How to make your infant sleep?

சிறு குழந்தைகளைத் தூங்க வைக்கும் முறைகளைப் பார்ப்போம்

how to make your infant to sleep

Smart ways to make your infant sleep

1. பிறந்த சில நாட்களுக்கு, குழந்தைகள், உங்கள் அணைப்பையும், நெருக்கத்தையும், அதிகமாகவே வேண்டுவார்கள். இது, அவர்களுக்கு, உங்கள் வயிற்றில் இருந்தபோது கிடைத்த பாதுகாப்பு உணர்வைப் பெற விரும்புவதால்.

2. ஒரு நாளில் 18 மணி நேரம் வரை கூட தூங்குவார்கள்.மாதங்கள் செல்லச் செல்ல, இது குறையும்.

3. முடிந்தவரை, குழந்தைகளை, தூளியில் தூங்க வைப்பதைத் தவிர்க்கவும்.

4. தூளியில் தூங்கினால்தான், குழந்தைக்கு அடக்கமாக இருக்கும், நிம்மதியாகத் தூங்குவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால், படுக்கையில் அப்படியே படுக்க வைத்துப் பழக்கப் படுத்தினால், அப்போதும் நன்றாகவே தூங்குவார்கள்.

5. தூளிப் பழக்கம் பண்ணுவதால், சில கஷ்டங்கள் உண்டு.

a. வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, தூளிதான் வேண்டும் என்று, குழந்தை அடம் செய்யும். சாதாரணமாகத் தூங்காது.

b. Train, bus, போன்றவற்றில் செல்லும்போது, தூளி கட்டுவது சிரமம். பிறர் வீட்டுக்குச் சென்றால், தூளி கட்ட வசதி இல்லாமல் போகலாம்.

c. தூளியில் தூங்கும் குழந்தை, அந்தப் பழக்கத்தை, பல வருடங்களுக்கும் கடைப்பிடிக்கலாம்.

d. மாதங்கள் ஏற ஏற, குழந்தை, அந்தத் தூளியில் இருந்து தானாக, இறங்கி விழுந்துவிட வாய்ப்பு அதிகம்.