அழகான உடல் வாகைப் பெற 30 நிமிடம் போதும்
.............................................................................
பெண்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் வாகு பற்றி கவலைப்டுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இங்கு உள்ளது.

வாஷிங்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று 13 வாரங்கள் நடத்திய ஆய்வின் இறுதியில், ஒரு பெண் தனது உடலை குறைப்பதாக இருந்தாலும் சரி, கூட்டுவதாக இருந்தாலும் சரி, அழகான உடல் வாகைப் பெற தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதும் என்று கூறியுள்ளது.
ஒரு சராசரி மனிதன், தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து வியர்வையை வெளியேற்றினால் போதும் ஆரோக்கியாக வாழலாம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

அரை மணி நேர உடற்பயிற்சியும், நமது நோக்கத்துக்கு ஏற்ற உணவு முறைகளுமே, அழகான உடல் வாகைப் பெறப் போதும் என்று நம்பிக்கை ஊட்டுகிறது இந்த ஆய்வு.

Similar Threads: