கொள்ளுத் தொக்கு

தேவையான பொருள்கள்:
கொள்ளு (முதல் நாள் இரவு ஊறவைக்கவும்) - 1/4 கிலோ,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
பூண்டு - 10 பல்,
வெங்காய வடகம் (option), கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.

செய்முறை:
ஊறவைத்த கொள்ளுவை, குக்கரில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, தனியா, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து விசில்விட்டு எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய வடகம், கறிவேப்பிலை, கொத்து மல்லித் தழை தாளித்து குக்கரில் உள்ள கொள்ளில் (தண்ணீர் வடித்த) போடவும். ஆறியபின் மிக்ஸியில் ஒரு நிமிடம் சுற்றி எடுத்தால் கொள்ளுத் தொக்கு தயார்.

இதை சாதம் உடன் பிசைந்து சாப்பிடவும். மாலை நேரத்தில் சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். கொள்ளின் நீரை ரசம் வைத்து குடிக்கலாம்.

Similar Threads: