Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....


Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.


  1. #191
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by ponschellam View Post
    wow ........சூப்பர் களோ
    இங்கும் உன் வால்தனம் தெரியுதே
    பின்னே என்ன அக்கா... கல்யாண சடங்குகளை... கடுப்போட திட்டிகிட்டே செய்தேன் இல்ல.. அந்த முட்டிபோட்டு ஆசிர்வாதம் பண்ணும்போது எங்க அம்மம்மா என் கிட்டே வந்தும் மரியாதையா சிலுவை போட்டுட்டு ஓடி போய்டு தலைல கை வச்சி பிரசங்கம் பண்ண சோத்துல விஷம் வச்சிடுவேன் சொல்லி இல்லே மிரட்டுனேன்... எங்க அக்காவுக்கு எவ்ளோ டைம் எடுத்துதுன்னு பார்த்த அனுபவம் தான்...


    Sponsored Links

  2. #192
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் ஜெயந்தி கா ,
    thanks for tagging ...........


    எங்க முறை ........எளிய முறையில் தமிழ் படி நடக்கும் சீர்திருத்த கல்யாணம் போல தான் இருக்கும் .........நிறைய சடங்குகள் கிடையாது ............no அய்யர் .no மஞ்ச கயிறு ..........தங்க சங்கிலியில் தான் தாலி போடுவோம் அதான் மாப்பிள்ளைக்கு கௌரவம் என்று ..........முடியாட்டா கூட பெண்ணுக்கு போடும் பவுன் ல தாலி சங்கிலி மாப்பிள்ளை வீட்டில் கொடுத்து விடுவோம் .........அவங்க தாலி கோர்த்து .........கட்டிடுவாங்க .தாலியில் சொக்கர் மீனாட்சி படம் இருக்கும் ,அல்லது லிங்கம் மட்டும் அதுவும் கல் வைத்து ...........டாலர் போல தான் இருக்கும் ......

    சாதகம் பொருத்தம் பார்த்து ,போட்டோவிலும் பிடித்த பின் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வருவாங்க ........கிட்டத்தட்ட உறுதி ஆனால் தான் வீட்டுக்குள் விடுவோம் ........இல்ல கோவிலில் பார்த்தே .......விலகிடுவாங்க .

    பொண்ணு பிடித்தால் ..........அப்பவே சீர் எல்லாம் பேசிடுவோம் .......கல்யாண நாள் ,மண்டபம் எல்லாம் .........பூ மட்டுமாவது உடனே வாங்கி பொண்ணுக்கு வைத்து உறுதி பண்ணிடுவோம் அப்பவே .
    கல்யாணச் செலவு இருவரும் பாதி தான் .முன்பெல்லாம் தனித்தனியாகத் தான்மண்டபம் பிடித்தே வைப்பாங்க .இப்ப மாறிடுச்சு .....ஆனாலும் ஒரு பங்கு செலவு மாப்பிள்ளை வீட்டில் வந்துடும் .

    மனமேடை அலங்காரம் ,மேளம் போன்றவை மாப்பிள்ளை வீட்டு செலவே ........நிச்சய சாப்பாடு பொண்ணு வீட்டு செலவு ......

    அடே சிம்பிள் அண்ட் பெஸ்டா இருக்கே..

    selvipandiyan, jv_66 and fatima15 like this.

  3. #193
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,698

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by gloria View Post
    தேங்க்ஸ் அக்கா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் தாலி 108 நூலில் சேர்த்து திரிப்பங்க அதில் தான் தாலி கொப்பங்க ஆனா மஞ்சள் தடவ மட்டாங்க வெள்ளையா தான் கட்டுவாங்க
    ஒ அப்படியா ....ரொம்பவே வித்தியாசமா இருக்கே ....ஆமா , நான் சில பேரை பார்த்திருக்கேன் . வெள்ளைக் கலர்ல தாலி மாதிரி கயிறு போட்டிருப்பாங்க . அப்போ இதுதான் உங்க தாலிக்கயிறா....இப்போதான் தெரியுது எனக்கு . நான் கூட சும்மா ஏதோ கயிறு போட்டிருக்காங்கன்னு நினைச்சுட்டேன் .

    gloria likes this.
    Jayanthy



  4. #194
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,698

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Sorry Jayanthy sis @jv_66, konjam late aagidichchu.

    எங்கள் (பிறந்த வீட்டு) சம்பரதாயங்களை சொல்கிறேன். முதலில் பெண் பார்த்து முடித்த பின் , இரு வீட்டாருக்கும் சம்மதமெனில், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று பார்ப்பார்கள். அதாவது வீடு எப்படி, வாழப்போகும் இடம் + சொந்த பந்தங்கள் எப்படி என்று ஒரு சின்ன inspection. அன்று அங்கேயே விருந்து சாப்பிடுவார்கள். அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் வேண்டுமெனில் வந்து பெண் வீட்டை பார்க்கலாம்.


    அதன் பிறகு நிச்சயதார்த்தம். பெண் வீட்டார் செலவு. திருமண தேதி முடிவு செய்யப்படும். திருமணம் மாப்பிள்ளை வீட்டு செலவு . முஹுர்த்தத்திற்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பட்டு புடவை எடுக்கலாம்(கருப்பு வெள்ளை தவிர).பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து முஹுர்த்த பட்டு புடவை கான்ஷீபுரம் சென்று எடுப்பார்கள். இப்போது வசதி கருதி பெண் வீட்டாரிடம் பணம் கொடுத்துவிடுவார்கள். பெண் வீட்டார் தனியாகவே சென்று எடுத்துக்கொள்ளலாம். பெண்ணிற்கு கண்டிப்பாக மூன்று பட்டு புடவை தேவைப்படும்.


    திருமண நாளிலிருந்து 3,5,7 நாட்கள் முன்பு முகூர்த்த நாள் பார்த்து பந்தல் கால் நடுவார்கள். ஒரு சிறு குழியில், மணப்பெண் நவதானியங்கள் கொட்ட, பால் ஊற்றி பந்தல் காலை ஐந்து அக்கம் பக்க சுமங்கலி பெண்களை வைத்து நடுவார்கள். இதே தான் மாப்பிள்ளை வீட்டிலும் நடக்கும்.


    திருமணத்திற்கு முந்தைய தினம் பெண் அழைப்பு. மாப்பிள்ளை வீட்டிலிருந்து நாத்தனார் பெண்ணை அழைக்க சுற்றம் சூழ பெண் வீட்டிற்கு வருவார்கள். மறுபடி அவர்களுக்கு ஒரு விருந்து. பெண் வீட்டார் இங்கிருந்து திருமண நடக்கும் மாப்பிள்ளை ஊருக்கு செல்வார்கள். இந்த காலத்தில் வசதி கருதி, மணப்பெண் முன்பே திருமண ஊருக்கு வந்து ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார். பெண்ணை தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருகிறார்கள். அதுவே எங்களுக்கு கல்யாண வரவேற்பு(reception ) மாதிரி. சில பேர் நிச்சயமும் அன்றே வைத்து கொள்வார்கள்.


    தாலி கொடி முன்பே தங்கத்தால் செய்யப்பட்டதால், ஒரு மாப்பிள்ளை குடும்பத்தின் மூத்த சுமங்கலி அதை அணிந்திருப்பார் (ஒரு செண்டிமெண்ட்டுக்காக ).


    திருமண நாள் - பெண்ணும் மாபிள்ளையும் தனித்தனியே மண மேடை வந்து முஹுர்த்த உடையை வாங்கி செல்வர்(மேடையில் ஐயருடன் சம்ப்ரதாயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்) . மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் முஹுர்த்த உடையில் வருவதற்குள் அரசாணி கால் நடுதல் நடைபெறும் . பெண்கள் மூவர் வந்து அரச மரத்து குச்சிக்கு, மஞ்சள் குங்குமம், கெட்டி மேளம் கொட்ட, இடுவார்கள். அதன் பிறகு மணப்பெண், மணமகன் மணமேடை வருவார்கள். இருவரும் அவரவர் பெற்றோரை பாதை பூஜை செய்வார்கள். ஏதேதோ அய்யர் சொல்ல பொம்மை போல் செய்வார்கள், அதற்குள் மாங்கல்யம் மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறப்படும். பிறகு கெட்டி மேளம் கொட்ட , அட்சதை தூவ , பெரியவர்களின் ஆசியுடன், தங்க தாலியை மாப்பிள்ளை பெண்ணிற்கு அணிவார். கருக மணி மாலையை நாத்தனார் அணிவார்.


    மெட்டியை பெண் முன்பே அணிந்து கொள்ளலாம். மாங்கல்யத்திற்கு பிறகு, மாப்பிள்ளை பெண்ணின் தாலியை சுற்றி தன கையை கொண்டு வந்து தன மனைவிக்கு நெற்றியில் குங்குமம் வைப்பார். அதன் பிறகு அக்னியை மூன்று முறை இருவரும் வளம் வருவார்கள்( சுண்டு விரலால் பிணைக்கப்பட்டு ). மாப்பிள்ளையை மாப்பிள்ளை தோழரோ அல்லது வேறு யாரோ இட்டு செல்ல , அவரைத் தொடர்ந்து மாப்பிள்ளை மணப்பெண்ணை கூட்டி செல்ல, மணப்பெண்ணின் மறு கையை பிடித்தபடி இன்னொரு பெண் அக்னியை சுற்றுவார்கள். அவ்வளவு தான் இனி இருவரும் கவன மனைவியாக திருமண பந்தத்தினுள் கால் எடுத்து வைத்து விட்டார்கள்.


    அதன் பிறகு மாலை மாற்றல், பெரியவர்கள் வந்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் அரிசியால் மேலிருந்து கீழ் வரை ஆசிர்வதிப்பார்கள். அதன் பிறகு ஒரு குடத்து நீரில் மோதிரம் போட்டு விளையாட்டு. இது தான் மொத்த கல்யாண நிகழ்வுகளிலேயே ரொம்ப fun ஆனது. My favorite too... (என் கல்யாணத்துல நேரமில்லைன்னு கட் பண்ணிட்டாங்க. பாவிங்க, வாழ்க்கைல ஒருவாட்டி தான் வரும் அதையும் பிடிங்கிட்டாங்க . ஒரு வேள ரெண்டு பேரும் எப்படியும் இப்ப மோதிரத்துக்கு அடிச்சிக்கிற மாதிரி வாழ்க்கை பூரா பிச்சிக்க தான் போறீங்கன்னு விட்டுட்டாங்களோ என்னவோ).


    திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு மணமக்கள் அழைத்து செல்லப்பட்டு பால் பழம் வழங்கப்படும். அப்புறம் அடுத்த நாள் பெண் வீட்டில் சம்பந்தம். அதாவது ஊரில் உள்ளவர்களை அழைத்து விருந்து அளிக்க வேண்டும். மணப்பெண்ணும் மாபிள்ளை யும் casualஆக வருவார்கள். இது ஒரு கிராமத்து ஸ்டைல் casual reception மாதிரி நினைச்சுக்கோங்க.


    அவ்ளோ தான்னு நினைக்குறேன்.


    இதில் எனக்கு தெரிந்து ஒரு சில மாற்றம் தான் என் திருமண நிகழ்வில்(என் கணவர் வீட்டில் திருமண முறை சிறிது வேறு படும்). திருமண நாளன்று காலை எண்ணெய் நலுங்கு ஒன்று உண்டு , மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் தனித்தனியே. மூன்று தாலிகள் (பொட்டுகள்) மஞ்சள் கயிறால் மாப்பிள்ளை கட்டுவார். கருகமணி மாலை தனியாக கிடையாது. திருமணம் முடிந்து பெண் வீட்டிற்கு சென்று ஓரிரு நாள் தங்கிய பிறகு தான் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வார்கள், மணமக்கள். சில நாட்கள் சென்று அந்த மஞ்சள் கயிற்றில் மூன்று தாளிகளையும் பிரித்து கோர்த்து , தங்க சங்கிலியில் பினைத்துக்கொள்ளவேண்டும். வேறு என்ன வித்தியாசம்னு எனக்கு சரியா நினைவில் இல்லை.

    ரொம்ப தேங்க்ஸ் ரதி @RathideviDeva

    எப்போ சொன்னா என்னம்மா ....

    இதெல்லாம் நீங்கல்லாம் பகிர்ந்துக்கறதால, கல்யாணம் என்கிறது எத்தனை வகைகள்ல செய்யப்படுதுன்னு எவ்வளோ பேர் தெரிஞ்சுக்க முடியுது .

    நிறைய சடங்குகள் எல்லரோடது போலவே இருந்தாலும் சிலது ரொம்பவே வித்தியாசப்படுது உங்க முறைக் கல்யாணத்துல .

    வயதான பெண் முன்னாடியே தாலியை அணியறது , அக்கினியை வலம் வரும்போது , கூட ஒரு பெண்ணும் பையனும் வரது , இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை .

    மெட்டியை பெண்ணே அணிஞ்சுக்கலாமா....வேற யாரும் போட்டுவிட வேண்டாமா ?

    பரவால்ல ...காலத்துக்கேற்ப நிறைய மாற்றங்கள் செய்து இருக்காங்களே..

    அடடா ....அந்த மோதிர விளையாட்டை உங்களுக்கு வைக்காம போயிட்டாங்களா ....ச்சே பாவம் .

    பெண் வீடு , மாப்பிள்ளை வீடு ரெண்டு பேருக்கும் தனித்தனி சம்பிரதாயம் இருக்கும் என்கிறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு .

    Last edited by jv_66; 8th Oct 2015 at 04:20 PM.
    gkarti and RathideviDeva like this.
    Jayanthy



  5. #195
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Different Customs and Traditions in Weddings....

    i'll share how our culture wedding happened.
    முதலில் பொண்ணு/மாப்பு விடம் எப்படி பட்ட பையன்/பொண்ணு வேணும் நு கேப்பாங்க
    அப்புறம் அவங்களுக்கு ஒத்து வார மாதிரி ஜாதகம் வந்தால் முதலில் ஜாதக பரிவர்தனை நடக்கும். பிறகு ஜாதகம் பொருந்தி இருந்தால் photo exchange ஆகும் photo பார்த்து பிடிச்ச அப்புறம் dowry bla bla கதைபாங்க இப்படி எல்லமே ok ஆனப்புரம் பொண்ணு பார்க்க வருவாங்க.then on that time decide the marriage date.then ponnoda parents will go and see the paiyan home.
    will be continued.........

    Regards,
    sathana

    jv_66 and gkarti like this.

  6. #196
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Different Customs and Traditions in Weddings....

    பிறகு....
    நிச்சயதார்த்தம் & registration (some time this will happened in same day but in most of the arranged marriages they will have this earlier soon as posible after the ponnu paarthal).

    நிச்சயதார்த்தம் - parents accept the wedding and read the nichaya paththirikai and exhange the registration dress.
    basically no works for the bride and groom

    (sorry for the thanglish )
    Registration - ponnu or paiyan have to give notice before 14 days.
    then registrar will come and read and get signature from bride and groom then saatchi one from ponnu side and one from paiyan side.
    then registrar will give marriage certificate after that they will exchange ring.
    piRaku cake cut pannuvanka (ippa avanka sattappadi husband and wife)
    inka atha paathi kalyaanam mudinthathaaka solluvinam.

    will continue.....

    Regards,
    sathana

    jv_66 likes this.

  7. #197
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Different Customs and Traditions in Weddings....

    இங்க எல்லா செலவும் பொண்ணு வீடு தான் பார்பார்கள்.
    மாப்பிள்ளை வீட்டுக்கு கூரை, தாலி செலவு மட்டும் தான்.
    wedding kum registrationkkum idaippatta kaalam thaan ponnu and maappillaiyidam kadala pooduvaanga (athu avanka pirachchinai)
    Wedding:
    மாப்பிள்ளைக்கு காப்பு கட்டப்படும் இது சில வேளை திருமணத்திற்கு முதல் நாள் நடக்கும்(i couldn't remember the exact name for this function)
    திருமண தினத்தன்று மாப்பிள்ளை காசிக்கு போவார் (:P only will go to the entrance of the wedding hall)(he will wear a yellow வேஷ்டி to this)
    then ponnu appa poi neenka poga veendam en pennai thirumanam seithu vaazungkal enru solluvaar.
    மாப்பிள்ளையும் சரி என்று சொல்லி தனது உடையை வாங்கிக்கொண்டு போவார்(kaasikku illa dress change panna )
    intha time la ponna kootitu vanthu kaapu kadduvaanka

    ......... will be continued.....

    jv_66 likes this.

  8. #198
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Different Customs and Traditions in Weddings....

    then...
    maalai maaruthal and uunjal nadakkum. piraku kannikaathaanam ponnoda appa madiyila vaiththu seiyappadum piraku ponnu madisaar uditheetu varuvaa apuram thaali kaddappadum. piraku sila sampirathaaya sadangkukal nadakkum athu sariya enakku ninaivu illai.
    this is the way how srilankan Birahman wedding happened
    i'll later share how srilankan jaffna wedding happen

    Thanks for reading this....

    Regards,
    Sathana

    jv_66 likes this.

  9. #199
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,698

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sathana24 View Post
    i'll share how our culture wedding happened.
    முதலில் பொண்ணு/மாப்பு விடம் எப்படி பட்ட பையன்/பொண்ணு வேணும் நு கேப்பாங்க
    அப்புறம் அவங்களுக்கு ஒத்து வார மாதிரி ஜாதகம் வந்தால் முதலில் ஜாதக பரிவர்தனை நடக்கும். பிறகு ஜாதகம் பொருந்தி இருந்தால் photo exchange ஆகும் photo பார்த்து பிடிச்ச அப்புறம் dowry bla bla கதைபாங்க இப்படி எல்லமே ok ஆனப்புரம் பொண்ணு பார்க்க வருவாங்க.then on that time decide the marriage date.then ponnoda parents will go and see the paiyan home.
    will be continued.........

    Regards,
    sathana
    Quote Originally Posted by sathana24 View Post
    பிறகு....
    நிச்சயதார்த்தம் & registration (some time this will happened in same day but in most of the arranged marriages they will have this earlier soon as posible after the ponnu paarthal).

    நிச்சயதார்த்தம் - parents accept the wedding and read the nichaya paththirikai and exhange the registration dress.
    basically no works for the bride and groom

    (sorry for the thanglish )
    Registration - ponnu or paiyan have to give notice before 14 days.
    then registrar will come and read and get signature from bride and groom then saatchi one from ponnu side and one from paiyan side.
    then registrar will give marriage certificate after that they will exchange ring.
    piRaku cake cut pannuvanka (ippa avanka sattappadi husband and wife)
    inka atha paathi kalyaanam mudinthathaaka solluvinam.

    will continue.....

    Regards,
    sathana
    Thanks much @sathana24 for sharing the Srilankan type of wedding.

    sry. for the late reply ma.


    ஓஹோ ....நிச்சயம் செய்யும்போதே ரெஜிஸ்டர் செய்துடுவாங்களா....இது ரொம்பவே வித்தியாசம் .

    பையன், பெண்ணே ரெஜிஸ்ட்ரேஷனுக்கு இன்பார்ம் பண்ணிடணுமா ?

    அப்போ ஒரிஜினல் கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க தம்பதிகளா ஆகிடுறாங்க ...சூப்பர் .

    அப்புறம் கடலை போட ஏது தடை?

    sathana24 likes this.
    Jayanthy



  10. #200
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,698

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sathana24 View Post
    இங்க எல்லா செலவும் பொண்ணு வீடு தான் பார்பார்கள்.
    மாப்பிள்ளை வீட்டுக்கு கூரை, தாலி செலவு மட்டும் தான்.
    wedding kum registrationkkum idaippatta kaalam thaan ponnu and maappillaiyidam kadala pooduvaanga (athu avanka pirachchinai)
    Wedding:
    மாப்பிள்ளைக்கு காப்பு கட்டப்படும் இது சில வேளை திருமணத்திற்கு முதல் நாள் நடக்கும்(i couldn't remember the exact name for this function)
    திருமண தினத்தன்று மாப்பிள்ளை காசிக்கு போவார் (:P only will go to the entrance of the wedding hall)(he will wear a yellow வேஷ்டி to this)
    then ponnu appa poi neenka poga veendam en pennai thirumanam seithu vaazungkal enru solluvaar.
    மாப்பிள்ளையும் சரி என்று சொல்லி தனது உடையை வாங்கிக்கொண்டு போவார்(kaasikku illa dress change panna )
    intha time la ponna kootitu vanthu kaapu kadduvaanka

    ......... will be continued.....
    Quote Originally Posted by sathana24 View Post
    then...
    maalai maaruthal and uunjal nadakkum. piraku kannikaathaanam ponnoda appa madiyila vaiththu seiyappadum piraku ponnu madisaar uditheetu varuvaa apuram thaali kaddappadum. piraku sila sampirathaaya sadangkukal nadakkum athu sariya enakku ninaivu illai.
    this is the way how srilankan Birahman wedding happened
    i'll later share how srilankan jaffna wedding happen

    Thanks for reading this....

    Regards,
    Sathana
    ஓஹோ ....இந்த எல்லா சடங்குகளும் எங்களோடதை போலவேதான் இருக்கு .

    பாருங்களேன் ....ஸ்ரீலங்காவில் கல்யாணம் நடந்தாலும் , மாப்பிள்ளை காசிக்குத்தான் போவேன்னு சொல்றாரே

    அந்த நிச்சயம் முடிந்ததும் செய்யற ரெஜிஸ்ட்ரேஷன் தவிர மற்ற எல்லாமே எங்க கல்யாணங்கள் போலத்தான் நடக்குது .

    உங்களுக்கும் எல்லா செலவுகளும் பெண் வீட்டினர்தானா ?

    ஆமாம் சாதனா , இலங்கையில் , கல்யாணம் முடிந்தபிறகு , மாப்பிள்ளையும் பெண் வீட்டிற்கே வந்து வாழுவார்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன் ...அது உங்க கம்யூனிட்டிலையும் உண்டா ?

    Thanks a lot @sathana24 for sharing these details. very nice to know these.

    sathana24 likes this.
    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter