்சரிப்புக்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
    12. அவ்வப்போது அவர்கள் சொல்லும் உடல் வருத்தங்களை அவை போலியாக இருந்தாலும் கரிசனையுடன் கேட்டு அதற்கு பணம் செலவழித்து வைத்தியம் செய்ய வேண்டும்.
    13. அவர்களை சிரிக்கவைக்க நல்ல நகைச்சுவைகள் சொல்லவேண்டும்
    14. அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
    15. உங்களின் உறவினர்கள் பற்றி அவர்கள் சொல்லும் குறைகளை ஆமோதிக்க வேண்டும்.
    16. தொலைக்காட்சி(சென்னைத் தமிழில் டிவி) ரிமோட்டை அவர்கள் கைகளிலேயே விட்டு விடவேண்டும்
    17. அவர்களுடன் இருந்து தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டும்
    18. அவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
    19. அவர்கள் மணி கணக்காக தொலைபேசியில் பேச அனுமதிக்க வேண்டும்.
    20. பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
    21. பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்
    22. அவர்கள் செய்வதில் எவற்றை கண்டுக்காமல் இருக்க வேண்டும் எவற்றின்மீது கரிசனை காட்ட வேண்டும் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.
    23. அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
    24. அவர்கள் மீது அன்பாயிருக்க வேண்டும்.
    25 அவர்கள் மீது ஆசையாய் இருக்க வேண்டும்.
    26. இப்போது மீண்டும் முதலாவதிற்கு சென்று அங்கிருந்து தொடரவும்.

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter