வினைகளைக் களையும் விக்னேஸ்வரனின் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

ஓம் கம் கணபதயே நம

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

lord-ganesha-wallpapers-ganesh-vinayar-chathurthi (42)

இந்து மக்களின் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். எந்த பூஜையானாலும் சரி, எந்த தொழில் ஆனாலும் சரி, வாழ்வில் நிகழும் எத்தகைய நல்ல காரியங்கள் ஆனாலும் சரி, விக்ன விநாயகரை துதித்தே அனைத்தையும் ஆரம்பிக்கின்றோம். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர். இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் மனதில் பக்தியும் அமைதியும் தோன்றுகிறது.

பிரணவ தத்துவத்தை உணர்த்தும் ஞான வடிவம்- பிள்ளையார்! ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். எவர்க்கும் பிள்ளைக் குணம் கொண்டு, கேட்ட வரம்
தரும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

கடவுள்களில் வணங்குவதற்கு மிகவும் எளிமையானவர். தூய பக்தியோடு நம்பிக்கையோடு எங்கிருந்து எப்படி வழிபட்டாலும் அவரை நினைத்தாலும் நல்லருள் புரியும் நந்தி மகனவன். அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் தூய மனத்தையும் அவர்கள், மனத்தில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் தரும் மூத்தோன். வினைகளைத் தீர்க்கும் விக்னேஷ்வரன்.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு
வழங்கப்படுகின்றன.

Click Here to Download Ganesh Chathurthi Vrat Pooja Procedures, Pooja Songs, Mantras, Slokas & Chathurthi Recipes eBook