ஃபேஸ் யோகா! - Face Yoga

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஃபேஸ் யோகா!

உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து புத்துணர்வாக்கும் யோகா... உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்... ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... சுவாசத்தை சீராக்கும்... இளமையையும் நீடிக்கும்!

யோகாவின் புதிய வரவான ஃபேஸ் யோகா இளம்பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். முகத்துக்குப் பயிற்சி தரும் இந்த யோகா, அழகுக்கும் இளமைக்கும் உத்தரவாதம் தருவதால், நடிகைகள், மாடல்கள் என அழகிகளின் ஆதரவுடன் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.‘‘யோகா என்பது வெறும் பயிற்சி மட்டுமே அல்ல. தன்னைத்தானே உணரும் கலை. யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கோபம் எல்லாமே குறையும்... நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். எடையை எந்தவித செயற்கை விஷயங்களும் இல்லாமல், இயற்கையாகவே கட்டுக்குள் வைக்கலாம். முகம் மற்றும் முகத்தைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தகுந்த பயிற்சிகளை கொடுப்பதன் மூலம், முகத்தைப் பொலிவுடன் காட்டுவதே ஃபேஸ் யோகா.

இதை ஆண்களும் செய்யலாம். முகத்தில் உள்ள கண்கள், உதடுகளுக்கு ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்வதால், கண்களில் உள்ள கருவளையங்கள், சுருக்கங்கள் மறையும். உதடுகளைச் சுற்றியுள்ள தசைகளுக்கு பயிற்சி கிடைப்பதால் உதடுகள் பொலிவாகும். இதில் உள்ள சில பயிற்சிகள் தொண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்தி சுருக்கங்களை மறையச் செய்யும்...’’


- ஃபேஸ் யோகாவின் பயன்கள் குறித்து பேசும் யோகா பயிற்சி நிபுணர் கண்மணி, அதிலுள்ள 14 பயிற்சி நிலைகள் குறித்து விளக்குகிறார்.ஃபேஸ் யோகா பயிற்சிகளை சுத்தமான, காற்றோட்டமான இடத்தில் செய்ய வேண்டும். காலையில் சூரியன் உதித்த பின், மாலையில் சூரியன் மறைவதற்கு முன் என தினம் இருமுறை செய்ய வேண்டும்.

1 வாயை இறுக மூடிக்கொள்ள வேண்டும். மூச்சுக் காற்றை ஒரு கன்னத்தின் பக்கமாக இழுத்து மறு கன்னத்தின் பக்கமாக விட வேண்டும். இதே போல மாறி மாறி செய்ய வேண்டும் (மவுத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பது போல).இதனால் கன்னத்தில் இருக்கும் தேவையில்லாத சதைகள் நீங்கும். முகத்தசைகள் டைட் ஆகும்.


[HR][/HR]
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#2
re: ஃபேஸ் யோகா! - Face Yoga

wow lakshi akka nice info thanks for sharing :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.