அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக&#3021

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...

கற்றாழை கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.


வெந்தயக் கீரை வெந்தயக் கீரை அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு சிறிது வெந்தயக் கீரையை தண்ணீர் சேர்த்து அரைத்து, அதனை அக்குளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை செய்து வந்தால், அக்குள் கருமை நாளடைவில் மறைந்துவிடும்.



எலுமிச்சை எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினைக் கொண்டு, கருமையான அக்குளை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அக்குள் கருமை மறையும். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சையை பயன்படுத்தக்கூடாது. இதனால் எரிச்சல் ஏற்படுவதோடு, சருமம் மேலும் பாதிக்கப்படும்.




கற்றாழை கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

ரோஸ் ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அக்குளில் அரைத்து தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக&a

மஞ்சள் மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவேமஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறைசென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது



அதிமதுரம் அதிமதுர வேரை தண்ணீர் சேர்த்து தேய்த்து, அதனை கருமையாக இருக்கும்அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்யவேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்






வேப்பிலை சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒருசிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும்உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலரவைத்து கழுவ வேண்டும்




பட்டை பட்டை ஒரு அருமையான நறுமணம் தரும் பொருள். அத்தகைய பட்டையை பொடி செய்து, அதில் பால் சேர்த்துபேஸ்ட் போல் கலந்து, அதனை அக்குளில் தடவி, நன்கு காய வைத்து, பின் ஈரமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அக்குள் கருமைபோய்விடும்.

 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக&a

thagavaluku nandri.
 

sasee777

Friends's of Penmai
Joined
Aug 30, 2011
Messages
339
Likes
309
Location
madurai
#4
Re: அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக&a

hi very useful tips thankyou.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.