வாழைப்பூ கஞ்சி

தேவையானவை:
முழு வாழைப்பூவிலிருந்து எடுக்கப்பட்ட பூக்கள் - 25,
சீரக சம்பா அரிசி - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பிரியாணி இலை - 1, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். தக்காளி, இஞ்சித்துருவல், வாழைப்பூ போட்டு வதக்கி, அரிசியைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். அரிசியில் எண்ணெய் ஏறும் வரை கிளறி, உப்பு போட்டு, கூழாக வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். இறக்கி, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பரிமாறலாம்.

இந்த கஞ்சி உடலில் உள்ள அதிக கொழுப்பை குறைக்கும்

இரத்தத்தில் உள்ள அதிக சக்கரையை குறைக்கும்

Similar Threads: