A Magical Key for Successful Marriage Life

பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவி:

சமீபத்தில், நான் சந்திக்க நேர்ந்த இரு சம்பவங்கள் இவை. என் மனதை மிகவும் வருந்தச் செய்தன. இந்தக் காலத்துப் பெண்கள் சிலர். எப்படிப் பொறுமையின்றி, தன் வாழ்வை நகர்த்துகின்றனர் என்பதை எடுத்துச் சொல்கின்றன. ஆண்களும் விதி விலக்கல்ல.

முதல் சம்பவம்

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக ஊரைக் கூட்டி, நன்றாக நடந்தது. பெண் இந்தியாவிலும், பையன் வெளிநாட்டிலும் இருக்கின்றனர்.

a magical key for successful marriage life1

பையன் 6 மாதம் கழித்துத்தான், இந்தியா வர முடியும் என்பதால், 6 மாதம் கழித்தே திருமண நாளைக் குறித்து, எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

இதற்க்கிடையில், அந்தப் பெண்ணும், பையனும், தினமும் ஃபோனில் பேசிக்கொண்டு, ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளும் விதமாகவும், புதிதாகக் கல்யாணம் செய்யப் போகும் நபர்களுக்கே உரிய விதமாகவும் பேசிக் கொண்டு இருந்தனர்.

கல்யாணத்துக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் சமயத்தில், அந்தப் பெண்,”இந்தப் பையனைத் தனக்குப் பிடிக்கவில்லை” என்று திடீரென்று கல்யாணத்தை நிறுத்தி விட்டாள்.

அந்தப் பையன் செய்த தவறு என்னத் தெரியுமா?

அவ்வளவு நாட்கள் இல்லாமல், சமீபமாக அவனுக்கு அலுவலகத்தில் ப்ரமோஷன் கிடைத்தால், பணிச்சுமை காரணமாக, 2 வாரங்கள் தொடர்ந்து, அந்தப் பெண்ணுடன், ஃபோனில் பேச முடியவில்லை.

உடனே இந்தப் பெண் கோபித்துக்கொண்டு, அவனுக்கு மெயில் அனுப்பி விட்டாள். “கல்யாணத்துக்கு முன்னரே, இப்படி என் மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பதால், உன்னைக் கல்யாணம் செய்ய விரும்பவில்லை” என்று.

பதறித் துடித்த அந்தப் பையன் காரணத்தை விளக்கி, எவ்வளவோ கெஞ்சியும், ஒன்றும் நடக்க வில்லை. கல்யாணம் நின்றே போய்விட்டது.

பெண்ணின் பெற்றோர், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், பையனும், அவன் பெற்றோரும், ஒரு பக்கம், இப்படி ஒரு பெண் தங்கள் வீட்டுக்கு வரவில்லையே என்று சந்தோஷப் பட்டாலும், மனதளவில் கஷ்டமும் படுகின்றனர்.

இதில் இரண்டு பக்கமுமே, நட்பு மற்றும் சுற்றத்தாரின் கேலிப் பார்வைக்கு ஆளாவார்கள் தானே.

இதை ஏன் அந்தப் பெண் நினைத்துப் பார்க்கவில்லை?