வெஜ் டயட் பர்கர்


தேவையானவை:
கட்லெட் செய்ய: முளை கட்டிய பயறு,
வேக வைத்த காய்கறிகள் - தலா அரை கப்,
எலுமிச்சைச் சாறு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

பர்கர் செய்ய:
கோதுமை பிரெட் துண்டுகள் - 4 முதல் 6,
மெல்லியதாக நறுக்கிய கேரட், கோஸ், வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, புதினா சட்னி - சிறிதளவு.

செய்முறை:

முளைகட்டிய பயறை ஒன்றிரண்டாக அரைத்து, இஞ்சி - பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் ஆற வைத்து, வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து உதிர்த்து பிசைந்து கொள்ளவும்.

எண்ணெயைக் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாகக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும்.

இறக்கிய கலவை ஆறியதும் அதிலிருந்து சிறிது எடுத்து கட்லெட் வடிவத்தில் செய்து கொள்ளவும். கட்லெட்களை சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பிரெட் துண்டுகளை வட்டமாக வெட்டி, தோசைக்கல்லில் லேசாக சூடாக்கவும். ஒரு பிரெட் துண்டின் மேல் நறுக்கிய காய்கறிகளைப் பரவலாக வைக்கவும். அதன்மேல் சுட்டெடுத்த கட்லெட்டை வைக்கவும். மற்றொரு பிரெட் துண்டில் புதினா சட்னியை தடவிக் கொள்ளவும். சட்னி தடவிய பக்கம் கட்லெட்டின் மேல் படுமாறு வைத்து பரிமாறவும்.

Similar Threads: