அப்பளக் கூட்டு

அப்பளக் கூட்டு

appala kootu south indian vegetarian recipe

Appala Kootu

தேவையானவை :

  • பயத்தம்பருப்பு – 1/4 கப்
  • அப்பளம் – 5
  • உப்பு – தேவையான அளவு
  • அரைக்க :
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  • வர மிளகாய் – 2
  • தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம் – தாளிக்க

செய்முறை :

  1. பயத்தம்பருப்பை, நல்ல குழைய வேக வைக்கவும் .
  2. சிலர், கடலைபருப்பை உபயோகித்தும், இந்தக் கூட்டு செய்வார்கள். அது வித்தியாசமான வாசனையுடன் இருக்கும். அது பிடிப்பவர்கள், அதை உபயோகித்தும் செய்யலாம் .
  3. அப்பளத்தை, எண்ணையில் பொரித்தும் போடலாம், அல்லது, அப்படியே பச்சையாகவும் போடலாம், எந்த taste உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதைப் பின்பற்றலாம் .
  4. இப்போது, அரைக்கக் கொடுத்துள்ள வற்றை, வெற்று வாணலியில், சிவக்க வறுத்து, மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை வறுக்க வேண்டாம், அப்படியே போட்டு இதனுடன் அரைத்துக் கொள்ளவும்.
  5. இப்போது, பயத்தம்பருப்புடன், அப்பளம், அரைத்த பேஸ்ட், உப்பு (இதைக் கொஞ்சம் குறைவாகவே போடவும், அப்பளத்தில் ஏற்கனவே உப்பு இருக்கும்), இவற்றைச் சேர்த்து, மேலும் ஒரு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்குக் கலக்கி, ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும் .
  6. தாளித்துக் கொட்டி, கருவேப்பிலை, கொத்தமல்லியை, கத்தரிக்கோலால், பொடியாக வெட்டித் தூவவும்.