Tips for Pressure Cooker Maintenance

நமது சமையலறையில், இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது, Pressure Cooker. அதனை, ஒழுங்காகப் பராமரித்து வந்தால், அது நம் வாழ்வில் ஒரு வரமாகவே இருக்கும். ஆகவே இங்கு, என் அனுபவத்தில், நான் பராமரிக்கும் முறைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

tips for pressure cooker maintenace

Pressure Cooker Maintenance

  1. முதலில், குக்கர் வெயிட், gasket இவற்றை, நன்றாகக் கழுவி விட்டு, வெயிட் போடும் தண்டுப் பகுதியை, ஒரு முறை வாயால் ஊதி விட வேண்டும் – அப்போதுதான் உள்ளுக்குள்ளே ஏதேனும் பண்டம் அடைத்துக் கொண்டு இருந்தால், அது வந்து விடும். இவை, கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டியவை.
  2. குக்கரில் எந்த ஒரு பண்டத்தையும் அப்படியே வைக்காமல், ஒரு பாத்திரத்தில் வைத்து, அதை குக்கரில் வைத்து சமைக்கவும்.இல்லாவிட்டால், தண்ணீர் வெளியேறும்.
  3. மினிமம் ஒரு டம்ளர் தண்ணீராவது அடியில் வைத்து, அதன் மீதே, பாத்திரங்களை வைத்து சமைக்கவும்.
  4. எந்த ஒரு பாத்திரத்தை உள்ளே வைத்தாலும், அவற்றை மூடியே வைக்கவும். இரண்டு, மூன்று பாத்திரங்களை, உள்ளே வைத்தாலும், ஒவ்வொன்றையும் மூடி வைக்கவும். கண்டிப்பாக, குக்கர் மேல் பாகத்தில் உள்ள பாத்திரம், மூடியுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்.
  5. குக்கர் மூடியைத் தொடும் வரை, பாத்திரங்களை வைக்க வேண்டாம்.இதனால், வெடிக்க வாய்ப்பு உண்டு.
  6. காய்கறிகள் வேக வைத்தால், அதிலும் சிறிதளவு தண்ணீர் விட்டே வேக வைக்கவும். சோளம் போன்றவற்றை (முழு) அப்படியே வைத்து விடலாம்.
  7. ஸ்டீம் வந்த பிறகே, வெயிட் போடவும். அதற்கு முன்னர் வெயிட் போடுவது தவறு. தண்டின் உள்ளே, அடைத்து இருந்தால், ஸ்டீம் வராது.
  8. குக்கரின் சைடு வழியே புகை (ஸ்டீம்) வந்தால், gasket மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இப்படிப் புகை வந்தால், சவுண்ட் சரியாக வராது.
  9. வெயிட் போடும் தண்டிற்குப் பக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியே வந்தால், safety valve ஐ மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
  10. ஒருவேளை, உங்களிடம் ஒரே ஒரு குக்கர் மட்டுமே இருந்து, அதை சிறிது நேரத்தில், மீண்டும் உபயோகிக்க வேண்டி இருந்தால், மற்றொரு gasket ஐ உபயோகித்தால், சரியாக வேலை செய்யும், உங்கள் குக்கர்.
  11. தினமும், gasket, வெயிட், குக்கரின் தண்டு பாகம், ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கழுவ வேண்டும்.
  12. குக்கர் பிடிகளில் உள்ள ஸ்க்ரூவை, வாரம் ஒரு முறை tight செய்யவும். அது லூசாக இல்லாவிட்டாலும் செய்யவும்.இதனால், அந்தப் பிடிகள் திடீரென்று உடைந்து விடும் அபாயம் இருக்காது.
  13. Whistle சவுண்ட் சரியாக வராமல், புஸ் புஸ் என்று வந்தால், வெயிட் போடும் தண்டு பாகம், விரிவடைந்து விட்டது, அதனால், அதை மாற்ற வேண்டும் – கூடவே, புதிய வெயிட்டும் வாங்க வேண்டி இருக்கலாம்.
  14. குக்கரின் உள்ளே அடி பாகத்தில், கருப்பாக இருப்பதைத் தவிர்க்க, எலுமிச்சை தோல், புளி போன்றவற்றை, போடுவது, வினிகர் விட்டு கழுவுவது, ஆகியவை,எனக்குப் பிரச்சினையைத் தீர்க்க வில்லை. ஆகவே, வாரம் ஒருமுறை, குக்கரின் உள்ளே, acid விட்டு, கைகளில் படாமல், ஸ்டீல் scrubber கொண்டு, கழுவி விடுவேன்…..இது ஒன்றுதான், எனக்குத் தீர்வாக அமைகிறது.
  15. எந்தப் பண்டம் வேக அதிக நேரம் எடுக்குமோ, அதை அடியில் வைத்து, மற்றவற்றை மேலே வைத்து, வெயிட் போட்ட பிறகு, அடுப்பை சிம்மில் வைத்து செய்தால், எந்த ஒரு பண்டமும், வேகாமல் இருக்காது.
  16. குக்கரின் வெளி அடி பாகம், எப்போதும் தட்டையாக இருக்க வேண்டும். ஒரு வேளை கீழே ஏதாவது போட்டு, கண்ணுக்குத் தெரியாமல், அதனுடைய shape மாறி விட்டாலும், சரியாக whistle சவுண்ட் வராது.
  17. குக்கர் gasket ஐ வேலை முடிந்த பிறகு, குக்கரிலேயே வைத்து விடாமல், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்திலோ, அல்லது ஒரு ஆணியில் தொங்க விட்டோ வைக்க வேண்டும். அப்போதுதான் நீடித்து உழைக்கும்.
  18. பழைய gasket ஆகிவிட்டால், மேலும் சில நாட்களுக்கு, அதை உபயோகிக்கும் முன்னர், கையால், diagonal ஆக இழுத்து விட்டு, உபயோகித்தால், சரியாக இருக்கும். இது மேலும் 1 மாதம் போல, இப்படிச் செய்யலாம்.
  19. ஆகவே, தோழிகளே, அவ்வபோது உங்கள் குக்கரைப் பழுது பார்த்து, வைத்துக் கொண்டால், உங்கள் குக்கர், எப்போதும் வெடிக்காமல்,வேறு அபாயங்கள் எழாமல், பல வருடங்கள் நீடித்து உழைக்கும்.