அப்பளக் குழம்பு

அப்பளக் குழம்பு

appala kulambu

அப்பளக் குழம்பு – Appala Kuzhambu

தேவையானவை :

  • புளி – எலுமிச்சை அளவு
  • சாம்பார் பொடி – 1 1/4 டீஸ்பூன்
  • உப்பு – 3/4 டீஸ்பூன்
  • கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம்,

தாளிக்க:

  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வர மிளகாய் – 1
  • நமுத்த அப்பளம் – பெரிதாக இருந்தால் 2, சின்னதாக இருந்தால் 4

செய்முறை:

  1. இந்தக் குழம்பு செய்வதற்கு, தான் எதுவும் தேவை இல்லை. அதற்கு பதில்தான், அப்பளம் போடுகிறோம்.
  2. புளியை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும். இல்லை, அப்போதுதான் ஊற வைக்க வேண்டும் என்றால், சுடு நீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைத்தால் போதும்.
  3. ஒரு வாணலியில், நல்லெண்ணையை விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் (கட்டி), இதெல்லாம் போட்டு, வெடிக்க ஆரம்பித்த வுடன், வர மிளகாயைப் போட்டு, அடுப்பைச் சிம்மில் வைத்து, அதில் சாம்பார் பொடியைப் போடவும்.
  4. உடனே சிறிதளவு தண்ணீரை விடவும்.
  5. இப்போது, அடுப்பைப் பெரிதாக வைத்துக் கொள்ளலாம்.
  6. அதில், கரைத்து, வடிகட்டிய, புளித்தண்ணீரை விடவும். உப்பு சேர்க்கவும்.
  7. இதில் மேலும் ஒரு 1 1/2 டம்ளர் தண்ணீரைச் சேர்க்கவும்.
  8. அப்பளம் கிறிஸ்ப்பாக இல்லாமல், ஒரு 2 மணி நேரம் வெளியில் வைத்தால் நமுத்து விடும்.
  9. நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அப்பளங்களை எடுத்து, சிறிய துண்டுகளாக, அதாவது triangle or square, இந்த shape களில் ஓரளவு பெரிய துண்டுகளாக (பொடியாக செய்ய வேண்டாம் )செய்து, அந்தக் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் போடவும்.
  10. இதை கிட்டதட்ட இறக்கும் சமயத்தில் போட்டால் கூட பரவாயில்லை.
  11. குழம்பு கெட்டியாக ஆனவுடன், இறக்கவும்.
  12. இது வித்தியாசமான, தானுடன் கூடிய குழம்பு. அப்பளம் நமுத்துப் போனால், கவலைப் படாமல், இந்தக் குழம்பை செய்து விடலாம்.
  13. உப்பைக் கொஞ்சம் குறைவாகவே போடவும். அப்பளத்தில் உள்ள உப்பை இந்தக் குழம்பு இழுத்துக் கொள்ளும்.