Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....


Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.


  1. #181
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by rosei View Post
    அருமையான திரி ஜெயந்தி ...வேறு வேறு திருமண முறைகள் பற்றி அறியலாம்...நானும் வாறன்...
    தேங்க்ஸ் ரோசி . வாங்க வாங்க ...பொறுமையா வாங்க @rosei


    Sponsored Links
    rosei likes this.
    Jayanthy





  2. #182
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by spv View Post
    எங்களுக்கு 2 தாலி ௨ண்டு. ஒன்று பெரிய தாலி இன்னுமொன்று நாகவல்லி பொட்டு
    ஒ அப்படியா புனிதா @spv ....தேங்க்ஸ் மா இதை சொன்னதுக்கு

    Jayanthy





  3. #183
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by kkmathy View Post
    ஆமாம் ஜெயந்தி @jv_66;


    மலாய்காரர்களைத் திருமணம் செய்யவேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் மதத்திற்கு மாறவேண்டும். சைவ சாப்பாடு சாப்பிடலாம் ஆனால் அசைவம் halal வகை என்றால் தான் சாப்பிடுவார்கள்.


    திருமணம், பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளலாம்.இதில் மிக்க வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இறுதிச் சடங்குகளில் பங்கு பெறக்கூடாது. பெற்றவர்களின் இறுதி சடங்கில் கூட யாரோ போல் ஒரு ஓரத்தில் தான் நிற்க நேரிடும். எந்த சடங்கும் செய்யக் கூடாது.


    மற்ற இனங்கள் மதம் மாற கட்டாயப் படுத்துவதில்லை. திருமணம் பெரும்பாலும் இரண்டு முறைப்படியும் செய்து கொள்வார்கள். தனிக்குடித்தனமாக இருப்பதால், மதம் இறைவழிபாடு எல்லாம் அவரவர் விருப்பபடி செய்வார்கள்.


    நிறைய சொந்தக்காரர்கள் இருக்கும் பட்சத்தில், அதுவும் தாய்மாமன் கொஞ்சம் ஸ்பெஷல் தான். பணம்பாக்கு வெற்றிலையோடு பத்திரிக்கை வைத்தால், சங்கிலி, கைச்செயின், குறைந்தபட்சம் அரை பவுன் மோதிரம் நிச்சயம் உண்டு. மற்ற மாமா அத்தை முறை உள்ளவர்கள் எல்லோரும் நலுங்கு வைத்து புடவை அல்லது pant shirt அத்தோடு தங்கத்தில் ஏதாவது சீராக கொடுப்பார்கள். ஒற்றைப் படையில் நலுங்கு வைக்க வேண்டும். ஒரே நாளில் மூன்று முறை கூட வைப்பார்கள்.


    என் கணவருக்கு ஐந்து சகோதரிகள். எல்லோர்க்கும் இரண்டு மூன்று பிள்ளைகள். எங்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். தங்கம் விற்கும் விலையில், நினைப்பே மலைக்க வைக்கிறது. இதுவரை பெண்களில் சடங்குகள் தான் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் வரிசையாக திருமணம் வரும்.


    கோவில் என்றாலும் தனி மண்டபம் என்றாலும் வாடகையே இரண்டாயிரத்தை தொடும். அப்புறம் விருந்து மற்ற செலவுகள் எல்லாம் ஒருவரே சமாளிக்க முடியுமா. அதனால் தான் ஷேரிங். பெரும்பாலும் பெண்கள் தங்களின் சம்பாத்தியத்தில் கொஞ்சம் நகை சேர்த்துக் கொள்வார்கள். முடிந்தவரை திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றுதான் எதிர்ப்பார்பார்கள். நகை, பொருள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

    ரொம்ப தேங்க்ஸ் மதி @kkmathy இந்த விவரங்கள் எல்லாம் சொன்னதுக்கு .

    என் கணவருக்கு ஐந்து சகோதரிகள். எல்லோர்க்கும் இரண்டு மூன்று பிள்ளைகள். எங்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். தங்கம் விற்கும் விலையில், நினைப்பே மலைக்க வைக்கிறது.
    எங்க கணவருக்கும் , டிட்டோ இதே தான் . எங்க வீட்லயும் இதே போலத்தான் செஞ்சுட்டு இருக்கோம் , அன்னிலேர்ந்து இன்னி வரை . இது முடிவே இல்லாத தொடரா நீண்டுட்டே இருக்கு . இப்போ இவங்களோட பேரப்பசங்களுக்கும் ஸ்டார்ட் ஆகிடுச்சு .

    kkmathy and gloria like this.
    Jayanthy





  4. #184
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by gloria View Post
    சூப்பர் thread ஜெ அக்கா....

    நானும் எங்க முறைகளை எடுத்து விடுறேன்

    பொண்ணு பார்க்க வந்து பிடிச்சிருந்தா அன்றைக்கே பூ வச்சி நிச்சயம் பண்ணுவாங்க (எல்லாம் விசாரிச்சி செட் ஆனா தான் பொண்ணு பாக்க வீட்டுக்குள்ளே விடுவது )

    நிச்சயதார்த்தம் பெண் வீட்டு செலவு... அங்கே மாப்பிளை வீட்டிலில் பொண்ணுக்கு எவ்வளோ நகை போடுறாங்க என்பது வைத்து தான் அவர் கேத்... சோ அன்னைக்கு பொண்ணுக்கு நல்ல கலெக்ஷேன் தேறும்..


    அடுத்து கோவிலில் பதியனும் கல்யாண வகுப்புன்னு ஒன்னு இருக்கு அதை முடிக்கணும்... வீட்டில் அம்மா போடும் பிளேடை பாதர் அவர் ஸ்டைலில் போடுவார்... ரொம்ப ஆர்வமா கேப்பது போல கேட்டு சர்டிபிகேட் வாங்கனும்.. ஒரு பத்து வகுப்பு இருக்கும் ...


    அப்புறம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மூன்று வாரத்திற்கு கோவிலில் ஓலை வாசிப்பாங்க இன்னார் இன்னாருக்கு கல்யாணம் யாருக்காவது தடை இருந்தா சொல்லலாம் என்று... ரீசன் நியாமா இருந்தா ஃபாதர் கல்யாணத்தை நிறுத்திடுவார்... சோ அதனலே இப்போ எல்லாம் நம் மக்கள் புத்திசாலித்தனமா நேரம் இல்லை என்பதை காரணமா சொல்லி மூன்று ஓலையையும் ஒரே ஓலையா வாசிச்சிடுவாங்க... ஓலை வாசிக்கும் அன்னைக்கு எல்லாம்... பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டில் விருந்து வைக்கணும்...

    அப்புறம் கூரை புடவை தாலி வாங்கும் நிகழ்வு... பொண்ணு வீட்டில் இருந்து ஒரு படையே திரண்டு போகும்... புடவை கடை,நகை கடை , ஹோட்டல் என்று மாப்பிளை வீட்டார் விழியை பிடுங்கி கையில் கொடுப்பங்க... அவங்களும் எங்க டேர்ன் வரட்டும் மக்கா என்று இருப்பங்க...


    கூரைபுடவை வெள்ளையில் குங்குமம் பார்டர் போட்டு இருக்கும் இந்த டைப்ல இருக்கும்



    கல்யாணத்துக்கு எழு நாள் முன் ஆல்லது ஒத்தை படையில் வரும் நாட்களுக்கு கணக்கில் பந்தக்கால் நடுவாங்க

    கல்யாணத்துக்கு மூன் ஒண்ணு விட்டு ஒரு நாள் மூன்று நலங்கு வைப்பாங்க மாப்பிளை வீட்டில் மாப்பிளைகும்... பொண்ணு வீட்டில் பொண்ணுக்கும் ஒரே நேரத்தில் வைப்பாங்க... மாப்பிள்ளை வீட்டில் நலங்கு முடிந்ததும் பொண்ணு வீட்டுக்கு சீரோடு வருவாங்க... அதை வாங்கிகிட்டு பொண்ணு வீட்டில் இரண்டு மடங்கா பதில் சீர் கொடுக்கணும்... ஒவ்வொரு நலங்கு போதும் விருந்து வைக்கணும்


    மூன்றாவது நாள் சீரில் கூரை புடவையை கொண்டு வருவாங்க...

    கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு பொண்ணை நடு வீட்டில் முட்டிகால் போட்டு நிக்க சொல்லுவாங்க.. எல்லா உறவினர்களும் வந்து சிலுவை போட்டு ஆசிர்வாதம் பண்ணுவாங்க.. நண்டு சிண்டு கூட லைன்ல நிக்கும்.. ஒரு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை கூட நீளும் இருக்கும் உறவினர் கூட்டத்தை பொறுத்து தான் இருக்கு முட்டி காயமாகமா இருப்பது..

    இதில் வயதாவங்களுக்குள் பெரிய போட்டியே நடக்கும் யார் மணப்பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு ரொம்ப நேரம் வேண்டுறாங்க என்று... உறவினர் அதிகம் இருந்தா அந்த பொண்ணு பாவம் அடுத்த நாள் நடக்க ரொம்ப கஷ்டப்படனும்...

    திருமணம் மாப்பிள்ளை வீட்டு செலவு இல்லைனா ஷேர் பண்ணிப்பங்க... முதலில் கோவில் கல்யாணம் தான் நடக்கும்... ஃபாதர் சம்மதம் கேட்டு மோதிரம் மாற்றி பின் மாப்பிளை தாலி கட்டுவார் ரெண்டு முடிச்சி அவர்... மூன்றாவது நாத்தானார் போடுவது...

    அப்புறம் வீட்டுக்கு கூட்டி வந்து பால் பழம் கொடுத்துவிட்டு... பொண்ணு மாப்பிளை மடியில் புதிய வெள்ளை காடா துணி விரிச்சி போடுவாங்க.. பெரியவங்க எல்லோரும் வரிசையா வந்து அரிசியை மணமக்கள் மடியில் கொட்டுவாங்க..(இது எதுக்கு செய்றாங்க என்று எனக்கு தெரியாது ) பின் அந்த அரிசியை அந்த துணியிலே முடிந்து... இயலதவங்களுக்கு தானம் கொடுப்பங்க...


    பின் ரிஷப்ஷன் நடக்கும் அதில் மாமியார், நாத்தானார் அத்தைம்மார் முறையில் இருப்பவங்க பொண்ணுக்கும் மாப்பிளைக்கும் மாதா படம் போட்ட காசு வைத்து பட்டம் கட்டுவாங்க.... அதை தான் தாலியில் கோப்பங்க...

    அதற்கும் அடுத்த நாள் மேரி கல்யாணம் நடக்கும்... இதற்க்கு டிரஸ் white robe.. செலவு முழுக்க முழுக்க மாப்பிளை வீட்டுக்கு...

    ஐந்தாவது நாள் மறு வீடு.. தாலி பிரிச்சி கோப்பது... சரடு மாப்பிளை எடுத்துட்டு வரணும் நாத்தனார் தாலி பிரிச்சி எல்லா காசுகளையும் சரடில் கோர்த்து அவங்களே போடுவாங்க.. இல்லைனா மாப்பிளை கிட்டே கொடுத்து போட சொல்லுவாங்க.. பிரிச்ச தாலி கயிறு.. கல்யாண மாலை எல்லாத்தையும் கடலில் விட்டுட்டு வருவாங்க வந்த பின் விருந்து அமர்க்களப்படும்...

    எத்தனை ஆடு உயிரை விடுமோ வரும் கூட்டத்தை பொறுத்து... அப்புறம் பொண்ணை புகுந்த வீடு கூட்டிட்டு போகும் நிகழ்வு... பொண்ணுக்கு போட்ட நகை சீர்வரிசை துணிமணி... ஸ்பூனில் இருந்து செருப்பு வரை கொண்டு வந்து வச்சிட்டு லிஸ்டை மாப்பிளை வீட்டார் கையில் கொடுத்தா... வெயட் போட்டு சரி பார்த்து... பாஸ்போர்ட் அப்ருவ் பண்ணி பொண்ணுக்கு அவங்க வீட்டுக்கு வருவதற்கு விசா கொடுப்பங்க...

    பெண்ணை அழைத்து போகும் முன்... மாப்பிளை பொண்ணு இருவரையும் நடு வீட்டில் முட்டி போட வைப்பாங்க... இப்போ கூட்டம் டபுளா இருக்கும் இரு வீட்டு உறவினர்களும் இருப்பாங்க இல்லையா.. சோ நண்டு சிண்டு எல்லாம் லைனில் இருக்கும்... இப்போ ஆசீர்வாதம் மட்டும் பண்ண மாட்டங்க.. சிலுவை போட்டு பொண்ணுக்கு கையில் காசு தருவாங்க.. மாப்பிளைக்கு நோ.. இரு வீட்டாரும் பொண்ணுக்கு தான் தருவாங்க..(புது இடம் பெண் தன் தேவைகளுக்கு கஷ்டப்படக்கூடாது என்று) அப்புறம் நெருங்கிய உறவில் இருக்கும் லேடிஸ் சிலுவை போட்டு காசும் கொடுத்துட்டு கட்டி பிடிச்சி ஒப்பாரி வைப்பாங்க... (அது ஏன் என்று தெரியலை.. கல்யாணத்துக்கு முன் மூச்சிக்கு முந்நூறு தடவை திட்டி இருப்பாங்க..)


    மாப்பிளை வீடு போனதுக்கு அப்புறம் ஒரு மாதத்துக்கு நெருங்கிய சொந்தத்தில் விருந்து கலைக்கட்டும்... இது தான்ப்பா எங்க கல்யாண முறை...

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் குளோரியா @gloria இவ்வளோ தகவல்களை சொன்னதுக்கு .

    நிறைய விஷயங்கள் ஹிந்து திருமணங்கள் போலவே இருந்தாலும் , சில வித்தியாசங்களும் இருக்கு .

    அடடா ...இதென்ன ....முட்டி போட வச்சே கல்யாண தம்பதிகளை , அடுத்த ஒரு வாரத்துக்காவது நடக்க முடியாதபடி பண்ணிடுவாங்க போலயே

    கூறைப்புடவை கலர் & டிசைன் ரொம்ப நல்லாருக்கு . படமாவே வேற போட்டு காட்டிட்ட .

    எப்பவும் போல நக்கலும் நையாண்டியும் கலந்து உன்னோட ஸ்டைல்ல சொல்லிட்ட ....சூப்பர் .

    selvipandiyan and gloria like this.
    Jayanthy





  5. #185
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் ஜெயந்தி கா ,
    thanks for tagging ...........


    எங்க முறை ........எளிய முறையில் தமிழ் படி நடக்கும் சீர்திருத்த கல்யாணம் போல தான் இருக்கும் .........நிறைய சடங்குகள் கிடையாது ............no அய்யர் .no மஞ்ச கயிறு ..........தங்க சங்கிலியில் தான் தாலி போடுவோம் அதான் மாப்பிள்ளைக்கு கௌரவம் என்று ..........முடியாட்டா கூட பெண்ணுக்கு போடும் பவுன் ல தாலி சங்கிலி மாப்பிள்ளை வீட்டில் கொடுத்து விடுவோம் .........அவங்க தாலி கோர்த்து .........கட்டிடுவாங்க .தாலியில் சொக்கர் மீனாட்சி படம் இருக்கும் ,அல்லது லிங்கம் மட்டும் அதுவும் கல் வைத்து ...........டாலர் போல தான் இருக்கும் ......

    சாதகம் பொருத்தம் பார்த்து ,போட்டோவிலும் பிடித்த பின் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வருவாங்க ........கிட்டத்தட்ட உறுதி ஆனால் தான் வீட்டுக்குள் விடுவோம் ........இல்ல கோவிலில் பார்த்தே .......விலகிடுவாங்க .

    பொண்ணு பிடித்தால் ..........அப்பவே சீர் எல்லாம் பேசிடுவோம் .......கல்யாண நாள் ,மண்டபம் எல்லாம் .........பூ மட்டுமாவது உடனே வாங்கி பொண்ணுக்கு வைத்து உறுதி பண்ணிடுவோம் அப்பவே .
    கல்யாணச் செலவு இருவரும் பாதி தான் .முன்பெல்லாம் தனித்தனியாகத் தான்மண்டபம் பிடித்தே வைப்பாங்க .இப்ப மாறிடுச்சு .....ஆனாலும் ஒரு பங்கு செலவு மாப்பிள்ளை வீட்டில் வந்துடும் .

    மனமேடை அலங்காரம் ,மேளம் போன்றவை மாப்பிள்ளை வீட்டு செலவே ........நிச்சய சாப்பாடு பொண்ணு வீட்டு செலவு ......

    எங்களில் மாப்பிள்ளை பக்கம் அதிக செலவு.
    கல்யாணப்பட்டு நல்ல சரிகை நிறைய வைத்து எடுக்கணும் .......அதே விலையில் மாப்பிள்ளை அக்கா ,தங்கைக்கும் எடுக்கணும் .........

    அத்தை ,சித்தப்பா,தாய்மாமன் என உறவினர்கள் எல்லோருக்கும் எடுப்போம் பட்டு சேலைகள் .

    பொண்ணுக்கும்
    கல்யாணச் சேலை .துணை சேலை ,நிச்சய சேலை ,தலைமுழுக்கு சேலை ,என நாலு சேலைகள் வந்துடும்.

    கண்டிப்பாக மாமியார் வளையல் ,மோதிரம் உண்டு பொண்ணுக்கு .

    நிச்சயம் கல்யாண முதல் நாளும் பண்ணலாம் அல்லது தனியாக பொண்ணு உறுதியாகவும் பண்ணுவோம் மண்டபம் பிடித்து.

    கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு நிச்சயம் .......

    இருபக்க தாய்மாமன்கள் தான் உடகார்த்து உப்பு பெட்டி மாற்றுவாங்க...மாமன்கள் தலையில் கட்ட துண்டு........இதுவும் வசதியானவங்க என்றால் பட்டில் எடுப்போம் .........உப்பு பெட்டி இப்ப எவர் சில்வர் ல வாங்குறோம் ..........பேசி தட்டு மாற்றியப்
    பின்னர் நிச்சய சேலை பொண்ணை அழைத்துக் கொடுத்து மாற்றி வரசொல்லி திருநீர் பூசுவாங்க ,வளையல் ,necklaces என மாமியார் போடுவாங்க பொண்ணுக்கு .......கண்டிப்பாக மாப்பிள்ளை வீட்டில் நகை போடுவாங்க .... அப்புறம் மாப்பிள்ளை ஸ்பெஷல் கிபிட் உடன் ........பொண்ணுக்கு திருநீர் பூசுவார் ...........கேக் வெட்டுறது,சாக்லேட் கொடுக்கிறது என்று கலாட்டாவாக இருக்கும்

    காலை முகூர்த்தம் ...
    மாப்பிள்ளை வீட்டில் எண்ணிக்கை கணக்கில் தட்டு வைத்து தாலி கட்ட வருவாங்க ...பொண்ணு வீட்டில் நிறைய ஆரத்தி தட்டு வச்சு இருப்போம் .........அதுக்கு மாப்பிள்ளை கிபிட் தான் தரணும் ....அதுவும் முன்பே சொல்லிடுவோம் ......இவ்வளவு ஆர்த்தின்னு
    மாப்பிள்ளைக்கு பொண்ணோட தம்பி அழைப்பு சங்கிலி கழுத்துக்கு ,கை செயின் மோதிரம் என எல்லாம் போட்டு உள்ளே அழைத்து சென்று மணமேடையில் உட்கார வைப்போம் ........chair ,table தான் .

    எங்க குடும்ப பெரியவர்கள் ..........திருக்குறள் சொல்லி .........தேவாரம் பாடல் சொல்லி,பொண்ணு மாப்பிள்ளை சம்மதம் சொல்ல வைத்து தாலி எடுத்து கொடுக்க சட்டுன்னு கல்யாணம் முடிந்துடும் கண் மூடி திறக்கும் முன் .........இதுக்கு இவ்வளவு செலவான்னு தோணும் ...........

    அப்புறம் உடனே பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டி போய்டுவாங்க ..........நாங்க மாலை போய் எங்க சீர், அரிசிப்பெட்டி வைத்து விட்டு ......இரவுக்கு பெண் வீட்டுக்கே கூட்டி வந்து விடுவோம் .....

    இங்கே முந்தைய மாப்பிள்ளை முறை உள்ளவங்க (பொண்ணோட அக்கா மாப்பிள்ளைகள் சேர்த்து அவங்களுக்கும் புது உடை உண்டு ) தலை முழுக்கு செய்வோம் .மாப்பிள்ளைக்கு புது உடை உண்டு ,கருவாட்டுக் குழம்பு ,முட்டை வைத்து சாப்பாடு .........


    மறுநாள் சம்பந்தார் சாப்பாடு என்று கறி சாப்பாடு ........மாப்பிள்ளை வீட்டில் ஒருமுறை ,பெண்வீட்டில் ஒரு முறை வைப்போம் ..........எல்லோரும் பங்கு பெறுவோம் .......எங்க கல்யாண வீடு செம கலாட்டாவாக ,கிண்டல் கேலி என்றும் ...........இருக்கும்.எல்லோரும் பெரிய பார்டர் பட்டு ,தலை நிறைய பூ .......நகை நிறைய போட்டு செம ஜாலியாக இருக்கும் ...........

    தேங்க்ஸ் பொன்ஸ் @ponschellam நல்ல விரிவா சொல்லிட்டீங்க உங்க கல்யாண முறைகளைப் பற்றி .

    ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கு .

    நீங்க சொல்றா மாதிரி , இவ்வளோ சட்டுன்னு முடிஞ்சுடற கல்யாணத்துக்கு இவ்வளோ செலவான்னு மலைப்பாதான் இருக்கு .

    மாமியார் வளை கூட போடுவாங்களா ...சரி ...

    இதுல நிறைய , மற்ற திருமணங்களைப் போலவே இருந்தாலும் , சடங்குகள் இல்லவே இல்லை இல்லையா ....அந்த உப்பு பெட்டி மாற்றம் தவிர ....இது கூட எனக்குப் புதுமையா இருக்கு .

    ஆக உங்க கல்யாணங்களில் மாப்பிள்ளை வீட்டுக்குதான் அதிக செலவா ....சரி .

    selvipandiyan and ponschellam like this.
    Jayanthy





  6. #186
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Different Customs and Traditions in Weddings....

    இது என்ன ஒரே மாதிரியான கருத்து

    jv_66 likes this.


  7. #187
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by AnuRajesh View Post
    Ennodadhu love marriage en husband reddy caste..athula 7 times thali kattuvanga..7 manjal kayiru..thali katturapa yellow silk Saree Katanum.
    போஸ்ட் no.8
    post no.162
    ????????????????

    Last edited by srikumarsavi; 6th Oct 2015 at 12:18 PM.
    jv_66 likes this.


  8. #188
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by srikumarsavi View Post
    போஸ்ட் no.8
    post no.162
    ????????????????
    Nothing to worry pa. Hope I have answered you in the PM.

    srikumarsavi likes this.
    Jayanthy





  9. #189
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் குளோரியா @gloria இவ்வளோ தகவல்களை சொன்னதுக்கு .

    நிறைய விஷயங்கள் ஹிந்து திருமணங்கள் போலவே இருந்தாலும் , சில வித்தியாசங்களும் இருக்கு .

    அடடா ...இதென்ன ....முட்டி போட வச்சே கல்யாண தம்பதிகளை , அடுத்த ஒரு வாரத்துக்காவது நடக்க முடியாதபடி பண்ணிடுவாங்க போலயே

    கூறைப்புடவை கலர் & டிசைன் ரொம்ப நல்லாருக்கு . படமாவே வேற போட்டு காட்டிட்ட .

    எப்பவும் போல நக்கலும் நையாண்டியும் கலந்து உன்னோட ஸ்டைல்ல சொல்லிட்ட ....சூப்பர் .
    தேங்க்ஸ் அக்கா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் தாலி 108 நூலில் சேர்த்து திரிப்பங்க அதில் தான் தாலி கொப்பங்க ஆனா மஞ்சள் தடவ மட்டாங்க வெள்ளையா தான் கட்டுவாங்க

    selvipandiyan and jv_66 like this.

  10. #190
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Different Customs and Traditions in Weddings....

    Sorry Jayanthy sis @jv_66, konjam late aagidichchu.

    எங்கள் (பிறந்த வீட்டு) சம்பரதாயங்களை சொல்கிறேன். முதலில் பெண் பார்த்து முடித்த பின் , இரு வீட்டாருக்கும் சம்மதமெனில், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று பார்ப்பார்கள். அதாவது வீடு எப்படி, வாழப்போகும் இடம் + சொந்த பந்தங்கள் எப்படி என்று ஒரு சின்ன inspection. அன்று அங்கேயே விருந்து சாப்பிடுவார்கள். அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் வேண்டுமெனில் வந்து பெண் வீட்டை பார்க்கலாம்.


    அதன் பிறகு நிச்சயதார்த்தம். பெண் வீட்டார் செலவு. திருமண தேதி முடிவு செய்யப்படும். திருமணம் மாப்பிள்ளை வீட்டு செலவு . முஹுர்த்தத்திற்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பட்டு புடவை எடுக்கலாம்(கருப்பு வெள்ளை தவிர).பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து முஹுர்த்த பட்டு புடவை கான்ஷீபுரம் சென்று எடுப்பார்கள். இப்போது வசதி கருதி பெண் வீட்டாரிடம் பணம் கொடுத்துவிடுவார்கள். பெண் வீட்டார் தனியாகவே சென்று எடுத்துக்கொள்ளலாம். பெண்ணிற்கு கண்டிப்பாக மூன்று பட்டு புடவை தேவைப்படும்.


    திருமண நாளிலிருந்து 3,5,7 நாட்கள் முன்பு முகூர்த்த நாள் பார்த்து பந்தல் கால் நடுவார்கள். ஒரு சிறு குழியில், மணப்பெண் நவதானியங்கள் கொட்ட, பால் ஊற்றி பந்தல் காலை ஐந்து அக்கம் பக்க சுமங்கலி பெண்களை வைத்து நடுவார்கள். இதே தான் மாப்பிள்ளை வீட்டிலும் நடக்கும்.


    திருமணத்திற்கு முந்தைய தினம் பெண் அழைப்பு. மாப்பிள்ளை வீட்டிலிருந்து நாத்தனார் பெண்ணை அழைக்க சுற்றம் சூழ பெண் வீட்டிற்கு வருவார்கள். மறுபடி அவர்களுக்கு ஒரு விருந்து. பெண் வீட்டார் இங்கிருந்து திருமண நடக்கும் மாப்பிள்ளை ஊருக்கு செல்வார்கள். இந்த காலத்தில் வசதி கருதி, மணப்பெண் முன்பே திருமண ஊருக்கு வந்து ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார். பெண்ணை தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருகிறார்கள். அதுவே எங்களுக்கு கல்யாண வரவேற்பு(reception ) மாதிரி. சில பேர் நிச்சயமும் அன்றே வைத்து கொள்வார்கள்.


    தாலி கொடி முன்பே தங்கத்தால் செய்யப்பட்டதால், ஒரு மாப்பிள்ளை குடும்பத்தின் மூத்த சுமங்கலி அதை அணிந்திருப்பார் (ஒரு செண்டிமெண்ட்டுக்காக ).


    திருமண நாள் - பெண்ணும் மாபிள்ளையும் தனித்தனியே மண மேடை வந்து முஹுர்த்த உடையை வாங்கி செல்வர்(மேடையில் ஐயருடன் சம்ப்ரதாயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்) . மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் முஹுர்த்த உடையில் வருவதற்குள் அரசாணி கால் நடுதல் நடைபெறும் . பெண்கள் மூவர் வந்து அரச மரத்து குச்சிக்கு, மஞ்சள் குங்குமம், கெட்டி மேளம் கொட்ட, இடுவார்கள். அதன் பிறகு மணப்பெண், மணமகன் மணமேடை வருவார்கள். இருவரும் அவரவர் பெற்றோரை பாதை பூஜை செய்வார்கள். ஏதேதோ அய்யர் சொல்ல பொம்மை போல் செய்வார்கள், அதற்குள் மாங்கல்யம் மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறப்படும். பிறகு கெட்டி மேளம் கொட்ட , அட்சதை தூவ , பெரியவர்களின் ஆசியுடன், தங்க தாலியை மாப்பிள்ளை பெண்ணிற்கு அணிவார். கருக மணி மாலையை நாத்தனார் அணிவார்.


    மெட்டியை பெண் முன்பே அணிந்து கொள்ளலாம். மாங்கல்யத்திற்கு பிறகு, மாப்பிள்ளை பெண்ணின் தாலியை சுற்றி தன கையை கொண்டு வந்து தன மனைவிக்கு நெற்றியில் குங்குமம் வைப்பார். அதன் பிறகு அக்னியை மூன்று முறை இருவரும் வளம் வருவார்கள்( சுண்டு விரலால் பிணைக்கப்பட்டு ). மாப்பிள்ளையை மாப்பிள்ளை தோழரோ அல்லது வேறு யாரோ இட்டு செல்ல , அவரைத் தொடர்ந்து மாப்பிள்ளை மணப்பெண்ணை கூட்டி செல்ல, மணப்பெண்ணின் மறு கையை பிடித்தபடி இன்னொரு பெண் அக்னியை சுற்றுவார்கள். அவ்வளவு தான் இனி இருவரும் கவன மனைவியாக திருமண பந்தத்தினுள் கால் எடுத்து வைத்து விட்டார்கள்.


    அதன் பிறகு மாலை மாற்றல், பெரியவர்கள் வந்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் அரிசியால் மேலிருந்து கீழ் வரை ஆசிர்வதிப்பார்கள். அதன் பிறகு ஒரு குடத்து நீரில் மோதிரம் போட்டு விளையாட்டு. இது தான் மொத்த கல்யாண நிகழ்வுகளிலேயே ரொம்ப fun ஆனது. My favorite too... (என் கல்யாணத்துல நேரமில்லைன்னு கட் பண்ணிட்டாங்க. பாவிங்க, வாழ்க்கைல ஒருவாட்டி தான் வரும் அதையும் பிடிங்கிட்டாங்க . ஒரு வேள ரெண்டு பேரும் எப்படியும் இப்ப மோதிரத்துக்கு அடிச்சிக்கிற மாதிரி வாழ்க்கை பூரா பிச்சிக்க தான் போறீங்கன்னு விட்டுட்டாங்களோ என்னவோ).


    திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு மணமக்கள் அழைத்து செல்லப்பட்டு பால் பழம் வழங்கப்படும். அப்புறம் அடுத்த நாள் பெண் வீட்டில் சம்பந்தம். அதாவது ஊரில் உள்ளவர்களை அழைத்து விருந்து அளிக்க வேண்டும். மணப்பெண்ணும் மாபிள்ளை யும் casualஆக வருவார்கள். இது ஒரு கிராமத்து ஸ்டைல் casual reception மாதிரி நினைச்சுக்கோங்க.


    அவ்ளோ தான்னு நினைக்குறேன்.


    இதில் எனக்கு தெரிந்து ஒரு சில மாற்றம் தான் என் திருமண நிகழ்வில்(என் கணவர் வீட்டில் திருமண முறை சிறிது வேறு படும்). திருமண நாளன்று காலை எண்ணெய் நலுங்கு ஒன்று உண்டு , மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் தனித்தனியே. மூன்று தாலிகள் (பொட்டுகள்) மஞ்சள் கயிறால் மாப்பிள்ளை கட்டுவார். கருகமணி மாலை தனியாக கிடையாது. திருமணம் முடிந்து பெண் வீட்டிற்கு சென்று ஓரிரு நாள் தங்கிய பிறகு தான் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வார்கள், மணமக்கள். சில நாட்கள் சென்று அந்த மஞ்சள் கயிற்றில் மூன்று தாளிகளையும் பிரித்து கோர்த்து , தங்க சங்கிலியில் பினைத்துக்கொள்ளவேண்டும். வேறு என்ன வித்தியாசம்னு எனக்கு சரியா நினைவில் இல்லை.

    Last edited by RathideviDeva; 7th Oct 2015 at 11:56 AM.
    selvipandiyan, jv_66 and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter