ஆப்பிள் ஆரோக்கியம்! ஆப்பிள் வடிவம்?

உங்களால் முடியும் என்ற நம்பிக்கை பிறந்த கணமே, நீங்கள் பாதி தூரம் கடந்துவிட்டீர்கள்!

- தியோடர் ரூஸ்வெல்ட்

(அமெரிக்காவின் 26வது அதிபர்)

முன்னொரு காலத்தில் பாலிவுட் நடிகை என்றால் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கரீனா கபூரின் ஜீரோ சைஸ் பார்த்து அத்தனை பெண்களும் வியந்தார்கள். அதன் பிறகு, ஒவ்வொரு பெண்ணுமே ஸ்லிம் ஆக ஆசைப்படும் சீசன் தொடங்கியது.

ஆனாலும், சொல்லிக்கொள்ளும்படி எடை குறைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. என்ன காரணம்?


ஆணோ, பெண்ணோ - நீங்கள் வழக்கமான அளவு உணவையே சாப்பிட்டாலும், அதே உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் கூட - வயதாக வயதாக ஓரளவு எடை கூடுவது இயல்பே. அதிக எடை அல்லது அதீத எடை அல்லது பருமனாக பலர் காணப்படுவதற்குக் காரணம் - டயட் பற்றி எந்த எண்ணமும் இல்லாது இருப்பதும், உடற்பயிற்சியே செய்யாததும்தான். சுறுசுறுப்பு குறையும்போது, கலோரி செலவாவதும் குறைகிறது. அப்போது உட்கொள்ளும் உணவும் கூடுவதால், எடை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

உணவைக் குறைப்பதால் மட்டுமே எடையை குறைத்துவிட முடியாது. சமச்சீரான டயட் உணவை உட்கொள்ளும் போது, எடை அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதே நேரத்தில் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, எடை குறைந்து இலக்கை எட்ட முடியும். அதன் பிறகும் அப்படியே விட்டுவிட முடியாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி - இவ்விரண்டையும் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே, பருமனிலிருந்து தப்ப முடியும்.

பலர் அவ்வப்போது எடையை குறைத்து, அதைப் பராமரிக்காமல் விட்டுவிட்டு, எடை கூடி, மீண்டும் எடை குறைப்பில் தீவிரமாவார்கள். இப்படி இஷ்டம் போல செயல்படுவதும் கஷ்டத்தையே தரும். வழக்கமான மற்ற செயல்பாடுகள் போலவே, நம் தினசரி செயல்பாடுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சியும் தவறாது இடம்பெற வேண்டும்.

`டயட்டில் இருக்கிறேன்’ என்று சொல்லி பத்தியச் சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் அல்ல இது. ரசித்து ருசித்து உண்ணும் வகையில் இன்று சமச்சீர் உணவுகளிலேயே ஏராளமான சாய்ஸ் உண்டு. விருந்து போல சாப்பிடா விட்டாலும், மருந்து போல சாப்பிட வேண்டியதில்லை... வெரைட்டியாகவே எடுத்துக் கொள்ளலாம். டோன்’ட் வொர்ரி... பி ஹேப்பி!

நீங்கள் ஹெல்த்தி வெயிட்டில் இருந்த போது, நிச்சயமாக மகிழ்ச்சியாக உணர்ந்திருப்பீர்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுவதில், நாள் முழுக்கவே எந்தச் சிரமமும் இருந்திருக்காது. எடை குறைவாக, லேசாக உணர்வதே பறப்பது போன்றதொரு அனுபவம்தானே?எடை குறைப்பு என்பது நீரிழிவாளர்களுக்கு மிக மிக அவசியம். அதிக எடை - குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருப்பது அபாயத்தை ’வா ராசா வா’ என அழைப்பதற்குச் சமம்.

முதலில் உங்கள் இடுப்பைப் பாருங்கள்!அதிக எடை இருப்பது நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது ஏற்கனவே அறிந்ததே... சமீபத்திய ஆராய்ச்சி இதை வேறுவிதமாகச் சொல்கிறது. மொத்தத்தில் எவ்வளவு எடை என்பதை விடவும், அந்த எடைக் கொழுப்பு எந்த இடத்தில் பரவிக் கிடக்கிறது என்பதைப் பொறுத்தே ரிஸ்க் அதிகமாகிறது என்பதே ஆய்வின் முடிவு.

வயிற்றுப்பகுதியில் அதிக எடை இருப்பதை ‘சென்ட்ரல் ஒபிசிட்டி’ என்று சொல்கிறோம். ‘ஆப்பிள் ஷேப்’ என்று குறிப்பிடப்படுவதும் இதுவே. இந்த வடிவத்தில் இருப்பவர்களுக்கே இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு ஆகியவை தாக்கும் அபாயம் அதிகம்.உலக மக்களில் ஆப்பிள் வடிவத்தை அதிகம் பேர் விரும்பி ஏற்றிருப்பது தெற்காசியாவில்தான். குறிப்பாக இந்தியா.

இடுப்பை விட வயிற்றுப்பகுதியில் அதிக சுற்றளவு கொண்டிருப்பது ஆப்பிள் ஷேப்.இதற்கு உல்டாவாக அமைவதே ‘பியர் ஷேப்’ (பேரிக்காய் வடிவம்). இது அடி குறுகி மேல் திரண்டு பம்பரம் போல இருப்பது.

அதாவது, வயிற்றுப்பகுதியை விட இடுப்பில் அதிக சுற்றளவு உண்டாவது. நமது உடலில் விலாவுக்கும் இடுப்புக்கும் இடையில் உள்ள குறுகிய பகுதியின் அளவையே இடையளவு என்கிறோம். ஒருமுறை நன்றாக பெருமூச்சு விட்டுவிட்டு, விலா எலும்பின் கீழ்புறத்தில் தொடங்கி, தொப்புள் வரை இன்ச் டேப் கொண்டு அளவிடுங்கள். இடையளவை எளிதாக அறிந்து விடலாம்.

90 சென்டி மீட்டர் (35 இன்ச்) அளவுக்கு மேல் இடையளவு இருப்பின் ஆண்களுக்கு அபாயம் அங்கே ஆரம்பம். பெண்களுக்கோ அந்த வரையறை இன்னும் குறைவு. அது 80 சென்டிமீட்டர்(31.5 இன்ச்).சரி... ஆப்பிள் வடிவத்தினருக்கு வருவோம். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு இயல்பாகவே குறையும். நீரிழிவு தன் கொடூரப் பணிகளைத் திட்டமிடத் தொடங்கும். இன்சுலின் தடை ஏற்படுவது இதய நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வு முடிவு.

எடையோடு வடிவமும் சேர்ந்து வினையாற்றுவதால், எல்லா விஷயங்களும் தாறுமாறு ஆகின்றன. ஆகவே, இன்றே தொடங்குவோம்!அதிக எடை கொண்டோருக்கு ஒரு நல்ல செய்தியும் உண்டு. 5 முதல் 10 சதவிகிதம் வரை எடை குறைத்தாலே, அது மிக முக்கியமான நல்ல பலன்களை அளிக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்த சர்க்கரையும் குறையும்.

ஓரளவு எடை குறைத்தாலே, ஏற்படக்கூடிய விளைவுகளை இப்பட்டியலில் பாருங்கள்!ரத்த அழுத்தத்தில் நல்ல மாற்றம் நீரிழிவு சார்ந்த பிரச்னைகளால் மரணம் ஏற்படுவது 30 சதவிகிதம் குறைதல்ரத்த சர்க்கரை அளவில் நல்ல மாற்றம் LDL எனும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைதல்
ரத்தத்தில் உள்ள இன்னொரு வகை கெட்ட கொழுப்பான ட்ரை க்ளைசிரைடு குறைதல் HDL எனும் நல்ல கொழுப்புஅதிகரித்தல் நன்றாகவும் சுறுசுறுப்பாகவும் பணிகளை மேற்கொள்ளுதல் தன்னம்பிக்கையும் சுய மதிப்பும் அதிகரித்தல்இயல்பான நல்ல தூக்கம்முதுகுவலி, மூட்டுவலி குறைதல் ஆஞ்சினா எனும் இதயவலி அபாயம் குறைதல்.

5-10 சதவிகித இலக்கை எட்டுவது எப்படி?

மேலே கூறிய எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய 5-10 சதவிகித எடை குறைப்பை, உங்களால் எளிதாக எட்டி விடலாம்.
உதாரணமாக...எடை 80 கிலோ
10 சதவிகிதக் குறைப்பு எனில் 8 கிலோ
5 சதவிகிதக் குறைப்பு எனில் 4 கிலோ

அதிகம் மெனக்கிடாமலே, வாரம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உறுதியாக எடையை குறைக்க முடியும். குறைந்தபட்சம் 8 வாரங்களில் 4 கிலோ இழக்கலாம். இதைவிட வேகமாக எடை குறைக்க ஆசைப்படுவது நியாயமாகாது, நியாயமாரே!ஏனெனில், அதீத கட்டுப்பாட்டோடு அவசர எடை குறைப்பில் ஈடுபடுவோர் மீண்டும் பருமனாகி விடுகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை!

5 முதல் 10 சதவிகிதம் வரை எடை குறைத்தாலே, அது மிக முக்கியமான நல்ல பலன்களை அளிக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்த சர்க்கரையும் குறையும்.

உணவைக் குறைப்பதால் மட்டுமே எடையை குறைத்துவிட முடியாது. சமச்சீரான டயட்
உணவை உட்கொள்ளும் போது, எடை அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதே நேரத்தில் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, எடை குறைந்து இலக்கை எட்ட முடியும்.

ஸ்வீட் டேட்டா

இங்கிலாந்தில் செய்யப்படும் பரிசோதனைகளில் ஒவ்வொரு நாளும் 300 பேருக்கு நீரிழிவு அறியப்படுகிறது. இவர்களில் 60 பேர் (ஐந்தில் ஒரு பங்கு) தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியர்கள்!

குடும்பத்தில் ஏதேனும் ஒருவருக்கு நீரிழிவு இருத்தல்அதிக எடை / பருமன் / இடுப்பு அளவு அதிகமாக இருத்தல் உயர் ரத்த அழுத்தம் / இதய நோய் இருத்தல்தெற்காசிய நாடுகள் நீங்கலாக பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு, இந்த அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருந்தால், 40 வயதுக்கு மேல் நீரிழிவு வரக்கூடும்.

ஆனால், இதே அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ - தெற்காசிய நபருக்குக் காணப்பட்டால், அவர் 40 வயது வரை கூட காத்திருக்க வேண்டியதில்லை. 25 வயதிலேயே நீரிழிவு ஒட்டிக் கொள்ளும்.மரபியல் ரீதியாகவே நாம் டைப் 2 நீரிழிவுக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இது.

அதிகம் மெனக்கிடாமலே, வாரம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உறுதியாக எடையை குறைக்க முடியும். குறைந்தபட்சம்
8 வாரங்களில் 4 கிலோ இழக்கலாம்.


Similar Threads: