Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 2 Post By narayani80
  • 1 Post By narayani80
  • 2 Post By narayani80
  • 1 Post By narayani80
  • 1 Post By narayani80

பேலியோ டயட்


Discussions on "பேலியோ டயட்" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    பேலியோ டயட்

    பேலியோ டயட் என்றால் என்ன?


    பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமே.

    தானியம், சர்க்கரை அற்ற இந்த உணவை உண்ட வரை மக்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, -ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தானிய உணவை உண்டபின்னரே இவ்வியாதிகள் மனிதரை சூழந்தன*



    Inspired by these photos and some peoples success stories to loss weight .


    168 kg to 120 kg in 90 days by paleo diet.






    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails பேலியோ டயட்-10399805_10205569921957905_6566969308814736835_n.jpg   பேலியோ டயட்-12938300_1310029955695224_4939435169649009650_n.jpg   பேலியோ டயட்-untitled-1-copy.jpg  

  2. #2
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: பேலியோ டயட்

    பேலியோ டயட் என்றால் என்ன?

    பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமே.

    தானியம், சர்க்கரை அற்ற இந்த உணவை உண்ட வரை மக்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, -ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தானிய உணவை உண்டபின்னரே இவ்வியாதிகள் மனிதரை சூழந்தன*


    பேலியோ டயட்டில் என்ன சாப்பிடலாம்?

    முட்டை
    இறைச்சி, மீன்
    பேலியோ காய்கறிகள்
    மூலிகைகள்
    தண்ணீர்
    பாதாம், வால்நட் முதலான கொட்டைகள் (நிலகடலை அல்ல)
    சிறிதளவு பால், தயிர் சுவைக்கும் கால்சியத்துக்கும் சேர்க்கிறோம்

    இவற்றை எந்த அளவுகளில் சாப்பிடலாம்?


    அளவுகணக்கு எதுவும் இல்லை. முட்டை, இறைச்சி ஆகியவற்றை வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி அடங்கியபின் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.

    எம்மாதிரி முட்டை, இறைச்சி சாப்பிடவேண்டும்?


    முழு முட்டையும் சபபிடவேண்டும். இறைச்சிகளில் கொழுப்பு நிரம்பிய இறைச்சியே நல்லது. கொழுப்பு குறைவான கருவாடு, சிக்கன் பிரெஸ்ட் போன்றவற்றை குறைவாக அல்லது அளவாக சாப்பிடுங்கள். எக் ஒயிட்ஸ் மட்டும் சபபிடுவது, ஸ்கிம் மில்க் சபபிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். பேலியோவில் கொழுப்பே உங்கள் எரிபொருள், சர்க்கரை அல்ல என்பதால் கொழுப்பு நிரம்பிய இறைச்சியாக உண்ணலாம்

    எவ்வகை சமையல் முறையை பின்பற்றவேண்டும்?


    குக்கரில் வேகவைப்பது, அவன், வாணலியில் சமைப்பது, க்ரில் செய்வது, பேக் செய்வது ஆகியன செய்யலாம். எண்ணெயில் பொறிப்பதை தவிர்க்கவும்

    எவ்வகை சமையல் எண்ணெய் பயன்படுத்தலாம்?


    -ஹைட்ரஜனேட் செய்யாத இயற்கை மிருக கொழுப்புகள்: லார்ட் (பன்றிகொழுப்பு), பேகன் க்ரீஸ் (பன்றிக்கொழுப்பு), பீஃப் டாலோ (மாட்டுகொழுப்பு), நெய், வெண்ணெய்


    -ஹைட்ரஜன்நேட் செய்யாத கொட்டை எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய்


    மூன்றாமிடம்: எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய்

    தவிர்க்கவேண்டியவை: கடலை எண்ணெய், சஃபோலா, சனோலா, சூரியகாந்தி, ரைஸ் ப்ரான் ஆயில், கடுகு எண்ணெய், காட்டசீட் ஆயில், வானஸ்பதி, டால்டா

    டயபடிஸ் இருப்பவர்கள் பேலியோ எடுககலமா?


    கட்டாயமாக எடுக்கலாம். ஆனால் பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் வரும்…ஆக பேலியோ எடுக்கும் முதல் நாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்கும் நிலை அல்லது சுத்தமாக நிறுத்தும் இனிய பிரச்சனையை நீங்கள் சந்திப்பீர்கள். சுகர் அளவுகளை தொடர்ந்து மானிட்டர் செய்து, இன்சுலின் ஊசி அளவை குறைத்து வரவும்


    பேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன?

    முதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம்.அதன்பின் மறைந்துவிடும்


    பேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை?

    பட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும்
    குறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம்.
    கொழுப்பை சாப்பிட பயபடுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்

    எத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்?

    துவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்


    எம்மாதிரி உடல்பயிற்சி செய்யவேண்டும்?

    30- 45 நிமிட மெதுநடை, ஜிம்முக்கு சென்று பளுதூக்குவது, சைக்கிளிங் , கிரிக்கட் மாதிரி விளையாட்டுக்கள் ஆகியவற்றை செய்யலாம். ஓடுதல், ஜாகிங், கடும் பயிற்சிகள் ஆகியவை அவசியமில்லை என்பதுடன் ஆபத்தும் கூட.


    எனக்கு சொரொயாசிஸ், -ஹைப்போதையாரிடிசம், பிகாட் மாதிரி ஸ்பெசலான சில வியாதிகள் உள்ளன. நான் பேலியோ பின்பற்றலாமா?

    கட்டாயமாக செய்யலாம். இதற்கான தனி டயட்டுகள் உள்ளன. ஆரோக்கியம், நல்வாழ்வு குழுமத்தில் பதிவு செய்து டயட் கேளுங்கள்.


    நான் சைவம்..பேலியோவில் எம்மாதிரி தேர்வுகள் எனக்கு உள்ளன?

    பேலியோவில் குறைந்தது முட்டையாவது தினம் சாப்பிட தயாராக வேண்டும்.. 90% வியாதிகளை முட்டையை அடிப்படையாக கொண்ட எஜிட்டேரியன் டயட்டால் துரத்த முடியும். முட்டையும் சாப்பிடவில்லை எனில் எடைகுறைப்பு, பிரசர், சுகர் முதலானவற்றை சற்று சிரமபட்டு குறைக்க முடியும். -ஹார்மோன் சிக்கல், ஆண்மைகுறைவு, ஆட்டோஇம்யூன் வியாதிகள், சொரஇயாசிஸ் போன்ற சிக்கலான பிரச்சனைகளை ஒன்று அதனால் தீர்க்க இயலாது. அல்லது யோகி நிலைக்கு சென்று கடும் பத்தியம் இருக்கும் நிலைக்கு தள்ளபடுவீர்கள்.


    நான் பால் கூட குடிக்காத வீகன்…

    ராங் நம்பர்….நீங்கள் அழைத்த எண்ணை சரிபார்க்கவும்


    கட்டாயம் தினம் 100 பாதாம் சாபிடணுமா?

    முடியாதெனில் வேறு தேர்வுகள் உள்ளன. ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் கேளுங்கள்


    நான் பேலியோ ஆரம்பித்து ஆகி விட்டது..அடுத்து என்ன செய்யவேண்டும்?

    பயணத்தை அனுபவியுங்கள்…எடை இறங்கும்வரை இறங்கட்டும். எடை இறங்குவது நின்றால் வாரியர், கெடொசிஸ் போன்ற அடுத்த கட்டங்களுக்கு செல்லலாம்..ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேளுங்கள்

    Last edited by narayani80; 20th Apr 2016 at 04:53 PM.
    t priya kalpana likes this.

  3. #3
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: பேலியோ டயட்

    பேலியோ துவக்கநிலை டயட்

    முன் எச்சரிக்கை:

    இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. டயட்டை துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்

    இந்த டயட்டில் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

    இந்த டயட்டில் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.

    இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.

    ——-

    இந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.

    விதிகள்:

    மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே

    சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்

    அசைவ டயட்:

    மீல் 1:


    3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.

    மீல் 2:

    100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.

    OR

    நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்

    OR

    பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)

    மீல் 3:

    பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். பசி அடங்கும் அளவுக்கு. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்

    ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்

    முட்டை சேர்த்த சைவ டயட்:

    மீல் 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.

    மீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய் (பசி அடங்கவில்லையெனில், அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கவும்).

    மீல் 3: 4 முட்டை

    ஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்

    முட்டை சேர்க்காத பியூர்வெஜ் சைவ டயட்

    Meal option 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.

    Meal option 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். உடன் காய்கறி சாலட்/ காய்கறி சூப் ஏராளமாக பருகவும். அவகாடோவும் சேர்க்கலாம்

    Meal option 3: முழுகொழுப்பு பாலில் செய்த பனீர் டிக்கா, பனீர் மஞ்சூரியன்.பசி அடங்கும் அளவுக்கு

    சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே

    தவிர்க்கவேன்டியவை

    பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)

    அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்

    பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்

    பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற

    கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.

    அளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை

    மாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)

    தவிர்க்கவேண்டிய இறைச்சி:

    சாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்

    கொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி

    கருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)

    முட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்

    எண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி

    உண்ணகூடிய காய்கறிகள்

    காளிபிளவர்
    பிராக்களி
    முட்டைகோஸ் முள்ளங்கி
    பாகற்காய்
    காரட் (200 grams max. dont take daily)
    பீட்ரூட் (200 grams max. dont take daily)
    தக்காளி
    வெங்காயம்
    வெண்டைக்காய்
    கத்திரிக்காய்
    சுண்டைக்காய்
    வாழைத்தண்டு
    அனைத்துவகைகீரைகள்
    முருங்கை
    ஆஸ்பாரகஸ்
    ருபார்ப்
    ஆலிவ்
    செலரி
    வெள்ளரி
    ஸுக்கனி
    காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
    பச்சை, சிகப்பு மிளகாய்
    பூசணி
    காளான்
    தேங்காய்
    எலுமிச்சை
    பூண்டு
    இஞ்சி
    கொத்தமல்லி
    மஞ்சள்கிழங்கு
    அவகாடோ பீர்க்கங்காய் புடலங்காய் ,சுரைக்காய்

    தவிர்க்கவேண்டிய காய்கறிகள்

    மரவள்ளி
    சர்க்கரைவள்ளி
    உருளைகிழங்கு
    பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
    சென்னா
    சுண்டல்
    பருப்புவகைகள் அனைத்தும்
    பயறுவகைகள் அனைத்தும்
    நிலக்கடலை
    சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
    *சோயா எந்தவடிவிலும் ஆகாது*
    அவரைக்காய்
    பனங்கிழங்கு
    பலாக்காய்
    வாழைக்காய்
    பழங்கள் அனைத்தும்


  4. #4
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: பேலியோ டயட்

    Butter Tea / பட்டர் டீ



    t priya kalpana likes this.

  5. #5
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: பேலியோ டயட்

    Last edited by narayani80; 20th Apr 2016 at 05:12 PM.
    t priya kalpana likes this.

  6. #6
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    kottayam
    Posts
    4

    Re: பேலியோ டயட்

    i too read in vikatan book.
    thank you.

    i am overweight nearly 88 kg . i will try this diet.


  7. #7
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    kottayam
    Posts
    4

    Re: பேலியோ டயட்

    how to eat chicken and mutton recipes.

    boiled or fried or grilled ? can you clear this doubt?


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter