தம் ஆலு – Dum Aloo

தேவையானவை :

  • உருளைக்கிழங்கு – ½ கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி (பெரியது ) – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கெட்டித்தயிர் – 3 அல்லது 4 டீஸ்பூன்
  • எண்ணை – 10 டீஸ்பூன்
  • (விருப்பமிருந்தால் ) ஆம்சூர் பவுடர் – 1 டீஸ்பூன்.
  • வறுத்துப் பொடிக்க :
  • வர மிளகாய் – 4
  • மிளகு, தனியா, சீரகம் – ஒவ்வொன்றும் 2 டீஸ்பூன்
  • பட்டை, ஏலக்காய் – 1

செய்முறை :

dum aloo vegetarian recipe

  • பொடிக்க வேண்டியவற்றை, வெற்று வாணலியில், பச்சை வாசனை போக வறுத்துப் பொடிக்கவும்.
  • உருளைக்கிழங்கை, வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும்.
  • அதை, ஓரளவு சின்ன Square-களாகக் கட் செய்து கொள்ளவும்.
  • இவைகளை, ஒரு கடாயில், எண்ணையை விட்டுப் பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
  • அந்த எண்ணையிலிருந்து, பாதியை எடுத்து விட்டு, அந்தக் கடாயிலேயே, பொடியாக நறுக்கிய, வெங்காயத்தை, நன்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
  • அதில், இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு, மேலும் வதக்கவும்.
  • மஞ்சள்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
  • பொடித்து வைத்துள்ளவற்றை இப்போது சேர்க்கவும்.
  • பொரித்து வைத்துள்ள, உருளைக்கிழங்கை, அதில் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும்.
  • இப்போது, தயிரைச் சேர்க்கவும்.
  • தம் ஆலு தயார். இது சப்பாத்திக்கான, சுவையான, சிறந்த சைட்டிஷ்.
  • இது கிரேவி போல இருக்காது. மேலே உள்ள போட்டோவில், நான் செய்துள்ளது போல இருக்கும்.
  • கிரேவி போல வேண்டுமானால், தக்காளி வெங்காயத்தை, அரைத்து விட்டு, வதக்கவும்.
  • தக்காளி விருப்பமில்லாதவர்கள், ஆம்சூர் பவுடர் உபயோகிக்கலாம்.இது வேண்டிய புளிப்புச் சுவையைக் கொடுக்கும் .