எடை குறைக்க புரோட்டீன் ரிச் உசிலி

தேவையானவை:
முளைகட்டிய பயறு - ஒரு கப்,
முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப்,
முளைவிட்ட சோளம் - ஒரு கப்,
முளைகட்டிய கொள்ளு - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.

குறிப்பு: சூடான சாதத்தில்அல்லது ஒரு மெல்லிய சப்பாதி அல்லது இரண்டு மிதமான இடலிகளுடனும் இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.

Similar Threads: