How to make South Indian Filter Coffee at Home with Filter

சுவையான பில்டர் காபி வீட்டிலேயே செய்வது எப்படி?

சுவையான, ஸ்ட்ராங்கான, பில்ட்டர் காப்பி போடுவதும் ஒரு தனிக் கலைதான்.

how to make tasty filter coffee at home

Filter Coffee

இதற்குத் தேவையான காப்பி பவுடர் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

filter coffee powder

Filter Coffee Powder

  1. காப்பிக் கொட்டையில் பல வகைகள் உண்டு.
  2. பீபெரி காப்பிக் கொட்டை – இதுதான் வாசனை மற்றும் சிறந்த டேஸ்டைக் கொடுக்கும் தரம். ஆனால் இதை மட்டும் உபயோகித்தால், தண்ணீர் டிகாக்ஷன் தான் கிடைக்கும்.
  3. A கொட்டை – இது பீபெரிக்கு அடுத்த தரம். இது காபி டிகாக்ஷனுக்கு வேண்டிய அடர்த்தியைக் கொடுக்கும்.
  4. சிக்கரி பவுடர் சிறிதளவு சேர்த்தால் நல்ல திக்கான காபி கிடைக்கும். அதிகம் சேர்க்கக் கூடாது. உடலுக்குக் கெடுதல்.

ஆகவே, நீங்கள் கடையில் காப்பிப் பொடி வாங்கும்போது, கீழ்கண்ட ratio வில் வாங்கலாம்.

  • பீபெரி – 50 %
  • A கொட்டை – 40 %
  • சிக்கரி – 10 %

காபித்தூள் நல்ல நைஸாக அரைக்கப் பட்டு இருக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம்.

இப்போது பில்ட்டர் டிகாக்ஷன் போடும் முறையைப் பார்க்கலாம்.

  1. முதலில், பில்ட்டர் மேல் பாகத்தை, ஓட்டைகள் உள்ள பக்கத்தை, அடுப்பில் காட்டி, ஒரு சுத்தமான துணியால், அதைத் துடைத்துவிடவும்.
  2. இப்போது, அந்த ஓட்டைகளில் ஏதாவது துகள் அடைத்துக் கொண்டிருந்தால், அவை நீக்கப் பட்டிருக்கும் டிகாக்ஷன் வேகமாக இறங்கும்.
  3. இப்போது, பில்டரை, தயார் செய்து பொருத்தி, அதில் தேவையான காபித்தூளைப் போடவும். மேலே பில்ட்டர் குடையை வைக்கவும்.
  4. அடுப்பில் சுடுநீரைக் கொதிக்க வைத்து, பில்டரில் பாதி அளவு விடவும்.
  5. அது உடனே, பொடியால் இழுத்துக் கொள்ளப் படும்.
  6. பிறகு, மீண்டும், சுடுதண்ணீர் (ஏற்கனவே கொதிக்க வைத்தது) விடவும்.
  7. அரை மணி நேரத்தில், சுவையான டிகாக்ஷன் தயாராகி விடும்.
  8. மொத்தத் டிகாக்ஷனும் இறங்கிய பிறகு, உங்கள் கட்டை விரலைக் கொண்டு, பில்ட்டர் குடையின் மேல் பாகத்தை நன்றாக அழுத்தவும்.
  9. அது அப்படியே, பொடியை அழுத்திக்கொண்டு, உள்ளே புதையும்.
  10. இப்போது, மேலும் சுடுநீர் தயார் செய்து, பில்டரின் பாதி அளவு விடவும். இது மிகவும் மெதுவாக, இறங்கும். ஆனால், இது படு திக்காக இறங்கும்.
  11. இப்போது இரண்டு டிகாக்ஷன்-களும் சேர்ந்து, மிகவும் திக்கான, சுவையான, டிகாக்ஷன் தயார்
  12. ஒருவேளை, உங்களுக்கு, காலையில் அதிகம் சமயமில்லாமல் இருந்தால், முதல் நாள் இரவே, டிகாக்ஷன் தயாரித்து விடலாம்.
  13. இதற்கு பில்டரைத் தயார் செய்து, பொடி போட்டு, குடையை வைத்து, முதலில் சிறிது சுடுநீர் விட்டு, பிறகு, அப்படியே மேலும் நீர் விடாமல், அந்தக் குடையை நன்றாக அழுத்தி விட்டு, முழு பில்டரிலும் தண்ணீர் விடவும்.
  14. இப்படிச் செய்வதால், பொடி கம்மியாகச் செலவாகும். முதல் வகைக்குப் போடுவதை விட, கம்மியாகப் போடலாம். எடுத்த உடனே, நல்ல திக்கான டிகாக்ஷன் கிடைத்துவிடும்.

இப்போது சுவையான பில்டர் காப்பி போடும் முறையைப் பார்க்கலாம்.

  1. எப்போதும், டிகாக்ஷனை சூடு படுத்தக் கூடாது.
  2. ஆகவே, பாலை அடுப்பில் சிம்மில் வைத்து, அது பொங்கும் தருவாயில் ஒரு கரண்டியைக் கொண்டு கலக்கவும். சிறிது நேரம் இப்படிச் செய்தால், நல்ல திக்கான பால் கிடைக்கும். (டைம் இல்லாதவர்கள், அப்படியே பால் காய்ச்சவும்).
  3. பால் கொதிக்கும் நேரத்தில், தேவையான டிகாக்ஷனை, எத்தனை நபர்களுக்கு வேண்டுமோ, அவ்வளவு டம்ளர்களில் விட்டு, அதில் தேவையானோர்க்கு வேண்டிய அளவு சர்க்கரையைப் போட்டு, நன்றாக ஆத்திக் கொள்ளவும்.
  4. அதற்குள் பால் பொங்கி விடும். பின்னர் இதை எடுத்து, தேவையான அளவு, ஒவ்வொரு டம்ளரிலும் விட்டு, நல்ல சூடான, சுவையான, ஸ்ட்ராங்கான, பில்ட்டர் காபியை சுவைக்கவும்.