Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree243Likes

Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?


Discussions on "Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?" in "Weight Loss Diet and Guide" forum.


 1. #51
  narayani80's Avatar
  narayani80 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2010
  Location
  Bangalore
  Posts
  1,421

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் !!!
  இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
  1. ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
  2. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
  3. தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.
  4. அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.
  உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
  5. வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  6. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.
  7. தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
  8. அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
  9. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
  கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
  இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் (கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்), மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள் (கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.
  இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.
  ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
  நேரம் சாப்பிட வேண்டிய உணவு
  காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
  காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் )அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
  முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.
  நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்)
  மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
  மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
  இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ) காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா (காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
  படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர்.
  இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.


  Sponsored Links
  malbha, premabarani and fatima15 like this.

 2. #52
  srathi's Avatar
  srathi is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  singapore
  Posts
  1,441
  Blog Entries
  18

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  hi

  thnX for the useful infos

  malbha likes this.

 3. #53
  sudarshinidanie is offline Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  Colombo Sri lanka
  Posts
  661

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  thanks for the useful tips

  malbha likes this.

 4. #54
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  Quote Originally Posted by weightlossbutterfly View Post
  thanks for all the tips malbha. evlo tips you gave here.

  sure i will try 2-3 and stick to it continously atleast for 2 months.
  You are welcome sis...

 5. #55
  Gender
  Female
  Join Date
  Jul 2015
  Location
  mayiladuturai
  Posts
  29

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  Thank u for ur tips friend......

  malbha likes this.

 6. #56
  seetha26 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Delhi
  Posts
  114

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  Thank you very much for the info.

  Gomathy

  malbha likes this.

 7. #57
  seetha26 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Delhi
  Posts
  114

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  Thank u very much for this diet menu. I try this.

  Gomathy

  malbha likes this.

 8. #58
  subaravi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  SriLanka- Jaffna
  Posts
  390

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

  தகவல்களுக்கு நன்றி நண்பி
  அன்புடன்
  சுபா

  malbha likes this.

 9. #59
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?  உடல் இளைக்க மோர்க்கூழ்

  உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே

  ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில்

  அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம் ஸ்லிம் ஆகிடுவீங்க.


  தேவையான பொருட்கள்:
  அரிசி மாவு – 2 கப்

  கோதுமை மாவு – 1 கப்

  சோயா மாவு – 1/4 கப்

  தண்*ணீர் – 2 கப்

  மோர் – 2 கப்

  எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

  கடுகு – 1 டீ ஸ்பூன்

  பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்

  காய்ந்த மிளகாய் – 6

  உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்

  உப்பு – தேவையான அளவு


  செய்முறை:


  * எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்

  தாளித்து, தண்ணீ*ர் ஊற்றவும்.


  * இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா

  மாவு மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம்

  கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளறவும்.

  * கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக்

  கொண்டேயிருக்கவும்.

  * மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி

  கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


  * முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.


  * சூடாக சாப்பிட்டால் தேவாம்ருதம்தான். உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய

  நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.  Last edited by malbha; 2nd Nov 2015 at 02:34 AM.
  premabarani and Naemira like this.
 10. #60
  Naemira's Avatar
  Naemira is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  tuticorin
  Posts
  1,109

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter