Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....


Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.


  1. #141
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by premabarani View Post
    Then the Bride will go back to his hall. All the women will be dancing until the midnight.
    If the guy is very rich he will provide dinner for all the guests. Otherwise,all the guests will disperse only with the cake & snacks. Then the couple will be left in the suite & all the fly members will go back to their respective houses.
    Next day only close relatives visit the couple to give their gifts. Even the Bride's parents will give gifts like Tv, Micro-wave Or Fridge only. Only the Bride-Groom has to bear all the expenses. The Bride's parents will come like guests & leave like so. They don't accept presents from the friends.

    Very very long post.
    Prema Barani


    Thanks Prema, for the detailed post about the Arabic marriages. That's what I was wondering.....ennada idhu, edho paadhilaye finish aita maadhiri iruku nu (after reading only the 1st post).


    Sponsored Links
    premabarani and Prathyuksha like this.
    Jayanthy





  2. #142
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sangeetas View Post
    ஹாய் jv sis,

    நான் எங்க கேஸ்ட்ல எப்படி கல்யாணம் நடக்கும்னு சொல்றேன்..

    முதல்ல நிச்சயதார்த்தம் பண்றதுனா அதுலயே ரெண்டு வகை இருக்குங்க....

    1. நிச்சயம் பண்றப்பயே முகூர்த்த சேலை எடுக்குறது... அப்படி முகூர்த்த சேலை எடுத்தா, பெண்ணுக்கு பரிசம் போடுற மாதிரி... அதுக்கு, ஊரு முன்னாடி சொந்தக்காரங்க, தாய் மாமாகிட்ட சம்மதம் கேட்டுடு, அப்புறம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து கல்யாணம் முடியர வரை பெண்ணுக்கு சாப்பிடும் அரிசிக்கு, தினம் பூவுக்கும் பணம் தருவர்....

    அப்புறம் தேங்காய் உடைத்து, ஊர் முன்னிலையில் காட்டி, அதை முகூர்த்த புடவையின் முந்தியில் முடித்துவைத்து, சொந்தக்காரர்களிடம் ஆசி வாங்க வேண்டும்...

    முகூர்த்த புடவை வைத்து, பரிசம் போட்டுவிட்டால் பெண் வெளியூர் போக கூடாது... விளக்கு வைத்தபின் வெளிவரக் கூடாது!!!


    2) பரிசம் போடாமல், சாதாரண பட்டு புடவை குடுத்து, பெண்ணிற்கு பூ சூடி உறுதி செய்வர்.... பின் திருமணத்தின் முதல் நாள் பரிசம் போடுவர்....

    அப்புறம் தாலி கட்டுறப்ப மஞ்சள் சேலை தான் உடுத்தனும்... அதனால அவங்க அவங்க வசதிக்கு ஏற்ப பட்டு சேலை இல்லைனா காட்டன் சேலை எடுத்துக்குவாங்க...

    அதே மாதிரி கல்யாணம் அன்னைக்கு பெண் போடுற உள்ளாடை கூட மாப்பிள்ளை வீட்டார் தான் எடுத்துகுடுக்கனும்... அப்புறம் கூரைப்புடவை எடுப்பாங்க...

    ஒரு நல்ல நாளில் தாலி செய்வர்.... தாலி 1 பவுனுக்கு குறைவாகவே செய்வர்... அதன் அமைப்பு ஒரு குழி அமைப்பும், மேல் நுனியில் பூ அமைப்பும் இருக்கும்!!!

    கல்யாண முறை பத்தி சொல்றேன்!!!

    பெண் தயாராகி தங்கள் மண்டபத்தில் இருக்க, மாப்பிள்ளை வீட்டார், மாப்பிள்ளையுடன் மஞ்சள் சேலையுடன் சீர் எடுத்து வருவர்....

    அதற்கு முன்னே, மாப்பிள்ளைக்கு, அவரின் தாய் மாமன் மெட்டி அணிவித்து, மாலை சூட்டி இருப்பார்...

