* முட்டைக் கோஸ் இலைகளின் சாறை எடுத்து அத்துடன் சிறிது ஈஸ்ட், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி, பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்.

* தேன், எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.

* முழங்கை கறுப்பாகவும், சொரசொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் பன்னீரைக் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பினால் முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி
சருமத்தை மென்மையாக்கும்.

* வெள்ளரிக்காயையும், காரட்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் புள்ளிகள், கரும் மச்சங்களும் மறைந்துவிடும்.

* சாத்துக்குடி சாறில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் கெட்டியாகப் பூசி 20 நிமிடம் கழித்து அலம்பிவிடவும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்துவிடும்.

* ஒரு தேக்கரண்டி துளசி இலையின் சாறுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக மாறிவிடும்.

* பப்பாளிப் பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

Similar Threads: