தம் ஆலு

தம் ஆலு

தம் ஆலூ - Dum Aloo

தம் ஆலூ – Dum Aloo

தேவையானவை :

  • உருளைக்கிழங்கு – ½ கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி (பெரியது) – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கெட்டித்தயிர் – 3 அல்லது 4 டீஸ்பூன்
  • எண்ணை – 10 டீஸ்பூன்
  • (விருப்பமிருந்தால்) ஆம்சூர் பவுடர் – 1 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க :

  • வர மிளகாய் – 4
  • மிளகு, தனியா, சீரகம் – ஒவ்வொன்றும் 2 டீஸ்பூன்
  • பட்டை, ஏலக்காய் – 1

செய்முறை :

  1. பொடிக்க வேண்டியவற்றை, வெற்று வாணலியில், பச்சை வாசனை போக வறுத்துப் பொடிக்கவும்.
  2. உருளைக்கிழங்கை, வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும்.
  3. அதை, ஓரளவு சின்ன square களாகக் கட் செய்து கொள்ளவும்.
  4. இவைகளை, ஒரு கடாயில், எண்ணையை விட்டுப் பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
  5. அந்த எண்ணையிலிருந்து, பாதியை எடுத்து விட்டு, அந்தக் கடாயிலேயே, பொடியாக நறுக்கிய, வெங்காயத்தை, நன்கு வதக்கவும் உப்பு சேர்க்கவும்.
  6. அதில், இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு, மேலும் வதக்கவும்.
  7. மஞ்சள்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
  8. பொடித்து வைத்துள்ளவற்றை இப்போது சேர்க்கவும்.
  9. பொரித்து வைத்துள்ள, உருளைக்கிழங்கை, அதில் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும்.
  10. இப்போது, தயிரைச் சேர்க்கவும்.
  11. தம் ஆலு தயார். இது சப்பாத்திக்கான, சுவையான, சிறந்த சைட்டிஷ்.
  12. இது கிரேவி போல இருக்காது. மேலே உள்ள போட்டோவில், நான் செய்துள்ளது போல இருக்கும்.
  13. கிரேவி போல வேண்டுமானால், தக்காளி வெங்காயத்தை, அரைத்து விட்டு, வதக்கவும்.
  14. தக்காளி விருப்பமில்லாதவர்கள், ஆம்சூர் பவுடர் உபயோகிக்கலாம்.இது வேண்டிய புளிப்புச் சுவையைக் கொடுக்கும்.