    அதேபோல் பெண்ணிற்கும் அவரின் தாய் மாமா, மெட்டி மட்டும் அணிவித்துவிட்டு, மாப்பிள்ளை வீட்டாரை எதிர் நோக்கி இருப்பர்...

    மாப்பிள்ளை வீட்டார், மஞ்சள் சேலையுடன் பெண் அழைக்க வருவர்... அவர்கள் வந்து, நல்ல நேரத்தில் சேலை குடுத்து அதை பெண் உடுத்தி வந்ததும், பெண்ணின் தாய்மாமா அவருக்கு சிறிய மாலையை அணிவிப்பார்...

    மாப்பிள்ளை முன் செல்ல, பெண் வீட்டார் அவர்களை தொடர மண்டபம் வருவர்.... அங்கு இருக்கும் விளக்குகள், அக்னியை கும்பிட்டுவிட்டு, மாப்பிள்ளை வீட்டார் தரும் மாலைக்காக காத்து இருப்பர்.. மாப்பிள்ளையின் தாய்மாமா அவருக்கு கல்யாண மாலை அணிவித்ததும்.. பெண்ணுக்கு கல்யாண மாலை அணிவிக்கப்படும்...

    பின் மேடையேறி அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு, இறங்கி அக்னியில் மந்திரம் ஓதி முடித்தவுடன், தாலி கட்டுவார் மாப்பிள்ளை... முதல் முடிச்சு மாப்பிள்ளையும், மற்ற இரண்டு முடிச்சுக்களை மணமகனின் சகோதரி அல்லது அத்தை போடுவர்... (எனக்கு இவரே போட்டுட்டாரு....)

    அப்புறம் மணமகன் மற்றும் மணமகள் பெற்றோர்களை விழுந்து வணங்க வேண்டும். அதன் பின் சேர்த்து வைத்து கும்பிடுவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு....

    மணமக்களை மேடையில் உட்கார வைத்து, இருவரின் கைகளை பற்றியிருக்க சொல்வர்...( எல்லா தம்பதிக்கும் கசக்குமா என்ன?) பின் இருவரின் தோள்களை ஒரு மஞ்சள் வேட்டியை கொண்டு மறைப்பர்.. அதில் அந்த பிணைந்த கைகளும் அடங்கும்..(அங்க நிறைய சமாச்சாரம் நடக்கும்ங்க), மஞ்சள் அரிசி அட்சதையை எடுத்து, உறவுகள் அனைவரும்... “என்றும் சேர்ந்து, எங்களைப் போல் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று” ஆசி கூறி அட்சதை தூவுவர்...

    மதிய உணவில் ஒரு விசேஷம் உண்டுங்க..... அதன் பெயர் “மாப்பிள்ளை காஃபி” என்பர்....

    பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கும், அவர்களின் குறிப்பிட்ட சில உறவுகளூக்கும் தனியாக ஒரு “கறி வகை” சாப்பாடு நடக்கும்.... அது தான் “மாப்பிள்ளை காஃபி”

    அதன் பின் நல்ல நேரம் பார்த்து, மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விளக்கேற்றி, பால், பழம் முடித்து பெண்ணை, அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவர்.....

    அதன்பின் சாயந்திரம், நல்ல நேரத்தில் பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவர்.. பெண் கூரைப்பட்டு தான் உடுத்த வேண்டும், ஆனால் இப்பொழுது அதை யாரும் விரும்பாததால் முகூர்த்த புடவையே கட்டிவிடுவர்..

    பெண் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைக்கு, பெண்ணின் தாயார் இருவருக்கும் பால், பழம் ஊட்டிவிட வேண்டும்..

    பின் பெண் கையில் பெரிய குத்துவிளக்கு குடுத்து, மாப்பிள்ளை வீடு வரை பிடித்து வர வேண்டும்.. கீழே வைக்க கூடாது.... பயங்கர கனமா இருக்கும்....

    இது தான் எங்கள் கல்யாண சம்பிரதாயம்..........


    ரொம்ப நல்லா இருக்கு சங்கீதா , உங்க கல்யாண முறை .

    ஆமாம் . இந்த காலத்துல , பரிசம் போட்ட அப்புறம் , வெளிய போகக் கூடாதுனா, நடக்குற காரியமா .....

    நிறைய custom ல , கல்யாணத்துக்கு முன்னாடியே மெட்டி போடுறாங்க , அப்புறம் , மாப்பிள்ளைக்கும் மெட்டி இருக்கு ....((பேசாம , இந்த மாப்பிள்ளையோட மெட்டியும் அப்பிடியே வாழ்நாள் பூரா இருக்கணும்னு சொல்லி இருக்கலாம் ).


    (எனக்கு இவரே போட்டுட்டாரு....)
    அவ்ளோ அவசரமா இல்ல ஆதிக்கமா (தன்னுடையவளுக்கு தானே தான் கட்டணும்னு )......


    அதில் அந்த பிணைந்த கைகளும் அடங்கும்..(அங்க நிறைய சமாச்சாரம் நடக்கும்ங்க), மஞ்சள் அரிசி அட்சதையை எடுத்து, உறவுகள் அனைவரும்..


    ஏம்பா , சங்கீதா , இந்த அட்சதை தூவுறது , எல்லாரும் சேர்ந்து ஒரே சமயத்துல செஞ்சுடுவாங்களா.....இல்ல ....ஒவ்வொருத்தரா , அட்சதை போட்டா , இந்த தம்பதிகளின் , கசமுசா ......ரொம்ப நேரம் நீடிக்கலாமே அப்டின்ற நல்லெண்ணம் தான் .......


    பெண் கூரைப்பட்டு தான் உடுத்த வேண்டும், ஆனால் இப்பொழுது அதை யாரும் விரும்பாததால் முகூர்த்த புடவையே கட்டிவிடுவர்..


    முகூர்த்த புடவை வேற , கூறைப்பட்டு வேறயா பா ?

    Jayanthy





  3. #143
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by Prathyuksha View Post
    ..

    Jayanthi aunty, pen paarkum padalam pathi oru thread kuda start panunga aunty... Neraya interesting vishayam kedaikum polayae...

    -Prathyuksha


    Special thread for Arranged Marriage Couples




    Already indha above thread iruku da Pratyu. Indha thread la, ennai pola niraya members, avanga, pen paarkum padalam lerndhu, kalyanam varai, kadhai kadhaiya solli irukom.

    Adhe pola, Love marriage couples kum thread iruku. adhulayum ekkachakkama stories iruku.

    So, Vanitha, Premabarani, Sangeeta, Lakschellam, innum yaarellam married members o, avanga ellam, indha thread la vandhu, thangaloda stories um share pannunga please.


    premabarani and Prathyuksha like this.
    Jayanthy





  4. #144
    sangeetas's Avatar
    sangeetas is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Sangeeta Sankarapandian
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    1,114

    Re: Different Customs and Traditions in Weddings....

    haai jv sis....

    hahaha.... nenga soldrathu correct.... அதுனால இப்போ பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரும் வொர்க் பண்ணா, கல்யாணம் முதல் நாள் பரிசம்....

    அப்புறம் மாப்பிள்ளைக்குலாம் இப்ப அந்த விதிமுறை இல்லங்க.... வேற ஊருல வேலை பாக்குறதால யாரும் பெருசா எடுக்குறது இல்லை!!

    ஆனால், இது தான் சம்பிரதாயம்.....!!!!


    அட அமாங்க, அவ்ருக்கு அவர் வெய்ப்கு அவரு தான் போடுவேன்னு ஆசையாம்.... அதான்..

    அப்புறம் அந்த அட்சதை இருக்கே.... அது ஜோடி, ஜோடியா வரும் தம்பதியர்.. தனிதனியா தான் வாழ்த்துவாங்க.... அதுனால இந்த முறையே எப்படியும் 2 மணி நேரம் நீடிக்கும்... அப்ப பாத்துக்கோங்க... அவங்க எஞ்சாய் பண்ணுவாங்க....

    ஆமா, முகூர்த்த புடவை சிகப்பு கலர் அல்லது மஞ்சள் கலை எடுப்பாங்க...

    கூரைப்புடவை எப்பயும் காட்டன் தான் (கைத்தறி புடவை)!!
    அது இரவு சம்பிரதாயத்துக்குனு வச்சி இருக்குறது...

    அது தான் சாயந்திரம் பெண் அழைப்புக்கு உடுத்தனும்.... ஆனா அது கொஞ்சம் கூச்ச விஷயம்னால, அந்த சிகப்பு சேலை கட்டுவாங்க.....


  5. #145
    Gitikaa is offline Friends's of Penmai
    Real Name
    Kalyanee
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    Macclesfield
    Posts
    154

    Re: Different Customs and Traditions in Weddings....

    Hi friends,

    Nice to read and know abt all the customs & traditons that occur in differrent marriages...very interesting....thanks for all these informations....

    Regards,
    Kalyanee..

    jv_66 likes this.

  6. #146
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by Gitikaa View Post
    Hi friends,

    Nice to read and know abt all the customs & traditons that occur in differrent marriages...very interesting....thanks for all these informations....

    Regards,
    Kalyanee..

    Welcome to Penmai. ....Kalyani.

    You may also share your customs and traditions in your marriage.

    You may share your marriage story in the below thread


    Special thread for Arranged Marriage Couples





    sangeetas likes this.
    Jayanthy





  7. #147
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by jv_66 View Post
    Special thread for Arranged Marriage Couples




    Already indha above thread iruku da Pratyu. Indha thread la, ennai pola niraya members, avanga, pen paarkum padalam lerndhu, kalyanam varai, kadhai kadhaiya solli irukom.

    Adhe pola, Love marriage couples kum thread iruku. adhulayum ekkachakkama stories iruku.

    So, Vanitha, Premabarani, Sangeeta, Lakschellam, innum yaarellam married members o, avanga ellam, indha thread la vandhu, thangaloda stories um share pannunga please.

    Andha thread pathuruken aunty...
    Ana padichadhilla (aparam ennatha kizhichanellam kekadhinga... hehehe... thread rmba perusa irundhudhu... Adhan neraya time kedaikarapo padikalamnu vitu vechuruken...)

    -Prathyuksha


  8. #148
    krishnadharu's Avatar
    krishnadharu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Banglore
    Posts
    118

    Re: Different Customs and Traditions in Weddings....

    Good Job

    jv_66 likes this.

  9. #149
    kp_rajeswari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    USA
    Posts
    77

    Re: Different Customs and Traditions in Weddings....

    ஹலோ மக்களே
    கதை கேளு கதை கேளு ன்னு நானும் கல்யாண கதை சொல்ல வந்துருக்கேன்..
    இங்க எல்லாருமே அவங்கவங்க கல்யாண முறைய ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க....
    இந்த திரி ஆரம்பிச்ச ஜெயந்தி அக்காவுக்கு முதல்ல பெரிய தேங்க்ஸ்...
    நிறைய விஷயங்கள பத்தி எல்லாரும் தெரிஞ்சிக்க முடிஞ்சது...
    இப்போ எங்க கதைக்கு வரேன்..
    என்னோட கல்யாணம் இதுக்கு முன்னால அனு சொன்னாங்களே அந்த முறை கல்யாணம்தான்.. ஆனா arranged marriage..
    ஊருக்கு ஊர் கொஞ்சம் மாறும் இல்லையா... அந்த மாதிரி கொஞ்சம் மாற்றம் இருக்கும்..
    முதல்ல பொண்ணு பாத்து, ஜாதகம் பாத்து எல்லாம் செட் ஆயிடுச்சுன்னா நேர்ல மாப்பிள்ள வீட்டுக்காரங்க (ரொம்ப நெருங்கின சொந்தம் மட்டும்) போய் பொண்ணு வீட்ல பூ வச்சுட்டு வருவாங்க.. இப்போதான் பொண்ணு வீட்ல சாப்பிடுவாங்க..
    அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை வீடு பாக்குறது...
    இதுக்கு பொண்ணு வீட்ல இருந்து அவங்களும், அவங்களோட ரொம்ப நெருங்கின சொந்தக்கரங்களும் மாப்பிள்ளையோட வீட்டுக்கு வந்து பேசிட்டு அங்க சாப்பிட்டுட்டு போவாங்க...
    இதுக்கு அப்புறம் கல்யாணம் ரொம்ப நாள் கழிச்சு வைக்க போறதுன்னா நிச்சயதார்த்தம் பெருசா வைப்பாங்க...
    அப்படி இல்லன்னா பூ வைக்கப்போறதே நிச்சயம் மாதிரி பண்ணிடுவாங்க..
    அதுக்கு அப்புறம் பரிசம் போடுறது.. இது ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி எங்க பக்க கல்யாணத்துல..
    பரிசம் போடுறதுன்னா கிட்டத்தட்ட நிச்சயம் மாதிரித்தான்.. ஆனா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுக்கு பரிசம் போடணும்... அதாவது இவ்வளவு நகை இல்லன்னா இவ்வளவு பணம் கொடுக்குறோம்னு சொல்லி பொண்ணுக்கு நகையோ பணமோ கொடுக்கணும்..
    இந்த நேரத்துல பொதுவா தெலுங்குல பேசுவாங்க...
    இரண்டு பிரிவா உக்காந்திருப்பாங்க... ஒரு பக்கம் பொண்ணோட அப்பா(சித்தப்பா, பெரியப்பா), அண்ணன் முறை வர்ற ஆள்களும் இன்னொரு பக்கம் பையனோட அப்பா, அண்ணன் முறை வர்றவங்களும் இருப்பாங்க...
    அவங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கும்.... எங்க பொண்ணு அப்படி, இப்படி ,எங்க குடும்ப பாரம்பரியம் அப்படி ... உங்க பையன் ரொம்ப குடுத்து
    வச்சுருக்கணும்.. நீங்க எவ்வளவு பரிசம் போடப்போறீங்க ... உங்க பையன் என்ன படிச்சுருக்கான்.. சொந்தமா வீடு இருக்குதா... இப்படி எல்லாம்
    கேப்பாங்க... ஏதோ ஐயோ பாவமேன்னு இவங்க பொண்ண அவங்களுக்கு குடுக்கிற மாதிரி பேசுவாங்க..
    அதுக்கு அவங்க பக்கம் இருக்குறவங்க பதிலுக்கு அவங்களோட பெருமைகள அள்ளிவிட்டு ஏதோ பெரிய மனசு பண்ணி உங்க குடும்பத்துல சம்பந்தம்
    பண்றோம்ங்கிற மாதிரி பேசுவாங்க...
    இது எல்லாமே மேடைல நடக்கும்..
    அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை வீட்ல இருந்து கொண்டு வந்த சீர் தருவாங்க.. 7 தட்டு, இல்லன்னா 9 தட்டு இல்ல 11 தட்டு இப்படி சீர் எடுத்துட்டு
    வருவாங்க.. அதுல பூ, பழம், ஸ்வீட்ஸ், பொண்ணுக்கு சேலைல இருந்து சீப்பு வரைக்கும் எல்லாமே இருக்கும்... கல்யாணத்துக்கு விலை அதிகமான
    சேலை எடுப்பாங்கள்ள ... எங்களுக்கு பரிசத்துக்கு தான் அதிக விலைல எடுப்பாங்க..

    jv_66, ponschellam and Prathyuksha like this.

  10. #150
    kp_rajeswari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    USA
    Posts
    77

    Re: Different Customs and Traditions in Weddings....

    ஒரு பொண்ணுக்கு பரிசம் போட்டாச்சுன்னா அந்த பொண்ணு அவங்க வீட்டு பொண்ணு மாதிரிதான்...
    அப்புறம் பொண்ணு வந்து சபைய வணங்கிட்டு புடவை சீர் தட்ட வாங்கிட்டு போகணும்.அப்போதான் பரிசம் போடறத (நகையோ பணமோ)பொண்ணுகிட்ட
    குடுப்பாங்க.
    அதுக்கு அப்புறம் வழக்கம் போல தான்... புடவைய மாத்திட்டு வந்து தடால் ... தடால் தான்... அதாங்க கால்ல விழுந்து எல்லார்கிட்டையும் ஆசீர்வாதம் வாங்குறது..

    இதுக்கு அடுத்த வைபவம் முஹூர்த்தக்கால் நட்றது.. இத மஞ்சப்பொடி இடிக்குறதுன்னும் சொல்வாங்க..
    இந்த function பொதுவா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி மாப்பிள்ளை வீட்ல நடக்கும்... இதுக்கு மாப்பிள்ளை கண்டிப்பா இருக்கனும்ங்கிறதனால
    இப்போல்லாம் 3 அல்லது 4 முன்னாடி தான் நடக்குது.. (பாவம்.... லீவ் கிடைக்கனுமில்ல) . வீட்டுக்கு முன்னாடி சின்னதா குழி தோண்டி அதுக்குள்ள எல்லா பெரியவங்களும்(ஆண்கள்) பால் ஊத்துவாங்க. அதுக்குள்ள பந்தக்கால் நட்டுவாங்க. அப்புறம் வாசல்ல ஒரு உரல் சுண்ணாம்பு , காவி அடிச்சு காப்பு கட்டி வச்சுருப்பாங்க.உரல்ல விரல் மஞ்சள் போட்டு ரெண்டு ரெண்டு பேரா வீட்டு பெண்கள் எல்லாரும் ஆளுக்கொரு உலக்கை வச்சு இடிப்பாங்க.. நல்லா இடிச்சதுக்கப்புறம் சலிச்சு வச்சுடுவாங்க.
    அப்புறம் மாப்பிள்ளையவும் , மச்சினனையும் (பொண்ணோட அண்ணனோ , தம்பியோ) சட்டை இல்லாம வீட்டு வாசல்ல கிழக்க பாத்து உக்கார வைப்பாங்க. சந்தனம் பூசி மச்சினன் மாப்பிள்ளைக்கு காப்பு கட்டி விடணும். இந்த காப்புல ஒரு வெத்தலை சுருட்டி ஒரு விரல் மஞ்சள் சேர்த்து மஞ்சள் கயறுல கட்டி இருப்பாங்க. இத கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் தான் கழட்டனும்.அதுக்கப்புறம் மாப்பிள்ளையோட அக்கா, தங்கை ஆரத்தி எடுத்து மாப்பிள்ளைய வீட்டுக்குள்ள கூட்டிட்டு போவாங்க.
    ரொம்ப மெல்லிசா இருக்குமே அந்த நூல்கண்டு ல நூல் எடுத்து முந்நூல் பிடிப்பாங்க. (இது எப்படின்னா கால்ல வச்சு பூ காட்டுவாங்கல்ல அந்த மாதிரி தான் ஒரு process). மூணு நூல ஒரு நூல் ஆக்கிடுவாங்க. அதுக்கு அப்புறம் அத 101 ,71 , 51, 21, 11 இழை இருக்கிற மாதிரி 5 கயறு பண்ணுவாங்க. அது எல்லாத்தையும் இடிச்ச மஞ்சள்ள சேத்து தாலிகயறு ரெடி பண்ணுவாங்க. எங்களுக்கு வெறும் கயறு மட்டும்தான். தாலி கிடையாது.அதுக்கப்புறம் நிறைய மஞ்சள் கயறு பிடிப்பாங்க. கல்யாணத்துக்கு வர்ற எல்லா சுமங்கலிகளுக்கும் ஒரு மஞ்சள் கயறு குடுக்கணும்.
    ரொம்ப பெருசா போட்டுட்டேனோ ...
    மிச்சத்த அப்புறம் போடறேன்....

    jv_66, ponschellam and Prathyuksha like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter