தானிய சாண்ட்விச்
தேவையானவை:
முளைகட்டிய தானியக் கலவை,
கொத்தமல்லி - தலா ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3,
பிரெட் ஸ்லைஸ் - தேவையான அளவு,
கோதுமை மாவு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு, நெய் - தேவையான அளவு.


செய்முறை:
தானியத்தைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிய விடவும் (தண்ணீர் சேர்க்காமல் குக்கரி-லும் வேக விடலாம்). வேக வைத்த தானியத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த தானியத்தைப் போட்டுக் கிளறி, கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.


பச்சை சட்னிக்கு கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் தடவி, அதன்மேல் தானியக் கலவையைப் பரப்பி, மற்றொரு பிரெட்டில் பச்சை சட்னியைத் தடவி மூடி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இதை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Similar Threads: