Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....

Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.

  1. #161
    Shubhankar is offline Newbie
    Real Name
    Shubhankar
    Gender
    Male
    Join Date
    Jan 2015
    Location
    Jaipur
    Posts
    14

    Re: Different Customs and Traditions in Weddings....

    Hey Guys,

    Do you know about Hindu culture in India?
    What type of customs, dresses they followed in their weddings??

    Sponsored Links
    sarayu_frnds likes this.

  2. #162
    jimmyjjohn's Avatar
    jimmyjjohn is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2013
    Location
    UK
    Posts
    2

    Re: Different Customs and Traditions in Weddings....

    Ennodadhu love marriage en husband reddy caste..athula 7 times thali kattuvanga..7 manjal kayiru..thali katturapa yellow silk Saree Katanum.

    Last edited by jv_66; 5th May 2015 at 11:03 AM. Reason: Removed the external link
    sarayu_frnds likes this.

  3. #163
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: Different Customs and Traditions in Weddings....

    haaai jeyanthi aunty.....

    first thanks for tagging me aunty...

    hmm kalyanam... kalyanam naale kalaatta thaan... sari நிச்சயம் ல இருந்து ஆரம்பிக்கிறேன்..

    பொன்னை மாப்பிள்ளையை பார்த்து பிடிச்சு இரண்டு வீட்டு ஆளுங்களும் பேசி பூ வைக்கிறது இதை வீட்டில செய்ற நிச்சயம்ன்னு சொல்வாங்க.. அன்னிக்கே கல்யாணம் தேதி குறிப்பாங்க.. ஆன்னிக்கு இருந்து கல்யாண பொண்ணு தலையில தினமும் பூ வைக்கிற செலவு மாப்பிள்ளை வீட்டோடது..

    அதே மாதிரி கல்யாண வளையல் செலவும் மாப்பிள்ளை வீடோடது தான்.. பொண்ணுக்கு மாட்டும் இல்லை பொண்ணு வீட்டில் இருக்கிறவங்களுக்கும் வளையல் செலவு மாப்பிள்ளை வீட்டோடது..

    அப்புறம் இரண்டு நாள் நடக்கும், முதல் நாள் மாலை தாய் மாமா வீட்டில இருந்து புடவை நகை கொண்டு வந்து கொடுப்பாங்க. அதை போட்டு வந்து மணவறையில் பெண் வந்து உட்காரவும் அப்புறம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து புடவை நகை எல்லாம் வச்சு 21 இல்ல அதுக்கும் மேலையோ தட்டு அடுக்கி பெண்ணுக்கு நலங்கு செய்வாங்க..

    இப்போ எல்லாம் மாபிள்ளையும் கூடவே இங்க சடங்கில் ஜாயின்ட் ஆகிடுறார்..

    அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு மூகூர்த்த கால் நடுவாங்க.. பிறகு அந்த பால் வச்சு அபிசேகம் செய்வாங்க முகூர்த்த காலுக்கு.

    அப்போ தான் இந்த மெட்டி போடுறது எல்லாம்.. பொண்ணுக்கு ஒரு மெட்டி தாய் மாமா போடுவாங்க.. இன்னொரு மெட்டி மாப்பிள்ளை போடுவாங்க..

    அதோட முதல் நாள் முடிந்தது.. மறுநாள் கல்யாணம்... மாபிள்ளையும் பெண்ணும் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் பாத பூஜை செய்வாங்க.. தென் அய்யர் மந்திரம் சொல்ல சொல்ல கையில் வச்சிருக்கிற பொருளை எல்லாம் யாகத்தீயில் போடுவாங்க..

    அப்புறம் கெட்டி மேளம் கொட்டவும் தாலி கட்டுவாங்க.. நாதுனார், இல்லை நாதுனார் முறையில் இருக்கும் பெண்கள் வந்து மூன்றாவது முடிச்சு போடுவாங்க.. ஆனா மாப்பிள்ளைக்கு மூணு முடுச்சுமே போடா ஆசைன்னு சொல்லிட்டா அவரே போடலாம்..

    தென் ஒரு பெரிய துணி ல நிறைய அரிசி போட்டு உள்ள மோதிரத்தை போட்டு விட்டுடுவாங்க.. மாப்பிள்ளை பெண்ணும் உள்ள கை விட்டு யார் எடுக்கிறாங்களோ அவங்க தான் வின்..

    அப்புறம் ரெண்டு பேர் கையும் சேர்த்து விரலோட விரல் கட்டி மேல ஒரு வெள்ளை துணி போட்டு மறைச்சு உட்கார வைச்சு எல்லாரையும் வந்து சீரகம் போட்டு ஆசிர் வாதம் செய்ய சொல்வாங்க..

    சீரகம் மூணு தடவை போடணும்.. காலில் இருந்து ஆரம்பிச்சு தலையில் முடிப்பாங்க..

    தென் ஒவ்வொரு வீட்டு பெரியவங்களுக்கும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.. அப்புறம் பால் பழம் ஊட்டும் சடங்கு நடக்கும்...

    selvipandiyan, jv_66 and kkmathy like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."

    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  4. #164
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sarayu_frnds View Post

    ரொம்ப தேங்க்ஸ் டா சக்தி , உங்க முறையிலான கல்யாணச் சடங்குகளை பகிர்ந்துகிட்டதுக்கு .

    நிறைய வித்தியாசமா இருக்கு .

    என்ன ....பொண்ணு வீட்ல உள்ளவங்க எல்லாருக்கும் வளையல் செலவு மாப்பிள்ளை வீட்டினருதா ? கண்ணாடி வளையலா , வேற எந்த வளையல் ? தங்க வளையல்ன்னா.....அடிச்சுது லாட்டு

    உங்க சைட்லயும் கல்யாணத்துக்கு முன்னேயே மெட்டி போட்டுடுவாங்களா , அதுவும் மாமாவா ?

    ஹப்பாடி ...21 தட்டுக்களா ??

    பரவால்லையே ...மாப்பிள்ளைக்கு நிறைய கன்செஷன் கொடுக்கறாங்களே

    அட ...இது என்ன ....சீரகம் தெளிப்பாங்களா ....ரொம்பவே புதுசா இருக்கே ....

    நல்ல ஒரு புது விதமான சடங்குகளை எல்லாம் தெரிஞ்சிக்க முடிஞ்சுது சக்தி . ரொம்ப தேங்க்ஸ் .

    sarayu_frnds likes this.
    Jayanthy

  5. #165
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Different Customs and Traditions in Weddings....

    hi @jv_66 jeyanthy akka
    super akka kandippa athu maathiri ennoda 25th anniversary kku try pannalaam
    veetula othukitta wow super a irukku oonjal , nalangu vilayattu ellam
    thanks for sharing sis

    sarayu_frnds and jv_66 like this.
    Stories Of Kodiuma

    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..

    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..

    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..

  6. #166
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப தேங்க்ஸ் டா சக்தி , உங்க முறையிலான கல்யாணச் சடங்குகளை பகிர்ந்துகிட்டதுக்கு .

    நிறைய வித்தியாசமா இருக்கு .

    என்ன ....பொண்ணு வீட்ல உள்ளவங்க எல்லாருக்கும் வளையல் செலவு மாப்பிள்ளை வீட்டினருதா ? கண்ணாடி வளையலா , வேற எந்த வளையல் ? தங்க வளையல்ன்னா.....அடிச்சுது லாட்டு

    உங்க சைட்லயும் கல்யாணத்துக்கு முன்னேயே மெட்டி போட்டுடுவாங்களா , அதுவும் மாமாவா ?

    ஹப்பாடி ...21 தட்டுக்களா ??

    பரவால்லையே ...மாப்பிள்ளைக்கு நிறைய கன்செஷன் கொடுக்கறாங்களே

    அட ...இது என்ன ....சீரகம் தெளிப்பாங்களா ....ரொம்பவே புதுசா இருக்கே ....

    நல்ல ஒரு புது விதமான சடங்குகளை எல்லாம் தெரிஞ்சிக்க முடிஞ்சுது சக்தி . ரொம்ப தேங்க்ஸ் .

    haai aunty....

    s kannadi valayal thaan.... gold ketta pinnagal pidariyil pada odira maattaangala ?? enna??

    jv_66 and kkmathy like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."

    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  7. #167
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Different Customs and Traditions in Weddings....

    திருமணம் எந்த முறையில் நடந்தாலும் குதூகலமும், கொண்டாட்டமும் தானே... @jv_66.
    அதுவும் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு.

    எங்கள் ஊரில் 90% காதல் திருமணங்கள் தான். பெற்றோர்கள் மறுப்பு சொல்லாமல் நடத்தி விடுவார்கள். இவர்தான் நான் விரும்பும் பையன்/பெண் என்று வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப் படுத்துவார்கள் பிள்ளைகள். சம்பிரதாயமாக பெண் பார்க்க என்று போய், வெற்றிலை பாக்கு மாற்றி, நிச்சயம் செய்து கொள்வார்கள். அன்றே திருமணம் எப்போது என்று முடிவும் செய்வார்கள்.

    இப்போது பரிசம் போடுவது என்று ஒரு கலாச்சாரம் புதிதாக தோன்றி உள்ளது. பெண் வீட்டில் பரிசம் போடும் நிகழ்வு நடக்கும். பெண்ணுக்கு புடவை, மோதிரம், முடிந்தால் வேறு நகை உடன் கொண்டு வருவார்கள். மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் மோதிரம் அணிவிப்பார்கள். வீட்டு அலங்காரம், விருந்து எல்லாமே பெண் வீட்டார் தான் செய்வார்கள். இதுவே பாதி கல்யாணம் போலத்தான் இருக்கும்.

    இங்கே பெண்களுக்கு இவ்ளோ நகை போடவேண்டும் என்றோ, பணம், பொருள் வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. பெண்ணுக்கு புடவை, தாலி, மிஞ்சி, மற்றும் மாப்பிள்ளையின் வசதிக்கு ஏற்ப நகை போடுவார்கள். அது 11 பவுன் தாலிக்கொடியாகவும் இருக்கலாம், 2 பவுன் சங்கிலியாகவும் இருக்கலாம். மற்ற திருமண செலவுகள் எல்லாமே சரி பாதி.

    ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முகூர்த்தக் கால் நடுவார்கள். பிறகு நலுங்கு வைப்பார்கள். முதல் நலுங்கு தாய் வீட்டு சார்பாக இருக்கும். அடுத்து பெரும்பாலும் மாமா அத்தை முறை இருப்பவர்கள் வைத்து, சீர் செய்வார்கள். இரண்டு அல்லது நான்கு நலுங்கு வீட்டில் வைப்பார்கள். கடைசி நலுங்கு திருமண சமயத்தில் வைப்பார்கள்.

    திருமணம் பெரும்பாலும் மாப்பிள்ளை ஊரில் தான் நடக்கும். கோவிலிலோ மண்டபத்திலோ நடக்கும். அரசாணிக் கால் நட்டு, பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக நலுங்கு வைத்து, முகூர்த்த உடை அணிந்து, பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வார்கள். பிறகு தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு. பிறகு மாங்கல்ய தாரணம் நடக்கும். அப்புறம் மிஞ்சி போடுதல். மூன்று முறை அக்கினியை சுற்றி வந்தால் திருமணம் முடிந்தது. கொசுறாக குடத்தில் மோதிரம், சங்கு போட்டு எடுக்க சொல்வார்கள்.

    பெற்றோர், உற்றார், பெரியோர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, உறவினர், நண்பர்களின் பாராட்டுகளையும் பரிசுகளை வாங்கி களைத்து, கடைசியாக உணவு உண்ணும் படலம். ஒரே இலையில் இரண்டு பேருக்கும் பரிமாறி, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு சாப்பிடுவார்கள்.

    அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பால் பழம் சாப்பிட்டு, பெண் வீடு செல்வார்கள். பெண் வீட்டார் சார்பில் ரிஷப்ஷன் நடைபெறும். மூன்று அல்லது ஐந்து நாட்கள் பெண்கள் வீட்டில் இருந்துவிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு திரும்புவார்கள். அப்புறம் இருக்கவே இருக்கு, உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து. எல்லாம் நார்மலாக ஒரு மாதம் ஆகும்.

    இது தான் எங்கள் ஊரில் நடக்கும் திருமண நிகழ்வுகள். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் நடைமுறை. இங்கேயும் மலையாளி, தெலுங்கு சமூகத்தினரும் உண்டு. அவர்களின் திருமணமுறை பற்றி எனக்கு சரியாக தெரியாது.

  8. #168
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Different Customs and Traditions in Weddings....

    Jayanthy sis. Thanks for tagging me.

    திருமண முறை, என் தாய் வீடுதும் , புகுந்த வீடுதும், சம்ப்ரதாயங்கள் சுத்தமாக வெவ்வேறு முறை. முக்கியமாக என் கணவர் வீட்டில் தாலி மூணு முடுச்சி போட்டு மஞ்சள் கயிறால் கட்டப்படுவது. என் பிறந்த வீட்டில், தாலி என்பது தங்க சங்கிலியில், வெள்ளி கம்பியால் கோர்க்கப்பட்ட சரடுகள். மஞ்சள் கயிறே கிடையாது. அதோடு என் பிறந்த வீட்டில், M மற்றும் லக்ஷ்மி காசு மாதிரி ஏதோ ஒன்று தான் தாலி . என்னுடையது, ஆந்த்ரா ஸ்டைலில் மூன்று கிண்ணங்கள்.

    சடங்குகளும் வெவ்வேறு. எனக்கு என் திருமண சடங்குகள் அவ்வளவாக ஞாபகம் இல்லை. "ப்பா பேய் மாதிரி இருக்கா"ன்ற அளவில மேக்-அப் போட்டு பலி ஆடு மாதிரி உட்கார வைத்துவிட்டார்கள். என் கணவரும் இந்த பேயை பார்த்த அதிர்ச்சில் மேடையில் இன்னொரு பலி ஆடு கணக்கா இருந்தார். அதனால் இருவருக்கும் அந்த அளவு ஞாபகம் இல்லை. இருந்தாலும் அந்த சோகத்த நினைவுபடுத்தாம அவருக்கிட்ட கல்யாண சடங்குகள் பத்தி கேட்டு பிறகு வந்து எங்கள் கல்யாண சம்ப்ரதாயங்கள பத்தி சொல்கிறேன்.

    இந்த பிள்ளைங்க வேற ரொம்ப நாளா நல்ல தமிழ் பேய் படம் பார்க்காம தவிச்சிட்டிருந்தாங்க. கல்யாண சிடி எங்கோ பெட்டிக்குள்ள தான் இருக்கு. எடுத்து போட்ற வேண்டியது தான். இனி பேய் படம் பார்க்கலாம்னு கேக்கவே கூடாது. அதோட சோகத்த பங்கெடுத்துக்கிட்டா குறையுமே , அதுனால அவர் கூட நாங்க எல்லோரும் உட்கார்ந்து , அப்படியே அவர் கண்ணீர மாற்றி மாற்றி துடைச்சுகிட்டே பார்த்திட்டு சீக்கிரம் வந்து விளக்கமா சொல்றேன் சிஸ்.

    அதுக்கு முன்ன எங்க அப்பா-அம்மா திருமண ஆல்பத்த பல தடவ பார்த்த ஞாபகத்த வச்சு, என் பிறந்த வீட்டு கல்யாண சம்ப்ரதாயங்கல இன்னும் ஒன்னு ரெண்டு நாளைக்குள்ள வந்து சொல்றேன் சிஸ். எத்தன தடவ பார்த்தாலும் அழுக்காத ஆல்பம். அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் என் அம்மா உலக அழகியே தான். எங்கப்பா எங்கம்மாகேத்த அந்த கால "வசந்த மாளிகை" சிவாஜியே தான்.

    selvipandiyan, jv_66 and kkmathy like this.

  9. #169
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by kkmathy View Post
    திருமணம் எந்த முறையில் நடந்தாலும் குதூகலமும், கொண்டாட்டமும் தானே... @jv_66.
    அதுவும் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு.

    எங்கள் ஊரில் 90% காதல் திருமணங்கள் தான். பெற்றோர்கள் மறுப்பு சொல்லாமல் நடத்தி விடுவார்கள். இவர்தான் நான் விரும்பும் பையன்/பெண் என்று வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப் படுத்துவார்கள் பிள்ளைகள். சம்பிரதாயமாக பெண் பார்க்க என்று போய், வெற்றிலை பாக்கு மாற்றி, நிச்சயம் செய்து கொள்வார்கள். அன்றே திருமணம் எப்போது என்று முடிவும் செய்வார்கள்.

    இப்போது பரிசம் போடுவது என்று ஒரு கலாச்சாரம் புதிதாக தோன்றி உள்ளது. பெண் வீட்டில் பரிசம் போடும் நிகழ்வு நடக்கும். பெண்ணுக்கு புடவை, மோதிரம், முடிந்தால் வேறு நகை உடன் கொண்டு வருவார்கள். மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் மோதிரம் அணிவிப்பார்கள். வீட்டு அலங்காரம், விருந்து எல்லாமே பெண் வீட்டார் தான் செய்வார்கள். இதுவே பாதி கல்யாணம் போலத்தான் இருக்கும்.

    இங்கே பெண்களுக்கு இவ்ளோ நகை போடவேண்டும் என்றோ, பணம், பொருள் வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. பெண்ணுக்கு புடவை, தாலி, மிஞ்சி, மற்றும் மாப்பிள்ளையின் வசதிக்கு ஏற்ப நகை போடுவார்கள். அது 11 பவுன் தாலிக்கொடியாகவும் இருக்கலாம், 2 பவுன் சங்கிலியாகவும் இருக்கலாம். மற்ற திருமண செலவுகள் எல்லாமே சரி பாதி.

    ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முகூர்த்தக் கால் நடுவார்கள். பிறகு நலுங்கு வைப்பார்கள். முதல் நலுங்கு தாய் வீட்டு சார்பாக இருக்கும். அடுத்து பெரும்பாலும் மாமா அத்தை முறை இருப்பவர்கள் வைத்து, சீர் செய்வார்கள். இரண்டு அல்லது நான்கு நலுங்கு வீட்டில் வைப்பார்கள். கடைசி நலுங்கு திருமண சமயத்தில் வைப்பார்கள்.

    திருமணம் பெரும்பாலும் மாப்பிள்ளை ஊரில் தான் நடக்கும். கோவிலிலோ மண்டபத்திலோ நடக்கும். அரசாணிக் கால் நட்டு, பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக நலுங்கு வைத்து, முகூர்த்த உடை அணிந்து, பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வார்கள். பிறகு தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு. பிறகு மாங்கல்ய தாரணம் நடக்கும். அப்புறம் மிஞ்சி போடுதல். மூன்று முறை அக்கினியை சுற்றி வந்தால் திருமணம் முடிந்தது. கொசுறாக குடத்தில் மோதிரம், சங்கு போட்டு எடுக்க சொல்வார்கள்.

    பெற்றோர், உற்றார், பெரியோர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, உறவினர், நண்பர்களின் பாராட்டுகளையும் பரிசுகளை வாங்கி களைத்து, கடைசியாக உணவு உண்ணும் படலம். ஒரே இலையில் இரண்டு பேருக்கும் பரிமாறி, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு சாப்பிடுவார்கள்.

    அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பால் பழம் சாப்பிட்டு, பெண் வீடு செல்வார்கள். பெண் வீட்டார் சார்பில் ரிஷப்ஷன் நடைபெறும். மூன்று அல்லது ஐந்து நாட்கள் பெண்கள் வீட்டில் இருந்துவிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு திரும்புவார்கள். அப்புறம் இருக்கவே இருக்கு, உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து. எல்லாம் நார்மலாக ஒரு மாதம் ஆகும்.

    இது தான் எங்கள் ஊரில் நடக்கும் திருமண நிகழ்வுகள். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் நடைமுறை. இங்கேயும் மலையாளி, தெலுங்கு சமூகத்தினரும் உண்டு. அவர்களின் திருமணமுறை பற்றி எனக்கு சரியாக தெரியாது.
    kittathatt enkal kalyana muraikalum ippadithaan komathy........

    jv_66 and kkmathy like this.

  10. #170
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by kodiuma View Post
    hi @jv_66 jeyanthy akka
    super akka kandippa athu maathiri ennoda 25th anniversary kku try pannalaam
    veetula othukitta wow super a irukku oonjal , nalangu vilayattu ellam
    thanks for sharing sis
    Ok ma.....

    kodiuma likes this.
    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter