அசைவப் பிரியர்களே... அசத்துங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அசைவப் பிரியர்களே... அசத்துங்கள்

ஒமேகா 3 கேள்விப்பட்டிருப்பீர்கள். மீன் எண்ணெயில் இருப்பது அதுதான். மீனில் காணப்படும் இந்த ஒமேகா 3 ஏகப்பட்ட நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு. நல்ல எண்ணெய்ப்பசையுல்ல மீன்கலென்று சொல்வோமே அவற்றைச் சாப்பிட்டால் இந்த ஒமேகா 3 நமக்கு தாராளமாகக் கிடைத்து விடும்.

“டிஸ்” என முடியும் நோய்களுக்கு ஒமேகா 3
முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும். உடலில் எரிச்சல்,சிவப்பாவது,ரொம்ப சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்சினைகளெல்லாம் காணாமல் போய்விடும்.

ஆர்திரிடிஸ்,புரோஸ்டாடிடிஸ்,சிஸ்டிடிஸ் என ஏகப்பட்ட “டிஸ்” என முடியும் நோய்களுக்கு ஒமேகா 3 ரொம்ப ரொம்ப நல்லது.அந்த நோய்களுடைய தீவிரத்தைக் குறைத்து விடும்.


கொலஸ்ட்ரால் ;

இதயத்துக்கு ரொம்ப நல்லது. இதயம் நல்லா இருக்கணும்ன்னா முக்கியமான தேவை கொலஸ்ட்ரால் குறையறது தான். கொழுப்புல நல்ல கொலஸ்ட்ரால்,கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகை உண்டு. கெட்ட கொழுப்பு இதயத்தை பஞ்சராக்கிச் சட்டென ஒரு மாரடைப்பைத் தந்து ஆலை அவுட்டாக்கிவிடும். நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்குத் தேவை.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ன செய்யும் தெரியுமா? உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து ஒரே மீன்ல இரண்டு மாங்கா எனும் பணியைச் செய்து விடும். இதனால் பிரஷர்,அது இது என எந்த சமாச்சாரமும் இல்லாம இதயம் கொஞ்சம் வலுவாக இருக்கும். இதையெல்லாம் சொல்றது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனான ஏ.ஹைச்.ஏ என்பது சிறப்புத் தகவல்.

பிளட் கிளாட் ;
வலிப்பு, மாரடைப்பு இந்த இரண்டு நோய்களிருந்தும் ஓரளவு மக்களைக் காப்பாற்ற மீனால் முடியும். பொதுவா மூளையில் பிளட் கிளாட் இருந்தால் வலிப்பு வரும். இரத்தக் குழாயில் இருந்தால் ஹார்ட் அட்டாக் வரும். ஆக இந்த இரண்டு நோய்க்குமே காரணமாய் இருப்பது இந்த கிளாட் தான். அடைப்பு!. இந்த அடைப்பை உடைக்க இந்த ஒமேகா3க்கு சக்தி உண்டு. அதனால் தான் கிளாட் வராமல் தடுத்து இதயத்தையும் மூளையும் இது காப்பாற்றிவிடுகிறது.

அறிவு வளர்ச்சிக்கு மீன் ரொம்ப நல்லது. குறிப்பாகச் சின்ன வயது குழந்தைகளுக்கு மீனை அடிக்கடி கொடுத்தால் அவர்களுடைய அறிவு விருத்தியடையும். தாய்மைக் காலத்துல இருக்கிற பெண்கள் நிச்சயம் ஒமேகா 3 சாப்பிடச் சொல்றதுக்குக் காரணம் இதுதான். அவர்கள் சாப்பிடும் ஒமேகா 3 குழந்தைகளுக்கு போய்ச் சேரும். அது அவர்களுடைய அறிவைச் சார்ப்பாக்கும்.

ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் ;

omega 3சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி போன்ற குளிர் நீர் எண்ணெய் மீன்களே EPA மற்றும் DHA ஆகியவற்றின் மிகவும் பரவலாகக் கிடைக்கும் மூலங்களாகும். இந்த வகை மீன்களிலிருந்து பெறும் மீன் எண்ணெய்கள் n −3 மற்றும் n −6 ஆகியவற்றிலுள்ளது போல சுமார் ஏழு மடங்கு சக்தியைப் பெற்றுள்ளன.

சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது

என்ன இன்று வீட்டில் மீன் குழம்புதானே? ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதானே.

எச்சரிக்கை:

மீனுடன் தயிறோ அல்லது கீரைவகைகளோ சேர்க்காதீர்கள்... செரிமானப்பிரச்சனை மட்டுமின்றி பல தோல் நோய்கள் வரக்காரணமாகிவிடும்.


 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.