Capsicum in Peanut Gravy

தேவையானவை :

  • குடைமிளகாய் – 2 (பெரியது )
  • பச்சைமிளகாய் – 2
  • வேர்கடலை – 4 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி (பெரியது ) – 1
  • கரம்மசாலா தூள் – ½ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணை – 4 டீஸ்பூன்

capsicum in peanut gravy2

செய்முறை :

  1. குடைமிளகாயை மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.அதை மட்டும் சிறிது நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. வேர்கடலையை, ஒரு வெற்று வாணலியில் வறுத்து, அதை மட்டும் மிக்சியில் முதலில் அரைத்துக்கொள்ளவும்.
  3. பின்னர், அதன் மீது, பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில், எண்ணையை விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, அதில் கரம்மசாலா தூளைப் போட்டு, உடனே, இந்த அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டைப் போட்டு, தேவையானால், மேலும் சிறிது எண்ணை விட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  5. இப்போது, வேக வைத்த குடமிளகாயை அந்தத் தண்ணீருடனேயே, வாணலியில் சேர்த்து, உப்பையும் சேர்க்கவும்.தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  6. மேலும் ஒரு 2 நிமிடம் வதக்கி, எல்லாம் ஒன்று போல சேர்ந்த பிறகு, இறக்கி வைத்துப் பரிமாறவும்.
  7. இது சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைடு டிஷ். நான் தோசைக்கும் கூட இதை சைடு டிஷ்ஷாக செய்வேன்.
  8. மேலே உள்ள போட்டோ, நான் இன்று செய்த இந்த டிஷ்.