Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree243Likes

Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?


Discussions on "Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #61
    rathisrini's Avatar
    rathisrini is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    335

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    Very very useful tips Malar...


    Sponsored Links
    malbha likes this.

  2. #62
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?



    மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்
    இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

    ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

    சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

    எலுமிச்சை, எலுமிச்சங்காய்

    எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

    புதினா

    புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

    இஞ்சி

    கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

    தண்ணீர்

    தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

    குறிப்பு

    மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

    ஜூஸ் செய்யும் முறை

    1 வெள்ளரிக்காய்
    5 எலுமிச்சை
    1 எலுமிச்சங்காய்
    15 புதினா இலைகள்
    2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
    2.5 லிட்டர் தண்ணீர்

    வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

    இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.


    premabarani and fatima15 like this.




  3. #63
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?



    தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.

    உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு அருகம்புல் மிக சிறந்த மூலிகை. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

    முதல்நாள் இரவே அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஓமத்தை பொடிசெய்து போட வேண்டும். இந்த கலவையை ஒரு குவளை நீரில் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்பு அதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
    மறுநாள் காலை அதை நன்றாக சாறுபிழிந்து சக்கையை நீக்கிவிட வேண்டும். இந்த சாறை தினமும் இதே போல் தயார் செய்து பத்து நாட்கள் வேறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை வற்றிவிடும்.

    தேவையற்ற கொழுப்பை குறைக்க கேரட்டை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவாக கொழுப்பு குறைந்து உடல் மெலியும்.

    இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

    வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். (குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

    Last edited by malbha; 6th Dec 2015 at 03:32 AM.
    Janani14, premabarani and fatima15 like this.




  4. #64
    thirumamagal is offline Friends's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    mysore
    Posts
    228

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    very useful tips

    malbha likes this.

  5. #65
    aarishraja is offline Citizen's of Penmai
    Real Name
    vidhya
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Newyork
    Posts
    614

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    HI malar,
    Nice Tips thank you so much for the tips
    by vidhya

    malbha likes this.

  6. #66
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?



    வயிறு குறைய யோகம்

    சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து

    கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள்

    துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள்

    பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக

    இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி,

    காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 – 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும்,

    வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும்,

    இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து,

    வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு

    காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள்,

    வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும்

    குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள் வலுப்பெறும்.


    இட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று

    ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு

    எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு

    விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச்

    சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும்

    என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும்

    ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச்

    சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.


    நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத

    தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து

    விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

    சில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம்.


    பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை

    நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப்

    பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை

    முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும்.

    முழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள்

    இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால்

    தொடையிலிருக்கும் தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும்

    தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து

    கெட்டியாகாமலிருக்கிறது.


    வயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு

    நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற

    கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை

    உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.


    யோகமுத்ரா-

    பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத்

    தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1-

    2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து – முதுகுப்

    பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும்.

    சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.


    வாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி

    கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார்

    48 நாட்கள் சாப்பிடவும்.



    Janani14, premabarani and chitra.k like this.




  7. #67
    Janani14 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    322

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    very useful tips. thanks for posting

    malbha likes this.

  8. #68
    bookslover is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    737

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    Thanks for the useful information

    malbha likes this.

  9. #69
    ravimalar3 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2014
    Location
    tuticorin
    Posts
    132

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    super.....................


  10. #70
    P_Sakthi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    UK
    Posts
    80

    Re: Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

    Malbha,

    Thanks a lot for your information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter