Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறைய&


Discussions on "வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறைய&" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறைய&

    வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறையும்!
    கோவையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து சிறப்பு நிபுணர், சுபத்ரா சுந்தர்:
    இத்தனை வயதிற்கு மேல் முட்டை சாப்பிடக் கூடாது என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முட்டையில், 77 கலோரிகள் உள்ளன; இதில், 6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. புரதமும், அமினோ அமிலமும் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பித்தலுக்கும் முக்கியமான காரணிகள்.முட்டையில், இயற்கையாகவே வைட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் வைட்டமின்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை. முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு, 5 சதவீதம் உள்ளது.எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், 'டி' முட்டையில் உள்ளது. அதேபோல், தோலுக்குத் தேவையான வைட்டமின், 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன. செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணுாட்டச் சத்தும் முட்டையில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், முட்டையை தவிர்க்க கூறப்படும் முக்கிய காரணம், மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும், 90 சதவீதம் உள்ளதால் தான். எனினும், அதனுடன் சேர்த்து நிறைய நுண்ணுாட்டமும் இருக்கிறது. ஒரு மஞ்சள் கருவில்,185 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.இதய நோய், சர்க்கரை நோய் பிரச்னை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின்
    மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம்.கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள், காலைஉணவில், இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், இதைப் பின்பற்றினால் நல்ல பலன் இருக்கும் என்பது, என் சொந்த அனுபவம். தொடர்ந்து எட்டு வாரங்கள், காலை உணவில், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டால், உடல் எடை கணிசமாகக் குறையும். முட்டையை அதிக எண்ணெய், மசாலா சேர்த்து நிறைய விதங்களில் சமைக்கிறோம். முடிந்த அளவு இப்படி செய்வதைத் தவிர்த்து, வேக வைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் அப்படியே உடைத்து ஊற்றி நன்றாக வெந்த பின் சாப்பிடலாம்!

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறை

    Nice sharing sir.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter