குணுக்கு – Kunukku

குணுக்கு – இது ஒரு மாலை நேர ஸ்நாக்

தேவையானவை :

  • கடலை பருப்பு – 3/4 கப்
  • துவரம்பருப்பு – 1/2 கப்
  • உளுத்தம்பருப்பு – 1/2 கப்
  • பயத்தம்பருப்பு – 1/2 கப்
  • பச்சரிசி – 1/4 கப்
  • வர மிளகாய் – 5
  • பெரிய வெங்காயம் – 2
  • (விருப்பமிருந்தால் )
  • தேங்காய்துருவல் – 5 டீஸ்பூன்
  • பெருங்காயம்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணை – பொரிக்கத் தேவையான அளவு
  • கொத்தமல்லி, கருவேப்பிலை – கட் செய்தது

kunukku

செய்முறை :

  • இதில், அரிசி, பருப்பு ஆகிவற்றை, 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதிலேயே, பெருங்காயம், வர மிளகாய், இரண்டையும் சேர்த்து ஊற வைக்கவும்.
  • பின்னர், மிக்சியில், நல்ல நைசாக இல்லாமல், கொஞ்சம் ஒன்று இரண்டாக இருக்கும் பதத்தில், அரைத்துக்கொள்ளவும்.
  • அரைக்கும் போது, வெங்காயம், வர மிளகாய், தேங்காய்துருவல் இவற்றை, முதலில் போட்டு, அதன் மீது பருப்பு, அரிசி கலவையைப் போட்டு, உப்பு சேர்த்து, அரைக்கவும். அப்போதுதான், வெங்காயம், மிளகாய், நன்றாக அரைபடும்.
  • அரைத்தக் கலவையில், கட் செய்த கொத்தமல்லி, கருவேப்பிலை, சிறிது காய்ச்சிய எண்ணை (2 ஸ்பூன் ) இவற்றை விடவும்
  • வெங்காயத்தை அரைக்காமலும், அப்படியே துருவியும் போடலாம்.
  • இப்போது அடுப்பில், ஒரு வாணலியில், எண்ணையைக் காய வைத்து, லேசாகப் புகை வந்தவுடன், இந்த அரைத்தக் கலவையை, கையால் கிள்ளிக் கிள்ளி, போடவும்.
  • அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • ஒரு ஈட்டிற்கு, 10 குணுக்கு போல போட்டு எடுக்கலாம். திருப்பி விடவும்.
  • நல்ல கோல்டன் பிரவுன் கலர் வந்த பிறகு, எண்ணையின் சட சடப்பு அடங்கியவுடன் எடுத்து வடிதட்டில் வைக்கவும்.
  • எண்ணை வடிந்த பிறகு, எடுத்து சூடாகப் பரிமாறவும்.
  • இதற்குத் தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி, தக்காளி சாஸ், போன்றவை, நன்றாக இருக்கும்.
  • இதில் பச்சரிசி, அதிகக் கடலைபருப்பு, காய்ச்சிய எண்ணை, ஆகியவை சேர்ப்பது, நல்ல கர கரப்பாக இருப்பதற்கு.
  • இது ஒரு சுவையான, ஹெல்தியான மாலை நேர ஸ்நாக். அனைத்துப் பருப்புகளும் இருப்பது, உடலுக்கு நல்லது.