அக்ஷய திரிதியை - Akshaya Tritiya

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
‘அக்ஷய திரிதியை’ என்பது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.


வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. "தொட்டதெல்லாம் துலங்கும்" என்று அனைவரும் போற்றும் உன்னத நாள். அக்ஷய திரிதியை அன்று தொடங்கும் வீடு வாங்கும் பணி, விவாகப் பணிகள் செவ்வனே தங்கு தடையின்றி முடியும் என்பது ஐதீகம். தங்கக்கடைகளில் அன்று கூட்டம் அலைமோதும்.

ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் உண்மையில் அக்ஷய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.

அக்ஷய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, வெள்ளி, கல்லுப்பு ஆகியவைதான்.

‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது.

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக அக்ஷய திரிதியை குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நாளில் தான் வேத வியாசரும், விநாயகரும் இணைந்து மகாபாரதம் எழுத ஆரம்பித்தனர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஹிந்துக்களும், ஜைனர்களும் இதை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.

குபேர பூஜை, லஷ்மி பூஜை, கோபூஜை ஆகியவை அவரவர் வசதிக்கு ஏற்ப மேற்கொள்ளப் படுகிறது.

ஹிந்து புராணங்களின் படி இந்த நாளில் தான் திரேதாயுகம் பிறந்தது என்ற குறிப்பும் உண்டு. புனித நதியான கங்கை பூலோகம் வந்த நாளாகவும் கருதப்படுகிறது.

சிவனுடைய அருளால் குபேரன் செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட நாள் ஆகும்.

குசேலர் கிருஷ்ண பகவானுக்கு அவல் கொடுத்த தினமாகவும் கருதப்படுகிறது.

ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனிகளை வரவழைக்க கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய புனித நாள்.

ஒரிசா பூரி ரத யாத்திரை தேர்களுக்கான கட்டுமானப் பணி அக்ஷய திதி அன்று தொடங்கப்படுகிறது.

இந்நன்னாளில் தான தருமங்கள் செய்யும் பழக்கமும் சில மாநிலங்களில் உள்ளது. உபவாசம் இருப்பது, துளசி தீர்த்தம் வீடெங்கும் தெளிப்பது போன்ற பழக்கங்களும் ஆங்காங்கே உண்டு. வங்காளத்தில் அக்ஷய திரிதியைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதும், புதிய கணக்குத் துவங்குவதும் கூட உண்டு.

லஷ்மியையும், குபேரனையும், இவர்கள் இருவருக்கும் அதிபதியான ஸ்ரீமன் நாராயணரையும் சேர்த்து வணங்க வேண்டிய நன்னாள். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் பொன்னாள்.

வழிபடும் முறை:

அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine April 2015. You Can download & Read the magazines HERE.


 

Attachments

Last edited:

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,045
Location
Theni
#6
Suma akka nice update..intha histroy'ye ipa tha enaku therithu.gold tha vanganum'nugra mentality ah change panirukenga..super..
 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,045
Location
Theni
#8
Athelam karthi nenga ponale therinjurum avengaluku sapadu poda vendiya time ethunu..
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#9
இந்த வெய்யலுக்கு "ததியோன்னம்" தான் தருவார்கள். Best.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,432
Likes
148,234
Location
Madurai
#10
Hahaha.. Naan Ponaale Antha Iyer Uncle Solliduvaar Eppo nnu.. ;)

Athelam karthi nenga ponale therinjurum avengaluku sapadu poda vendiya time ethunu..
Enna Uncle Athu..?? Baanam Polava..??

இந்த வெய்யலுக்கு "ததியோன்னம்" தான் தருவார்கள். Best.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.